search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protests"

    • தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • அனைத்து தலித் இயக்கங்களின் நியாயமான கோரிக்கைகளை வெல்வது என முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட அனைத்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வக்கீல் வின்சென்ட் ராஜ் தலைமையில், அனைத்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மூத்த போராளிகள் நிரவி தங்கராசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் நிலவழகன், டாக்டர் அம்பேத்கர் கல்வி பொருளாதாரம் மேம்பாட்டு மையம் நிறுவனர் தணிகாசலம், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் சூர்யா, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல கூட்டமைப்பின் தலைவர் நாகூரான், சமூக நீதிக் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணை ப்பாளர் வின்சன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், திட்டமிட்டப்படி எதிர்வரும் 29-ந் தேதி தொடர் முழுக்க போராட்டம் நடத்தி, அனைத்து தலித் இயங்களின் நியாயமான கோரிக்கைகளை வெல்வது என முடிவு செய்யப்பட்டது.

    • கடலூரில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கள்ளசாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கள்ளசாராயம் குடித்து மரணங்கள் நடைபெறுவதை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் ஜெயா, மாலா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநகர தலைவர் சாமந்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சுபஸ்ரீ, மாவட்ட தலைவர் மருதை, மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். முடிவில் பொதுச் செயலாளர் சுதா நன்றி கூறினார்.

    • கடந்த 6 மாதமாக 7-வது வார்டு சுடுகாடு பகுதியில் தனியாருக்கு சொந்த மான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.
    • குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் அன்றாடம் சேகரிக்க படும் குப்பைகள் கடந்த 6 மாதமாக 7-வது வார்டு சுடுகாடு பகுதியில் தனியாருக்கு சொந்த மான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. சமீப காலமாக இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர். இதனால் தீயில் இருந்து வெளியேறும் நச்சு புகையானது அந்த பகுதியைசேர்ந்த குடியிருப்பு முழுவதும் சூழ்ந்து கொள்வதால் மக்கள் மூச்சு திணறலால் அவதி பட்டு வந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஒன்று திரண்டு தாரமங்கலம் நங்கவள்ளி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த நகராட்சி மன்ற தலைவர் குணசேகரன். ஆணையாளர் முஸ்தபா, காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் ஆகியோர் பொதுமக்களை நகராட்சிக்கு அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகள் இன்னும் 6 மாதத்தில் குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது என்றும், குப்பைக்கு தீ வைக்கும் மர்ம நபர்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதாக கட்டிட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
    • திருமங்கலத்தில் அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலாளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலா ளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் அஜந்தன் வரவேற்றார். சட்ட ஆலோசகர் சக்திவேல் தீர்மானம் வாசித்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- பென்சன்தாரர்களுக்கு அரசு வழங்கி வரும் ஓய்வூதியத்தொகை ரூ1,000-ல் இருந்து ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தொகை ரூ.500-ல் இருந்து ரூ1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை விளக்கி ஒவ்வொரு மாவட்ட வாரியாக விழிப்புணர்வு தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது.

    மேற்கண்டவை உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதுகுறித்து மாநில தலைவர் மகாலிங்கம் கூறுகையில், தற்போது கட்டுமான பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென முதல்-அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். கோரிக்கையை நிறை வேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    • ராகுல்காந்தி எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சத்யாகிரகப்போராட்டம் நடைபெற்றது.
    • நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    ராகுல்காந்தி எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பல்லடம் கொசவம்பாளையம் பிரிவில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக சத்யாகிரகப்போராட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் நடைபெற்ற இந்த சத்தியாகிரக போராட்டத்தில், காங்கிரஸ் மாநில செயலாளர் சித்திக், பல்லடம் நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டாரத் தலைவர் கணேசன், செயற்குழு புண்ணியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மணிராஜ்,நரேஷ் குமார்,சுந்தரி முருகேசன், வேலுச்சாமி,சாகுல் அமீது,முருகன்,காதர் மற்றும் நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு போட்ட தி.மு.க அரசை கண்டித்து நடைபெற்றது
    • மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி மீது வழக்கு போட்ட தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர். அர்ச்சுணன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சண்முகம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கோபா லகிருஷ்ணன், உஷா, பாசறை மாவட்ட செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பா பு, குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளரகள் கடநாடுகுமார், தப்பகம்பை கிருஷ்ணன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, ஓ.சி.எஸ் தலைவர் ஜெயராமன், கிளை செயலாளரும், அமைப்புசாரா ஓட்டுநர் அணி நகர செயலாளருமான நொண்டிமேடு கார்த்திக், இளைஞர் அணி பிரபுதுர்கா, நகர துணைச் செயலாளர் சித்ரா உமேஷ் ராஜேஸ்வரி, ரமேஷ் புவனா மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், நகர ஒன்றிய பேரூராட்சி செயலாளர்கள், கிளைக் செயலாளர்கள், மகளிர் அணியினர், கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மலை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழாவில் வியாபாரம் செய்ய வந்த பழங்குடி நரிக்குறவர் இன மக்களை வனத்துறையினர் தாக்கியதால் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைலருமான கப்பச்சி வினோத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அருகில் மாணவர் விசாந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்கு போட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    கோவை,

