search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puthiyamputhur"

    • தெருவிளக்குகள் எரியாததால் இரவில் கிராமமே இருளில் மூழ்கி கிடக்கிறது.
    • சுவிட்ச் கோளாறு,மின் இணைப்பில் பிரச்சினை இருந்தால் அதை மின்வாரியமே சரி செய்ய வேண்டும்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அருகே உள்ள ஜம்புலிங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த மேல வீரபாண்டியபுரம் கிராமத்தில் 30 தெரு மின்விளக்குகள் உள்ளன. இந்த தெரு மின்விளக்குகள் கடந்த 20 நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் கிராமமே இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த ஊரைசுற்றி விவசாய தோட்டங்கள் இருப்பதால் பாம்பு போன்ற விஷ சந்துகளால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. தெரு விளக்கு பராமரிப்பு பணியை ஊராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. தெரு விளக்கு சுவிட்ச் கோளாறு மற்றும் மின் இணைப்பில் பிரச்சினை இருந்தால் அதை மின்வாரியமே சரி செய்ய வேண்டும். ஜம்புலிங்கபுரம் மன்ற தலைவி செல்வராணி தெரு விளக்கு எரியாதது குறித்தும், அதை சரி செய்ய புதியம்புத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தெரிவிதும் மின் இணைப்பு கோளாறு சரி செய்யப்படவில்லை.

    மற்ற பணிகளை விட மின்விளக்கு எரிய வைப்பது மின்வாரியம் முக்கியத்துவம் கொடுத்து மின் இணைப்பு பழுதை சரி செய்து மேலவீரபாண்டியபுரம் கிராமத்தில் எரியாமல் இருக்கும்30 தெரு விளக்குகளையும் எரிய வைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேற்று இரவு 8.30 மணிக்கு பெரியபுராணத்தில் அற்புதங்கள் என்ற தலைப்பில் பொன்சங்கர் சொற்பொழிவு நடைபெற்றது.
    • நாளை (புதன்கிழமை) இரவு 9 மணிக்கு 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கோவில் கலையரங்கத்தில் நடைபெறுகிறது.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோவில் ஆனித்திருவிழா நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. அன்று இரவு ஆலடி முத்துச்செல்வன் குழுவினரின் நவீன வில்லிசை நடைபெற்றது.

    பக்தர்களுக்கு அன்னதானம்

    நேற்று இரவு 7.30 மணிக்கு அம்மன்களுக்கும், சுவாமிகளுக்கும் மாக்காப்பு சாத்துதல், 8.30 மணிக்கு பெரியபுராணத்தில் அற்புதங்கள் என்ற தலைப்பில் பொன்சங்கர் சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் சார்பில் நவீன வில்லிசை நடந்தது.

    இன்று காலை 7.30, பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதான குழுவினர்கள் சா ர்பில் பா. சிவந்தி ஆதித்தனார் திருமண மணடபத்தில் அன்னதானம் நடைபெற்றது. 10.30 மணிக்கு பால்குடம் எடுத்து நகர்வலம் வருதல் நடைபெற்றது.

    மாணவருக்கு பரிசுகள்

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு உறவின் முறை நந்தனவனத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து சாமிகளுடன் கோவில் மேளம், நகர்வலம் சுற்றி கோவில் சேர்தல், இரவு 8 மணிக்கு சாமிகளுக்கும், அம்மன்களுக்கும் கும்பம் ஏற்றுதல், 8.30 மணிக்கு நையாண்டி மேளம், கரகாட்டம், 9 மணிக்கு சாமிகளுக்கும், அம்மன்களுக்கும் மாலை சாத்துதல், 10 மணிக்கு மாவிளக்கு எடுத்து நகர்வலம் வருதல், 12 மணிக்கு சாமக்கொைட தீபாராதனை நடைபெறுகிறது.

    நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பொங்கலிடுதல், 10.30 மணிக்கு வில்லிசை, மாலை 3.30 மணிக்கு தீபாராதனை மற்றும் இரவு 9 மணிக்கு 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கோவில் கலையரங்கத்தில் நடைபெறுகிறது.

