search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Program"

    • ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் கணிதம் குறித்த விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் கணித ஆராய்ச்சி துறை, விருதுநகர் மாவட்ட கல்லூரிகளின் கணித ஆசிரியர்களின் கூட்டமைப்பு இணைந்து 'நிஜஉலகில் கணிதம்'என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்ச்சியினை நடத்தியது.

    கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை தாங்கினார். எஸ்.எப்.ஆர். கல்லூரி கணித துறை தலைவர் பெத்தனாட்சி செல்வம் வரவேற்றார். இணை பேராசிரியை மாலினிதேவி அறிமுக உரையாற்றினார்.

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழக உதவிபேராசிரியர் சந்திர சேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கணித பயன்பாடு, முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவி பேராசிரியர் முத்துமாரி நன்றி கூறினார்.

    இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • 26 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பள்ளிக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் வாங்கி கொடுத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே செம்பத னிருப்பு அல்லிவிளாகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு விழா நடைப்பெற்றது.

    விழாவில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நலனை கருதி சுகாதார கேடு இல்லாமல் அனைத்து மாணவர்களும் தண்ணீர் அருந்த வேண்டும் என்று நோக்கத்தோடு முன்னாள் மாணவ மாணவிகள் சார்பாக பள்ளிக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வாங்கி கொடுத்தனர்.

    விழாவில் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ராஜீவ் காந்தி, பாலமுருகன், இளையராஜா, அருள், ராஜகுரு, வினோத், அமிர்தலிங்கம், உத்திராபதி, செல்வ சுந்தரி, கோமதி, விஜயலட்சுமி, சுமித்ரா, சுகுணா, மற்றும் சக மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்தார்.
    • அமைச்சர் ராமச்சந்திரன் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஏற்கனவே 63 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பள்ளிகளுடன் சேர்த்து மொத்தம் 290 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் தொடக்க விழா இன்று காலை குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெட்டட்டி சுங்கம் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    குழந்தைகளுக்கும் அவர் உணவு ஊட்டி விட்டார். இதனால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சியுடன் காலை உணவை சாப்பிட்டனர்.

    இதுபற்றி அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி காலை உணவுதிட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட ஜெகதளா பேரூராட்சி பெட்டட்டி சுங்கம் அரசு பள்ளியில் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த திட்டம் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி மற்றும் கூடலூர் வட்டத்தில் உள்ள 187 ஊராட்சி பள்ளிகளிலும், 80 பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளிலும், 23 நகரசபைக்கு உட்பட்ட பள்ளிகளிலும் என மொத்தம் 290 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் எர்ணாபுரம் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
    • அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் எர்ணாபுரம் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது என நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா விளக்கி கூறினார். வேளாண்மை அலுவலர் மோகன் விவசாய தொழிலை மேம்படுத்துவதற்கான பயிற்சி வழங்கினார். விதை சான்று அலுவலர் ரஞ்சிதா, உதவி விதை அலுவலர் பொன்னுவேல், உதவி வேளாண்மை அலுவலர் திலீப்குமார் ஆகியோர் துறை சார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • 27 வருடங்களுக்கு பிறகு, ஒன்றாக கூடி விழா நடத்தினர்.

    பசும்பொன்

    கமுதி அருகே பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில், 1996-97-ம் வருடம்

    10-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் 27 வருடங் களுக்கு பிறகு, ஒன்றாக கூடி விழா நடத்தினர்.

    பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்று கூடிய இவர்கள் பெருநாழி யில் தாங்கள் படித்த பள்ளியில், கல்வி கற்றுத் தந்த ஆசிரிய, ஆசிரியை களை அழைத்து, அவர்கள் முன்னிலையில், தங்களது பள்ளி பருவ கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    மேலும் ஆசிரியர்கள் தங்களிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டதால் தான், தற்போது, ஒழுக்க மாகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்று ஆசிரி யர்கள் முன்பு, பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் ஆசிரியர் களுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். மேலும் ஆசிரியர்கள் முன்பு, வரிசையாக நின்று, பள்ளி நினைவுகளை ஞாபகப் படுத்தும் வகையில், கம்பால் அடி வாங்கி கொண்டனர்.

    • பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளியில் 1976-ம் ஆண்டில் 7-ம் வகுப்பு பயின்ற பழைய மாணவர்கள் 47 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.

    ஆசிரியை சாவித்திரி வரவேற்றார். இதில் பழைய மாணவர்கள் நீண்ட நாடகளுக்கு பிறகு சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

    அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.

    மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    ஊட்டி,

    கூடலூர்ஸ்ரீமதுரை பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டம் மாவட்ட தலைவர்மோகன்ராஜ் ஆலோசனைபடி ஸ்ரீமதுரை மண்டல் தலைவர் சுதாகர் தலைமையில் நடந்தது. இதில் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இதற்கிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரதீய ஜனதா மாநில துணை தலைவர் நாராயணன் நீலகிரி மாவட்டம் வருகை தந்தார். அவருக்கு நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மாவட்ட பொதுச்ெசயலாளர்கள் ஈஸ்வரன், பரமேஸ்வரன், வெங்கடேஸ், மாவட்ட பொருளாளர் தர்மன், நகர தலைவர் பிரவீன், மாவட்ட துணை தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • டோக்கனில் முகாம் நடக்கும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது.
    • மாதிரி முகாமை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் பார்வையிட்டார்.

    கோவை,

    தமிழகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதற்கான விண்ணப்பம், டோக்கன்கள் வழங்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 875 குடும்ப அட்டைகள் உள்ளன. 1401 ரேஷன்கடைகள் உள்ளன.

    கோவையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறும் முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

    அதன்படி முதல்கட்டமாக 839 ரேஷன் கடைகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரையும், இரண்டாம் கட்ட முகாம் 562 ரேஷன் கடைகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும் நடைபெறும்.

    கடந்த 20-ந் தேதி முதல் மகளிர் உரிமை திட்டத்துக்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணி தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கினர். அத்துடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது. டோக்கனில் முகாம் நடக்கும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இன்று கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் முதற்கட்ட முகாம்களில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் மாதிரி பதிவு முகாம் நடை பெற்றது. ஆர்.எஸ்.புரம் பிஷப் உபகாரம் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விண்ணப்பங்கள் பெறும் மாதிரி முகாமை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எவ்வாறு பெறப்படுகிறது என்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்களிடம் விண்ணப்பம் கொடுக்க வரும் பெண்களிடம், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்து, அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். தகுதியான நபர்களுக்கு உரிமை தொகை கிடைப்பதற்கு தேவையான அத்துனை ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

    மேலும் முகாமுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான இருக்கை, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.விண்ண ப்பம் நிரப்ப தெரியாதவர்களுக்கு நீங்களே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    இதேபோல் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட ம.ந.க.வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த மாதிரி முகாமையும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர்கள் சேகர், மகேஷ் கனகராஜ், நிர்வாக அலுவலர் தமிழ்வேந்தன், உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், பார்மன் அலி, மண்டல சுகாதார அலுவலர்கள் ராமச்சந்திரன், குணசேகரன், சுகாதார ஆய்வாளர் தனபாலன் உள்ளனர்.

    • மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் மாவட்ட தொண்டரணி தலைவர் பஹீம் முஹம்மது நன்றி கூறினார்.

    சாயல்குடி

    சாயல்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார் பில் காமராஜரின் பிறந்த நாள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி 15-ம் ஆண்டு தொ டக்க விழாவில் 15 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    எஸ்.டி.பி.ஐ. கட்சி சார் பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச் செயலா ளர் பாஞ்சுபீர் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் காஜா முஹைதீன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் நூருல் அமீன் தொடங்கி வைத்து பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முஹம்மது முஸ்த பா, விமன் இந்தியா மூவ் மெண்ட் மாவட்ட தலைவர் கன்சுல் மஹரிபா, ஆதித் தமிழர் கட்சி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்தி பேசி னார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி லாரன்ஸ் நரிப்பையூர் ஜமாத் தலைவர் முகம்மது ஆசாத், செயலாளர் அப்துல் ஹமீது, சாயல்குடி வர்த்த சங்க தலைவர் அபுபக்கர், செயலாளர் ராஜா முஹமது அ.தி.மு.க. பிரதிநிதி செய்யது காதர் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் முகம்மது ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், பனைத் தொழிலாளர் நலச் சங்க மாநில தலைவர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் 15 மாணவர் களுக்கு உயர்கல்வி படிப்ப தற்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முடி வில் மாவட்ட தொண்டரணி தலைவர் பஹீம் முஹம்மது நன்றி கூறினார்.