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவையில் இன்று அ.தி.மு.க. ஒருங்கிைணந்த கோவை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வக்கீல் பிரிவு செயலாளர் இன்ப துரை கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. அரசை கண்டித்தும், எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டதை கண் டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம வேலுசாமி, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி , தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சேலம் பள்ளப்பட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ விநாயகர்- மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • இந்த நிலையில் பணம் கேட்டு மிரட்டி வரும் திமுகவினர் மீது நடவடிக்கை கோரி முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ விநாயகர்- மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படை யில் இந்த ஆண்டு வருகின்ற 8-ம் தேதி முதல் 12 -ம் தேதி வரை திருவிழா நடத்த கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவிலுக்கு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் திருவிழாவின் போது அப்பகுதியில் உள்ள மக்கள் தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். தற்போது திருவிழா நடைபெறுவதை யொட்டி அங்கு தற்காலிகடை அமைப்பதற்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை ெபாதுமக்களிடம் தி.மு.க.வினர் சிலர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பொதுமக்களுக்கும் தி.மு.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை அறிந்து அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் தற்காலிக கடை அமைக்க பணம் கேட்ட திமுக பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்பொழுது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார், பிரச்சினை நடைபெறாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது ஆண்டாண்டு காலமாக திருவிழாவின் போது தற்காலிக கடை அமைக்க பணம் ஏதும் கொடுக்காமல் தொழில் செய்து வந்தோம். தற்போது திமுகவிவை சேர்ந்த சிலர் தற்காலிக கடை அமைப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். மிரட்டி வருகின்றனர். இல்லை என்றால் கடை நடத்த முடியாது என மிரட்டுவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பணம் கேட்டு மிரட்டி வரும் திமுகவினர் மீது நடவடிக்கை கோரி முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.   தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை காவலர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பணி செய்பவர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

    பணியின் போது இறந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.  இதில் மாநில செயலாளர் டெல்லி அப்பாதுரை, மாவட்ட அமைப்பாளர் தணிகைவேல், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாநில பிரச்சார செயலாளர் அதிதேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிராஜுதீன் நன்றி கூறினார்.

    • கும்பாபிஷேகத்தை அனைத்து குடும்பத்தி னரையும் இணைத்து நடத்த வலியுறுத்தியும் அவசரமாக கும்பாபிஷேகம் நடத்துவதை கண்டித்தும் கோவில் முன்பு 60 குடும்பங்களை சேர்ந்த 40 பெண்கள் உட்பட 100 பேர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
    • அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தை அடுத்த செண்பகமா தேவி ஊராட்சி பகுதியில் கொங்கு குலால பருத்திப்பள்ளிநாடு வசிஷ்ட ரிஷி கோத்ர குல பங்காளிகள் 65 குடிகளுக்கு சொந்தமான ஸ்ரீஅண்ணமார் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருதரப்பினர் இடையே திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவதில் கருத்து வேறுபாடு இருந்தது.

    இது குறித்து வழக்கு போட்டதால் தற்காலிகமாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கோவில் வந்துள்ளது. இந்த நிலையில் 60 குடும்பங்களை தள்ளி வைத்து விட்டு 5 குடும்பங்களை சேர்ந்த வர்கள் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் ஒருதலைபட்ச மாக அனுமதி அளித்திருப்ப தாக பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

    கும்பாபிஷேகத்தை அனைத்து குடும்பத்தி னரையும் இணைத்து நடத்த வலியுறுத்தியும் அவசரமாக கும்பாபிஷேகம் நடத்துவதை கண்டித்தும் கோவில் முன்பு 60 குடும்பங்களை சேர்ந்த 40 பெண்கள் உட்பட 100 பேர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    பொதுமக்களின் இந்த போராட்டம் 2-வது நாளாக நடந்தது. இந்த போராட்டம் குறித்து குலால சாலிவாகனமக்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:-

    மல்லசமுத்திரம் அருகே உள்ள செண்பகமாதேவி அண்ணமார் கோவில் குலால குலத்தைச் சேர்ந்த ஒரு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்டது. இதில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை இருந்ததால் தற்போது தற்காலிகமாக கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது. 65 குடும்பங்க ளில் 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஒப்புதலை மட்டுமே பெற்று குறுகிய காலத்திற்குள் கும்பாபிஷேகத்தை ஏற்பாடு செய்து 60 குடும்பங்களை புறக்கணித்துவிட்டு கும்பாபிஷேகத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அனைத்து மக்களையும் இணைத்து கும்பாபிஷேக விழா நடத்து வதற்கு அறநிலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு சென்னையிலும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கொடுத்தோம்.