    அதன்படி பிளஸ்-2, பத்தாம் வகுப்பில் முதல் 3 இடங்களை பெற்ற உறவின்முறை 6 மாணவ - மாணவிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு 8 கிராம் தங்கம், 2-ம் இடம் பெற்றவர்களுக்கு 4 கிராம் தங்கம், 3-ம் இடம் பெற்றவர்களுக்கு 2 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

    தொடர்ந்து இந்து நாடார் இளைஞர் குழுவினர் வழங்கும் 43-ம் ஆண்டு கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆனி திருவிழாவை முன்னிட்டு ஊர் முழுவதும் மின் விளக்கு களால் அலங்க ரிக்கப்பட்டுள்ளது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறக்காவலர் குழு தலைவர் புதுராஜா நாடார், செயலாளர் ராஜா நாடார், பொருளாளர் தருமராஜ் நாடார், துணைத்தலைவர் தங்கராஜ் நாடார், துணைச் செயலாளர் சவுந்திரபாண்டி நாடார், செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், ஆறுமுகச்சாமி நாடார், பொன்ராஜ் நாடார், செல்வக்குமார் நாடார் ஆகியோர் செய்து வருகின்றனர். 

    • பொதுபாதையின் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • இதனால் ஆத்திரமடைந்த 25 பெண்கள் நேற்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர்-ஓட்டப்பிடாரம் ரோட்டில் சோனியா நகர் தெருவில் பொது பாதையை தனிநபர் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தத் தெருவின் மேல் பகுதியில் உள்ளவர்கள் வேறு பாதையில் சுற்றி வந்து தங்கள் வீடுகளுக்கு சென்று வந்தனர். அடைக்கப்பட்ட பொது பாதையின் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே ஆத்திரமடைந்த 25 பெண்கள் நேற்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். பாதை ஆக்கிரமிப்பு சம்பந்தப்பட்ட மனுவை தாலுகா அலுவலகத்தில் கொடுத்தனர். இதனை அடுத்து தாசில்தார் பொறுப்பு, பிரபு போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அடைக்கப்பட்ட பாதை நிலவியல் பாதை என்பதை அறிந்து பாதையை அகற்ற உத்தரவிட்டார்

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் சிவபாலன் சம்பந்தப் பட்டவர்களிடம் பேசி அடைக்கப்பட்ட பாதை அகற்றப்பட்டது. இப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செய லாளர் தட்சிணா மூர்த்தி தலைமையில் நடந்தது. பேச்சு வார்த்தை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
    • நடுவக்குறிச்சியில் இருந்து மேலமடம் இசக்கி அம்மன் கோவில் வரை பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் புதியம்புத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

    போக்குவரத்து நெருக்கடி

    புதியம்புத்தூருக்கு மேற்கே உள்ள 60 கிராம மக்களும் தூத்துக்குடிக்கு இந்த ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். மதுரை 4 வழிச்சாலையில் தூத்துக்குடி வரும் லாரிகள் டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக குறுக்கு சாலையில் இருந்து ஓட்டப் பிடாரம் வழியாக இந்த ரோட்டில் தான் தூத்துக்குடி செல்கின்றன. மேலும் சிலர் ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் எந்த நேரமும் மெயின் ரோட்டில் போக்குவரத்து ஏற்படுகிறது.

    காலை, மாலை நேரங்களில் மேலமடம்சந்திப்பில் இருந்து நடுவக்குறிச்சி வரை உள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு மேலாகிறது. எனவே மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சில மின்கம்பங்களை ரோட்டின் ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

    புறவழிச்சாலை

    போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஊருக்கு வடபுறம் புறவழிச்சாலை அமைப்பதை தவிர வேறு வழி இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து இந்த பைபாஸ் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் நடுவக்குறிச்சியில் இருந்து மேலமடம் இசக்கி அம்மன் கோவில் வரை உள்ள 80 அடி ஓடையில் மண் நிரப்பி பைபாஸ் ரோடு அமைத்து புதியம்புத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் மெயின் ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் கடைகள் உள்ளன.
    • போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் மெயின் ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் கடைகள் உள்ளன.

