search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajyasabha election"

    • அரியானா மாநிலத்தின் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.
    • சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு பாஜக, ஜனாயக் ஜனதா கட்சிகள் ஆதரவளித்தன.

    சண்டிகர்:

    அரியானாவில் மாநிலங்களவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய் அக்கட்சியின் வேட்பாளர் அஜய் மாக்கானுக்கு வாக்களிக்காமல் சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு வாக்களித்தார். கார்த்திகேய சர்மாவுக்கு பா.ஜ.க, ஜனாயக் ஜனதா கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

    அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற 31 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய நிலையில், குல்தீப் பிஷ்னோய் மாற்றி வாக்களித்துள்ளார். மற்றொருவரது வாக்கு ரத்து செய்யப்பட்டது. இதனால் அரியானாவில் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.

    இந்நிலையில், அரியானாவில் கட்சி மாறி வாக்களித்த குல்தீப் பிஷ்னோயை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

    இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் பதவி உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குல்தீப் பிஷ்னோய் நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
    • மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    புதுடெல்லி :

    மாநிலங்களவையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு 10-ந்தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

    தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

    ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 7 மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிரத்தில் 6 இடங்களுக்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் பா.ஜனதாவுக்கு 2 இடம் கிடைப்பது உறுதியாகும்.
    • கர்நாடகாவில் 4 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 6 பேர் போட்டியிடுகிறார்கள்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஜார்க்கண்ட், அரியானா, சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து 41 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

    மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 16 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது.

    மகாராஷ்டிரத்தில் 6 இடங்களுக்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் பா.ஜனதாவுக்கு 2 இடம் கிடைப்பது உறுதியாகும். ஆனால் 6-வது இடத்தை பெறுவதில் சிக்கல் உள்ளது. பா.ஜனதா 3 பேரையும், சிவசேனா 2 பேரையும் நிறுத்தி உள்ளது. இதனால் ஒரு இடத்துக்கு போட்டி நிலவுகிறது.

    கர்நாடகாவில் 4 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 6 பேர் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதா-3, காங்கிரஸ்-2, மதசார்பற்ற ஜனதா தளம் ஒருவர் என களத்தில் உள்ளனர்.

    ராஜஸ்தானில் 4 இடங்களுக்கான ஓட்டுப்பதிவில் காங்கிரஸ் 3 வேட்பாளர்களும், பா.ஜனதா ஒரு வேட்பாளரும், பா.ஜனதா ஆதரவுடன் சுயேட்சையாக சுபாஷ் சந்திராவும் போட்டியில் உள்ளனர்.

    அரியானாவில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு 3 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. பா.ஜனதா ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு சந்தேகமாகி உள்ளது.

    4 மாநில மேல்சபை தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு போடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சியும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

    இதற்கிடையே பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    மாநிலங்களவைக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 16 இடங்களுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
    புதுடெல்லி:

    மாநிலங்களவைக்கு விரைவில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பா.ஜ.க, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நடந்தது

    இதற்கிடையே, வேட்பு மனுக்கள் பரிசீலனை முடித்து, திரும்ப பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

    இந்நிலையில், 41 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜ.க.வுக்கு 14 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தலா 4 இடங்கள், தி.மு.க., பிஜூ ஜனதாதளம் கட்சிகள் தலா 3 உறுப்பினர்கள், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, அ.தி.மு.க. கட்சிகள் தலா 2 எம்.பி.க்களைப் பெற்றுள்ளன.

    மேலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக்தளம் கட்சிகள் தலா ஓரிடத்தையும், சுயேட்சை ஒருவரும் வென்றுள்ளனர்.

    வெற்றி பெற்றவர்களில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கபில் சிபல், லாலு பிரசாத் மகள் மிசா பாரதி, பா.ஜ.க.வின் சுமித்ரா வால்மிகி, கவிதா பதிதார் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.
    ஒரு வேட்பாளருக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாவிட்டால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படும் என்ற அடிப்படையில் 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
    சென்னை:

    டெல்லி மேல்-சபையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜஷே்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவ நீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற 29-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இதையடுத்து 6 டெல்லி மேல்-சபை எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இந்த பதவிக்கு போட்டியிடுபவர்கள் கடந்த 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    டெல்லி மேல்-சபை எம்.பி.க்களை அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்கள்தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.

    தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் தி.மு.க. வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

    இதில் தி.மு.க. 3 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்து 1 இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியது.

    இதன்படி தி.மு.க. வேட்பாளர்களாக சு.கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் கடந்த 25-ந்தேதி சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இது தவிர 7 சுயேச்சை வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது.

    இதில் தி.மு.க. , அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

    ஒரு வேட்பாளருக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாவிட்டால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படும் என்ற அடிப்படையில் 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    வருகிற 3-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதில் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் வாபஸ் பெற வாய்ப்பு இல்லை என்பதால் வருகிற 3-ந்தேதி மாலை இறுதியாக களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும்.

    6 எம்.பி.க்கள் பதவிக்கு கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் (தி.மு.க.), ப.சிதம்பரம் (காங்கிரஸ்), சி.வி.சண்முகம், தர்மர் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேர் மட்டுமே கட்சி சார்பில் களத்தில் நிற்பதால் இந்த 6 பேரும் வெற்றி பெற்றதாக 3-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.
    காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார். அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் அனைவருமே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.
    சென்னை:

    தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 57 மேல்சபை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    மேல்சபை எம்.பி. பதவிக்கான தேர்தல் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது.

    நாளை (1-ந்தேதி) மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 3-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தற்போது 6 மேல்சபை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து காலியாகும் 6 மேல்சபை எம்.பி. பதவிகளுக்கு, எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க.வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 2 இடங்களும் கிடைக்கும். அதில் 3 இடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது. ஒரு இடத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. 2 இடங்களில் போட்டியிடுகிறது.

    தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிடும் எஸ்.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஆர்.கிரிராஜன் ஆகியோர் கடந்த 27-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் நேற்று மனுதாக்கல் செய்துள்ளனர்.

    காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார். அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் அனைவருமே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.

    மேலும் சுயேட்சை வேட்பாளர்களாக பத்மராஜன், அக்னி, ஸ்ரீராமச்சந்திரன், மன்மதன், வேல்முருகன், சோழகனார், தேவராஜன் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்துள்ள நிலையில் நாளை காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. ஒரு வேட்பாளருக்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். அத்துடன் வேட்புமனு தாக்கலின்போது 10 எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிவு கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது முன்மொழிவு கடிதம் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். அதன் அடிப்படையில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் எஸ்.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், ஆர்.கிரிராஜன், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    வேறு தகுதியான வேட்பு மனுக்கள் வராதபட்சத்தில் தேர்தல் நடைபெறாது. இதுதொடர்பான இறுதி அறிவிப்பு வருகிற 3-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    தி.மு.க. வேட்பாளர் கிரிராஜன் பெயரில் ரூ.1.53 கோடி மதிப்பு அசையும் சொத்துக்கள், ரூ.5.12 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள் உள்ளது.
    சென்னை:

    தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வருமாறு:-

    திமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களுடன் அளித்த பிரமாண பத்திரத்தில், அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை அளித்து உள்ளனர்.

    தஞ்சையைச் சேர்ந்த எஸ்.கல்யாணசுந்தரத்தின் பெயரில் ரூ.43.46 லட்சம் மதிப்பு அசையும் சொத்துக்கள். அவரது இரு மனைவிகள் பெயரில், 113 சவரன் தங்கம், வைர நகைகள் உட்பட ரூ.67.76 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள். கல்யாண சுந்தரம் பெயரில் ரூ.3.46 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள், மனைவிகள் பெயரில் ரூ. 1.39 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளதாகவும், கல்யாண சுந்தரம் பெயரில் ரூ.4.53 லட்சம், மனைவிகள் பெயரில் ரூ. 20.76 லட்சம் கடன் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில்  கூறப்பட்டு உள்ளது.

    தி.மு.க. வேட்பாளர் கிரிராஜன் பெயரில் ரூ.1.53 கோடி மதிப்பு அசையும் சொத்துக்கள், ரூ.5.12 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள். மனைவி பெயரில் ரூ.1.04 கோடி மதிப்பு அசையும் சொத்துக்கள், ரூ.39.47 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்கள் உள்ளன.

