search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajalakshmi College"

    • கூட்டத்தில் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்புக்கூட்டம் ராஜலெட்சுமி கல்விக்குழுமங்களின் தலைவர் ஆறுமுகநயினார் தலைமையில் நடைபெற்றது.

    ராஜலெட்சுமி கல்விக்குழுமங்களின் செயலாளர் ஆறுமுகம் கிருஷ்ணகுமார் அனைவரையும் வரவேற்றார்.

    கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜதுரை, ராஜலெட்சுமி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சண்முகநாராயணன், அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் விஜயலெட்சுமி போதைப்பொருள் தடுப்பு குறித்தும், தீமை குறித்தும் அறிவுரை வழங்கினார்கள். மேலும் மாணவர்கள் கல்வி கற்கும் காலங்களில் முனைப்புடன் கவனம் செலுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும் எனவும் குடும்ப உறுப்பினரோ, நண்பர்களோ யாரும் போதைப் பொருட்கள் பயன்படுத்தாதபடி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. போதைப் பொருள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ராஜலெட்சுமி கல்விக் குழுமத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கல்லூரியின் முதல்வர்கள், அனைத்து துறைகளின் தலைவர்கள், பேராசிரியப் பெருமக்கள், மாணவ- மாணவிகள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். வணிகவியல் துறைத் தலைவர் பின்னி கிறிஸ்துதாஸ் நன்றி கூறினார்.

    ×