    போக்குவரத்து நெருக்கடி

    ஏற்கனவே அகலம் குறைவாக உள்ள இந்த ரோட்டில் நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள், கடைகள் முன்புள்ள கழிவுநீர் கால்வாயை ஒட்டி நடப்படாமல் 3அடி தள்ளி நிறுவப்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் விலகிச் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது.

    தார் ரோடு அமைக்கும்போது இருபக்கம் உள்ள கழிவு நீர் கால்வாய் வரை அமைக்காமல் 18 அடி அகலத்திற்கு குறைவாக ரோடு போட்டு விட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் நிலைமை இங்கு உள்ளது.

    இந்த போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதியம்புத்தூர் ஊருக்கு வடபுறம் 120 அடி அகலத்தில் ஒரு ஓடை உள்ளது.

    இந்த ஓடையில் தற்சமயம் சாக்கடை நீர் செல்கிறது மழை காலங்களில் திருச்சிற்றம்பல பேரி குளத்தின் மறுகால் நீர் இந்த ஓடை வழியாக செல்வதுண்டு. இந்த ஓடை நடுவக்குறிச்சியில் ஆரம்பித்து மேற்கே இசக்கியம்மன் கோவில் அருகே ஓட்டப்பிடாரம் ரோட்டில் இணைகிறது.

    இந்த ஓடையின் வலது பக்கத்தில் தூத்துக்குடி பக்கிள் ஓடை போன்று கான்கிரீட் கான் கட்டி மீதமுள்ள இடத்தில் மண் நிரப்பி சாலை அமைத்தால் கனரக வாகனங்கள் பைபாஸ் சாலை வழியாக சென்று விடும். இதனால் தற்போது உள்ள ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விட முடியும். நடுவக்குறிச்சியில் இருந்து மேளமடம் சந்திப்பு வரை பஸ் சென்றுவர 20 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.

    எனவே புதியம்புத்தூர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அரசிடம் தெரிவித்து நிதி பெற்று இந்த போக்குவரத்து நெருக்குடிக்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

    • புதியம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு இருந்தனர்.
    • தற்சமயம் இந்த காய்கனி கமிஷன் மண்டிகளுக்கு 25 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டிகள் 200-க்கு குறையாமல் விற்பனைக்கு வருகின்றன.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு இருந்தனர். அது தற்சமயம் விளைச்சலுக்கு வந்துள்ளது.

    புதியம்புத்தூரில் காய்கறி களை விற்பனை செய்து தர 5 கமிஷன்மண்டிகள் உள்ளன. இந்த கமிஷன் மண்டிகளில் சுற்றுவட்டார விவசாயிகள் தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    தினமும் இரவு 8 மணிக்கு அவை ஏலம் விட்டு விற்பனை செய்வது வழக்கம். தூத்துக்குடி மார்க்கெட்டி ற்கு விற்பனை செய்வோரும் புதியம்புத்தூரில் சில்லறை கடை விற்பனையாளர்களும் இந்த காய்கறி ஏலத்தில் கலந்து கொண்டு காய்களை வாங்கி செல்வார்கள்.

    காய்கறி தரத்தை பொறுத்து அவை ஏலம் போகும். தற்சமயம் இந்த காய்கனி கமிஷன் மண்டிகளுக்கு 25 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டிகள் 200-க்கு குறையாமல் விற்பனைக்கு வருகின்றன. நேற்று இரவு நடந்த காய்கறி ஏலத்தில் தக்காளி கிலோ ரூ.28-க்கு விலை போனது.

    இந்த விலை கட்டுபடி யாகுமா என தக்காளி சாகுபடியாளர்களிடம் கேட்டபோது, இந்த விலைக்கு ஏலம் போனால் விவசாயிக்கு ஓரளவு லாபம் கிடைக்கும் என்றனர். மேலும் புதியம்புத்தூரில் விளையும் தக்காளி பெங்களூர் தக்காளி போல் அல்லாமல் நாட்டு தக்காளி போல் சமையலுக்கு ருசியை தரும் என விவசாயிகள் தெரிவித்தனர்

    • ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் கல்வி கலைத்திருவிழா நடைபெற்றது.
    • ஓட்டப்பிடாரம் வ.உ.சி.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி கலைத் திருவிழாவை சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் கல்வி கலைத்திருவிழா நடைபெற்றது.

    ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்காக, ஓட்டப்பிடாரம் வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளி, குறுக்கு சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, புதியம்புத்தூர் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கட்டுரை,பேச்சு, இசை ,ஓவியம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றது.

    ஓட்டப்பிடாரம் வ.உ.சி.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி கலைத் திருவிழாவை சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ- மாணவிகளை குத்துவிளக்கு ஏற்ற வைத்து மகிழ்ந்தார்.

    இதையடுத்து எம்.எல்.ஏ. பேசுகையில், மாணவ -மாணவிகள் கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்று முயற்சி செய்து மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெற்றி பெற்று தேசிய அளவில் பங்கேற்று வெற்றி பெறும் அளவிற்கு முயற்சி ெசய்ய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் ஓட்டப் பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா, கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா தேவி, சண்முகராஜ், வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மேரி, பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வ நாயகம், வட்டார கல்வி அலுவலர்கள் பவணந்தி ஈஸ்வரன், சரஸ்வதி, மகாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டன

    • பசுவந்தனை அருகே உள்ள புங்கவர் நத்தம் கிராமத்தில் போலீசார் மளிகை கடைகளில் சோதனை நடத்தினர்
    • தடை செய்யப்பட்டிருந்த புகையிலை பாக்கெட் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது

    புதியம்புத்தூர்:

    பசுவந்தனை அருகே உள்ள புங்கவர் நத்தம் கிராமத்தில் பசுவந்தனை போலீசார் மளிகை கடைகளில் புகையிலை விற்கப்படுகிறதா என்று சோதனை நடத்தினர்.

    அப்போது தடை செய்யப்பட்டிருந்த புகையிலை பாக்கெட் விற்பனை செய்த காமராஜ் (வயது42), சேர்மராஜ் (50) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதலைக்காய் கசப்பு தன்மையுடைய, மருத்துவ குணம் உடைய அரிதில் கிடைக்காத ஒரு காய் ஆகும்.
    • வழக்கமாக நவம்பர் மாதம் புதியம்புத்தூர் சந்தைக்கு அதலைக்காய் விற்பனைக்கு வரும்.

    புதியம்புத்தூர்:

    பாகற்காய் போல் ருசி உடைய ஆனால் பாகற்காயை விட சிறிதாக உள்ள அதலைக்காய் கசப்பு தன்மையுடைய, மருத்துவ குணம் உடைய அரிதில் கிடைக்காத ஒரு காய்கறி ஆகும்.

    மழை காலங்களில்

    மற்ற காய்கறிகள் விளைநிலங்களில் விவசாயியால் விளைவித்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும். ஆனால் அதலைக்காய் விதைப்பு செய்யாத தரிசு நிலங்களில் மழை காலங்களில் முளைத்து பாகற்காய் போன்று கொடிகளாக வளர்ந்து நிலங்களில் படர்ந்து நின்று பயன் தரும்.

    அதலைக்காய்க்கு மிகுந்த மருத்துவ குணம் உண்டு. இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும். குடல்புழு அழிந்து போகும். கல்லீரல் வலுப்படும். மனித உடல் நலத்திற்கு பெரிதும் பயன்படும் என்கிறார்கள். இக்காய்கறி மழை காலங்களில் மட்டும் தான் விளையும்.

    சென்னைக்கு ஏற்றுமதி

    சாலையின் பக்கவாட்டில் கூட இக்கொடி படர்ந்து வளரும். தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது அதலைக்காய் புதியம்புத்தூர், தட்டாப்பாறை, கைலாசபுரம், உமரிக்கோட்டை, சிலுக்கன்பட்டி, மடத்துப்பட்டி, சாமிநத்தம், சில்லானத்தம், நயினார்புரம் ஆகிய கிராமங்களில அதிகமாக விளைந்துள்ளது.