    கிரிராஜன் பெயரில் ரூ.3.17 கோடி மதிப்பு கடன், மனைவி பெயரில் ரூ.2.87 கோடி மதிப்பு கடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பெயரில் ரூ.17.15 லட்சம் அசையும் சொத்துக்கள், ரூ.78.08 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்கள். மனைவி பெயரில் ரூ.27.07 லட்சம் அசையும் சொத்துக்கள், ரூ.47.40 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் பெயரில் 32 கிராம் தங்கம், 3.25 கேரட் வைரம் உட்பட ரூ.135 கோடி அசையும் சொத்து உள்ளது என்றும் பரம்பரை சொத்து உட்பட ரூ.5.83 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள். ரூ.76.46 லட்சம் கடன் உள்ளது.

    ப.சிதம்பரத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.140.83 கோடியாகும். அவரது மனைவி பெயரில் 1457 கிராம் தங்கம், 76.71 கேரட் வைரம் உட்பட ரூ.17.39 கோடி அசையும் சொத்து, ரூ.26.53 கோடி மதிப்பு அசையா சொத்து, ரூ.5 கோடி கடன் ஆகியவை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுதவிர, பிரிக்கப்படாத குடும்ப சொத்து அடிப்படையில் ரூ.4.59 லட்சம் அசையும் சொத்து, ரூ.12.21 கோடி அசையா சொத்து, ரூ.74.34 லட்சம் மதிப்பு கடன் ஆகியவை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ள சி.வி.சண்முகம் பெயரில், ரூ.8.76 லட்சம் மதிப்பு அசையும் சொத்து, ரூ.18.45 லட்சம் மதிப்பு அசையா சொத்து, மனைவி பெயரில் ரூ.27.22 லட்சம் மதிப்பு அசையும் சொத்து, ரூ.2.10 கோடி மதிப்பில் அசையா சொத்து, தாயார் பெயரில் ரூ.61.84 லட்சம் மதிப்பு அசையும் சொத்து ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. வேட்பாளராக மனுதாக்கல் செய்து உள்ள தர்மர் பெயரில், ரூ.14.49 லட்சம் மதிப்பு அசையும் சொத்து, ரூ.62.37 லட்சம் மதிப்பு அசையா சொத்து, மனைவி பெயரில் ரூ.17.09 லட்சம் மதிப்பு அசையா சொத்து, மகள்கள் பெயரில் ரூ.36.05 லட்சம் அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


    மேல்சபை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
    சென்னை:

    மேல்சபை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    வேட்பாளர்கள் இருவரும் இன்று காலையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    காலை 10 மணியளவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வந்தனர். தலைமைக்கழகத்தில் சிறிது நேரம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    பின்னர் அனைவரும் கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்கள். அங்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் சி.வி.சண்முகமும், தர்மரும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

    நிகழ்ச்சியில் கட்சியின் மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் பலர் பங்கேற்றனர்.
    மாநிலங்களவைத் தேர்தல் வெற்றி தொடர்பாக அகமது படேல் தாக்கல் செய்த மனு மீது மறுபரிசீலனை செய்யும்படி விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும்படி குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. #RajyaSabhaElection #AhmedPatel
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் பல்வந்த்சிங் ராஜ்புத் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலில் அகமது படேலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்ததால் நீதிமன்றத்தை நாடினார்.

    காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் இரண்டு பேர் கட்சி மாறி ஓட்டு போட்டதால் அவர்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதனால் அகமது படேல் வெற்றி பெற்றதாகவும், அந்த வாக்குகளை கணக்கில் சேர்த்திருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்றும் ராஜ்புத் தனது மனுவில் கூறியிருந்தார். எம்எல்ஏக்களுக்கு அகமது படேல் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.


    அதன்பின்னர் ராஜ்புத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அகமது படேலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அகமது படேல் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

    இந்நிலையில் அகமது படேல் வழக்கில் இன்று பிற்பகல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, அகமது படேல் மனு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யுமாறு கூறினர். எனவே, அகமது படேல் மனு மீது குஜராத் உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #RajyaSabhaElection #SupremeCourt #AhmedPatel #GujaratHighCourt
    ×