    யாரும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. கலெக்டர் தற்காலிகமாக நிறுத்தி வைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தி கும்பாபிஷேகத்தை அனைவரையும் இணைத்து நடத்த வாய்மொழி உத்தரவு

    கொடுத்தார். அதை அறநி லையத்துறை அதிகாரிகள் பின்பற்றாமல் செயல் அலுவலர் நந்தகுமார், உதவி ஆணையர் இளையராஜா ஆகியோர் ஒரு தரப்பினருக்கு கும்பாபிஷேகம் நடத்து வதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். அரசு இதை கவனத்தில் கொண்டு அனைத்து குடும்பங்களையும் இணைத்து கும்பாபிஷேக விழாவை நடத்த வேண்டும். அதுவரை தற்காலிகமாக விழா நடத்த தடை விதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • சீட்டு பணம் கட்டி ஏமாந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ரூ. 50 ஆயிரம், ரூ.1 லட்சம் , ரூ. 2 லட்சம் என பல்வேறு மதிப்புகளில் சுமார் ரூ. 10 கோடிக்கு மேல் ஏல சீட்டு நடத்தி வந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கணேசபுரம் புது தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ரூ. 50 ஆயிரம், ரூ.1 லட்சம் , ரூ. 2 லட்சம் என பல்வேறு மதிப்புகளில் சுமார் ரூ. 10 கோடிக்கு மேல் ஏல சீட்டு நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஏல சீட்டிற்கு பணம் கட்டியவர்களுக்கு குறிப்பிட்ட காலம் முடிந்தும் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இந்த நிலையில் கலை செல்வி திடீரென்று தலைமறைவாகி விட்டார். இதனால் ஏல சீட்டு பணம் கட்டிய ஏமாந்தவர்கள் கடந்த 2019 -ம் ஆண்டு நாமக்கல் போலீசில் கலைச்செல்வி உட்பட 7 பேர் மீது புகார் கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்து 2019 -ம் ஆண்டு கலைச்செல்வி சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்த போது அவரது உறவினர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் இதனால் தன்னிடம் ஏல சீட்டுக்கு பணம் கட்டியவர்களுக்கு திருப்பி கொடுக்க பணம் இல்லை என கூறினார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.

    இதனிடையே சீட்டு பணம் கட்டி ஏமாந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று நாமக்கல் போலீஸ்

    சூப்பிரண்டு அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    இந்த வழக்கை பொரு ளாதார குற்றப்பிரிவுக்கு அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு மாற்றி விசாரித்து இருக்க வேண்டும். ஆனால் அவர், வழக்கை மாற்ற வில்லை, எங்களை ஏமாற்றி வாங்கிய பணத்தின் மூல மாக குற்றவாளிகள் வாங்கிய சொத்துக்களை முடக்கி இருக்க வேண்டும், ஆனால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கினை விசாரித்து எந்த சொத்துக்களையும் ஜப்தி செய்யாமல் சாதாரண மோசடி வழக்காக பதிவு செய்துள்ளனர்.

     முக்கிய நபர்களை வழக்கிலிருந்து காப்பாற்றும் வகையில் அவர்களின் பெயரை வழக்கிலிருந்து நீக்கம் செய்துள்ளனர்.எனவே இந்த வழக்கினை மறு விசாரணை செய்து கோர்ட்டு அனுமதி பேரில் அனைத்து குற்ற வாளிகளையும் வழக்கில் சேர்த்து அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து சீட்டு தொகையை பெற்று தர போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • பேருந்து சரி வர வராததால் இரவு 7 மணிக்கு மேல் பள்ளி மாணவ மாணவிகள் வீட்டிற்கு வருகிறார்கள்.
    • பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 6 பி அரசு பஸ்சை சிறப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஏப்பாக்கம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் திண்டிவனம் சென்று கல்வி பயின்று வருகின்றனர்

    இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து ஏப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் தடம் எண் 23 மற்றும் 21 ஆகிய பஸ்கள் தொடர்ந்து வரவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது 6பி தொடர்ந்து சென்று வரும் நிலையில் அந்த பஸ்சும் ஒரு சில நாட்களில் ஏப்பாக்கம் கிராமத்திற்கு வரவில்லை எனவும் மாலை நேரங்களில் பேருந்து சரி வர வராததால் இரவு 7 மணிக்கு மேல் பள்ளி மாணவ மாணவிகள் வீட்டிற்கு வருவதாகவும் கூறி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 6 பி அரசு பஸ்சை சிறப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனால் போராட்டம் கைவிட ப்பட்டது.இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×