    நவம்பர்- டிசம்பர் மாதங்களில் அதலைக்காய் விளைந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும். வழக்கமாக நவம்பர் மாதம் கிராமங்களில் இருந்து புதியம்புத்தூர் சந்தைக்கு அதலைக்காய் விற்பனைக்கு வரும். அளவிற்கு அதிகமாக அதலக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படும் போது புதியம்புத்தூரில் இருந்து ஆம்னி பஸ்களில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அதலைக்காய் கொண்டு செல்லப்படும்.

    • நீலாவதி அடகு வைத்திருந்த நகையை திருப்புவதற்காக வீட்டில் உள்ள மேஜையில் ரூ.40 ஆயிரம் வைத்துவிட்டு கடைக்குச் சென்றுள்ளார்.
    • விசாரணையில் மாடசாமி என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் மேல மடத்தைச் சேர்ந்தவர் நீலாவதி ( வயது 45). இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று நீலாவதி வங்கியில் அடகு வைத்திருந்த நகையை திருப்புவதற்காக வீட்டில் உள்ள மேஜையில் ரூ.40 ஆயிரம் வைத்துவிட்டு கடைக்குச் சென்றுள்ளார்.

    கடைக்கு சென்று விட்டு வந்து பார்த்தபோது மேஜையில் இருந்த பணம் ரூ.40 ஆயிரம் மற்றும் செல்போனை காணவில்லை. இது குறித்து நீலாவதி புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் புதியம்புத்தூர் கீழத் தெருவை சேர்ந்த மாடசாமி (45) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • புதியம்புத்தூர்- புதுக்கோட்டை ரோட்டில் உள்ள ஊராட்சி குப்பை கிடங்கு அருகே கால்நடை ஆஸ்பத்திரி, ஊராட்சி மன்றம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சுய உதவி குழு கட்டிடம் போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளது.
    • நேற்று மாலை இந்த குப்பை கிடங்கில் தீப்பிடித்து பயங்கர புகைமூட்டம் ஏற்பட்டது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர்- புதுக்கோட்டை ரோட்டில் உள்ள ஊராட்சி குப்பை கிடங்கு அருகே கால்நடை ஆஸ்பத்திரி, ஊராட்சி மன்றம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சுய உதவி குழு கட்டிடம் போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளது.

    நேற்று மாலை இந்த குப்பை கிடங்கில் தீப்பிடித்து பயங்கர புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஆஸ்பத்திரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    அப்போது இந்த வழியில் வந்த சண்முகையா எம்.எல்.ஏ. தீ மூட்டத்தை பார்த்து ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசினார். குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கூறினார். ஊராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் கசிவு நீர் குட்டை இடம் புதுக்கோட்டை ரோட்டில் உள்ளது.

    இந்த இடத்திற்கு அருகில் குடியிருப்புகள் இல்லை. எனவே குப்பை கிடங்கை இந்த இடத்திற்கு மாற்றலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே போர்க்கால அடிப்படையில் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    சம்பவ இடத்துக்கு தீயணைப்புத்துறையினர் உடனடியாக வந்து போராடி தீயை அணைத்தனர்.





    • ரூ.15.60 லட்சத்தில் நடைபெறும் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தை பார்வையிட்டார்.
    • ஊதியம் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் மணியாச்சி அருகே உள்ள கீழப்பூவாணி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களிடம் 100 நாள் வேலையும், அதற்கான ஊதியமும் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

    இதுபோல் சிங்கத்தாக்குறிச்சி கிராமத்தில் நடக்கும் 100 நாள் திட்ட பணிகளையும் பார்வையிட்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து ரூ.15.60 லட்சத்தில் நடைபெறும் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தையும் பார்வை யிட்டார். அப்போது கருங்கு ளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கிய லீலா, செல்வி, பொறியாளர் சித்திரை சேகர், ஓவர்சியர் சீனிவாசன் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×