என் மலர்

  நீங்கள் தேடியது "Ramvir upadhyai"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ராம்வீர் உபாத்யாய் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார்.
  லக்னோ:

  உத்தரபிரதேசம் மாநிலத்தின் சிகந்த்ரா ராவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவருமான ராம்வீர் உபாத்யாய் மீது கட்சி தலைமையிடத்தில், கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி குற்றம் சாட்டப்பட்டது.

  இந்த புகாரின் அடிப்படையில் ராம்வீர் இன்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் பொது செயலாளர் மேவலால் கவுதம் கூறுகையில், ‘மாநில சட்ட மன்றத்தில் கட்சியின் தலைமை கொறடா பொறுப்பில் இருந்து ராம்வீர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

  ஆக்ரா, பாதேக்பூர் சிக்ரி, அலிகிராக் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தின்போது கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட்டுள்ளார். இதனால் உடனடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.   
  ×