    • 30-வது ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 18-ந்தேதி பூச்சாட்டு தல் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது.
    • நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 30-வது ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 18-ந்தேதி பூச்சாட்டு தல் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது.

    அதனை முன்னிட்டு தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று காலை குண்டம் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காலை 8.30 மணி அளவில் வன பத்ரகாளியம்மனுக்கு கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகளும் நடத்தப்பட்டன. அப்போது பல வண்ண மலர்களால் அலங்கரிங்கப்பட்ட குண்டத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    பரம்பரை அறங்காவலர் வசந்தா மேள, தாளங்கள் முழங்க மண்வெட்டியால் குண்டம் கண் திறந்து வைத்தார். அதன்பிறகு கோவில் பணியாளர்கள் பூஜை மற்றும் சடங்குகளை நடத்தினார்கள்.

    • விநாயகாமிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்றது,
    • அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்பு முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவ னத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு துறை சார்பில் சுகாதாரத் தொழிலில் வளர்ந்து வரும் பாதைகள் என்ற தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் டீன் டாக்டர் செந்தில் குமார் வழிகாட்டு தலின்படி இயக்குனர் பொறுப்பு ஆன்ட்ரூ ஜான் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கதிரியக்கவியல் துணை பேராசிரியர் துளசிதாஸ் கலந்து கொண்டு, ஒவ்வொரு துறை சார்ந்த மாணவர்களுக்கும் இளங்கலை படிப்பிற்கு பிறகு மாணவர்கள் எந்தெந்த துறையில் வேலைவாய்ப்பினை பெறலாம் மற்றும் உயர்கல்வி எங்கெங்கெல்லாம் வாய்ப்புள்ளது என்பதை குறித்து விரிவாக பேசினார்.

    மேலும் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்பு முடித்த வர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டின் உள்ள தேர்வுக்கான விதிமுறைக ளையும் விளக்கி பேசினார். தொடர்ந்து மாணவர்கள், தங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட 3-ம் ஆண்டு படிக்கும் மாண வர்கள் மற்றும் பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முடிவில் வேலைவாய்ப்பு துறையின் ஒருங்கி ணைப்பா ளர் வளர்மதி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கல்லூரியின் நிர்வாக அதிகாரி சந்துரு, வேலை வாய்ப்புத்துறை உறுப்பி னர்கள் சந்தோஷ், தமிழ்

    செல்வன், சங்கமித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து நூல்களை ஆர்வமுடன் வாசித்தனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா– வை முன்னிட்டு, வரவேற்புக் குழுத் தலைவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பங்கேற்கும் "புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற நிகழ்வு நேற்று முற்பகல் 11.00 மணிமுதல் 12.00 மணிவரை நடைபெற்றது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து நூல்களை ஆர்வமுடன் வாசித்தனர்.

    பள்ளியின் முதல்வரும், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும் போது, முதல் முறையாக புத்தகத் திருவிழா புதுக்கோட்டையில் தொடங்கிய ஆண்டிலிருந்து புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்கிறார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து விரும்பிய நூல்களை வாசித்தார்கள். பள்ளி மாணவர்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி பொதுவான நூல்களை வாசிப்பதால் மட்டுமே வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை, அறிவை, சான்றோர்களின் அனுபவங்களை அறிந்து தெளிவு பெறமுடியும். இளமையில் கல் என்றவாக்கிற்கிணங்க வாசிக்கும் பழக்கத்தை அறிய, நூல்களை நேசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த "புதுக்கோட்டை வாசிக்கிறது" நிகழ்வு பெரிதும் உதவுகிறது என்று குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்வில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, கோமதி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் காசாவயல் கண்ணன், உதயகுமார், செல்வராஜ், ராமன் உடற்கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விசாலி மற்றும் பெரும்பாலான ஆசிரியகளும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    ×