என் மலர்

  நீங்கள் தேடியது "Power"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

  ஈரோடு:

  ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

  இதனால் உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிடியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாம்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம்,கெத்துமுட்டி பாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம், பள்ளியூத்து, ராட்டைசுற்றிபாளையம், அவல்பூந்துறை, கனகபுரம், கவுண்டிச்சிபாளையம், செங்காட்டுவலசு, பூங்காட்டுவலசு, சென்னிமலைபாளையம், புதுப்பாளையம் மற்றும் பல்லாபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

  இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொடுமுடி, சிவகிரி, எழுமாத்தூர், கஸ்பாபேட்டை பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த தகவலை மின் வாரிய செயற்பொ–றியாளர் முத்துவேல் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

  ஈரோடு:

  கொடுமுடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

  இதனால் கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வெங்க மேடு, அரசம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், சோளக்ககாளிபாளையம், ஆவுடையார்பாறை மற்றும் நாகமநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

  இதேபோல் சிவகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

  இதனால் சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப் பாளையம், பழமங்கலம், வீர சங்கிலி, கல்லாபுரம், விலாங்காட்டு வலசு, எல்லகடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மேலப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டபாளையம், அம்மன்கோயில்,தொப்பம்பாளையம், பெரும்பரப்பு, வடுகப்பட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைகிணறு, கரட்டுப்புதூர், காட்டுபாளையம், ராக்காம்பாளையம், இச்சிப்பாளையம், முத்தையன்பாளையம், கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தகடை, வடக்குபுதுபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

  இதேபோல் எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

  இதனால் எழுமாத்தூர், மண்கரடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ள பெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளை யம், ஆனந்தம்பாளையம், ஏரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி, பூந்துறை, சேமூர், மற்றும் 88 வேலம்பாளையம் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

  இதேபோல் கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

  இதனால் கஸ்பா பேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன் பாளையம், செல்லம் பா–ளையம், கோவிந்த நாயக்கம்பாளையம்,

  நஞ்சை ஊத்துக்குளி, செங்காளிபாளையம், மேட்டுப்பாளையம், ஆனைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.எஸ்.ஏ.நகர் இந்தியன்நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், கவுண்டன்பாளையம், சாவடிப்பாளையம், ரகுபதி நாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

  இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெத்தாம்பாளையம் பகுதியில் 14-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
  • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

  ஈரோடு:

  கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

  இதையொட்டி வரும் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெத்தாம்பாளையம், கொளத்தான் பாளையம், மூலக்கடை, செங்கோடன் பாளையம், பூச்சம்பதி, கே.ஜி.புதூர், திட்டுக்காடு, புலவர் பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், எம்.ஜி.பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
  • க்கனாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

  தாராபுரம்,

  தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நாளை 10-ந் தேதி நடக்கிறது. எனவேநாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம்பாளையம், தளவாய்பட்டணம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல் பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல் பாளையம், கள்ளிவலசு, சிக்கனாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தற்போது பவர் படத்தின் மூலம் கேங்ஸ்டராக களமிறங்க இருக்கிறார். #ShrutiHaasan #Power
  ஸ்ருதிஹாசன் சிங்கம்-3 படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டு விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்கிறார். துப்பாக்கி, அஞ்சான் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்தி நடிகர் வித்யூத் ஜம்வால் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

  முதன் முறையாக நடிகை ஸ்ருதி ஹாசனும் வித்யூத் ஜம்வாலும் இணையும் இந்த இந்தி படத்திற்கு பவர் என தலைப்பிடப்பட்டுள்ளது. மகேஷ் மஞ்சரேக்கர் இப்படத்தை இயக்குகிறார். முழுக்க மும்பையை மையப்படுத்திய தாதா கதையாக உருவாகிவரும் இப்படத்தில், வித்யூத் ஜம்வால் தலைமறைவு தாதாவாக இருக்கும் தன் அப்பாவின் இடத்தைக் கைப்பற்றப் போராடும் தாதாவாக நடிக்கிறார்.  அவரது ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசனும் படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்கிறார். 1972ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் கிளாசிக் படமான காட்பாதர் திரைப்படத்திற்கு சமர்ப்பணமாக உருவாகிவரும் இப்படம் வரும் ஜூலை 12ந்தேதி ரிலீசாக இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறினார். #ParliamentElection #Kanimozhi
  செய்துங்கநல்லூர்:

  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்களில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். வல்லநாட்டில் நடந்த ஊராட்சிசபை கூட்டத்தில் கனிமொழி எம்பி. பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

  அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்த பயந்து வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலே போதும் குடிதண்ணீர் பிரச்சனை தீர்ந்து விடும். மேலும் தூத்துக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் வல்லநாட்டில் நின்று செல்ல தி.மு.க. ஆட்சி வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஊரில் மாணவன் ஒருவன் ஆண்கள் பயன்படுத்த பள்ளியில் கழிவறை இல்லை என பேசியுள்ளார். உண்மையிலேயே இது யோசிக்க வேண்டியது. அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் விளையாட்டு விளையாட திடல் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.  மேலும் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. மத்தியில் ஆளும் பி.ஜே.பி.க்கு காவடி தூக்கி வருகிறது. நீட் பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஸ்டெர்லைட் பிரச்சனையாக இருந்தாலும் சரி இதற்கெல்லாம் காரணம் அ.தி.மு.க. தான். அவர்களை மன்னிக்கவே கூடாது. 3 இடத்திற்கு இடைத்தேர்தல் வரவில்லை என்றாலும் கூட மற்ற சட்டமன்றத்திற்கு தேர்தல் வருகின்றது. வருகின்ற தேர்தலில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். அப்போது தமிழக பிரச்சனை அனைத்தும் தீரும். கன்னியாகுமரியில் ராகுல் பேசியது போலவே எங்கள் கூட்டணி ஆட்சி வந்தவுடன் ஜி.எஸ்.டி பிரச்சனையும் தீரும்.

  இவ்வாறு அவர் பேசினார். #ParliamentElection #Kanimozhi


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிகாரமும் பதவியும் சிலருக்கு ஆக்சிஜன் போன்றது. அது இல்லாமல் அவர்களால் உயிர்வாழ முடியாது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். #Powerlikeoxygen #cantlivewithoutPower #Modi
  புதுடெல்லி:

  முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக 100 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியில், சிறப்பு நாணயத்தை வெளியிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இன்றைய அரசியல் அரங்கில் 2 அல்லது 5 ஆண்டுகள் பதவியில் இல்லாமல் போனாலும் சிலர் நிம்மதியை இழந்து விடுகிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.

  இவர்களுக்கு அதிகாரமும், பதவியும் ஆக்சிஜன் போன்றது. அவை இல்லாமல் அவர்களால் உயிர்வாழ முடியாது. ஆனால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது அரசியல் வாழ்வின் பெரும்பகுதி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துதான் பணியாற்றி வந்தார்.

  தன்னைவிட தான்சார்ந்திருந்த கட்சியைவிட இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் முன்வைத்தே அவரது அரசியல் பயணம் அமைந்திருந்தது. அனைத்தையும் விட ஜனநாயகம் மிகவும் உயர்ந்தது என அவர் கருதினார். 

  ஜனசங்கம் இயக்கத்தை கட்டமைத்தார். நமது ஜனநாயகத்தை காப்பதற்காக அவர் ஜனதா கட்சியில் இணைந்தார். ஒவ்வொரு கல்லாக கட்டி வாஜ்பாய் எழுப்பிய மாளிகையான பா.ஜ.க. இன்று உலகில் மிகப்பெரிய அரசியல் கட்சிகளின் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. 

  சித்தாந்தத்தில் சமரசம் செய்வதா? ஆட்சியில் நீடிப்பதா? என்ற கேள்வி எழுந்தபோது பா.ஜ.க.வை அவர் உருவாக்கினார். தாமரைக்கான விதையை நட்டு அதற்கான பலனையும் அவரது காலத்தில் அறுவடையும் செய்து விட்டார்.

  அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், உடல்நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் பல ஆண்டுகளாக ஊடகங்களில் பேசப்படும் பொருளாக இல்லாமல் வாஜ்பாய் வாழ்ந்து வந்தார். 

  அவர் மறைந்தபோது மக்கள் அவருக்கு செலுத்திய இரங்கல்களையும் மரியாதையையும் வைத்து மக்களின் மனங்களில் எவ்வளவு பெரிய முத்திரையை வாஜ்பாய் பதித்திருந்தார் என்பதை நம்மால் கண்கூடாக காண முடிந்தது.

  அவர் பேசியபோது இந்த நாடு பேசியது. அவரது குரல் இந்த நாட்டின் குரலாக இருந்தது. வாஜ்பாயின் குரல் பா.ஜ.க.வின் குரலாக மட்டுமில்லாமல் சாதாரண மனிதர்களின் உண்ர்வுகளை பிரதிபலிக்கும் குரலாக அமைந்திருந்தது என்றும் மோடி புகழாரம் சூட்டினார். #Powerlikeoxygen #cantlivewithoutPower #Modi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  11 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்த வேதாரண்யம் நகரில், 75 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. #GajaCyclone
  சென்னை:

  நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

  இந்த மாவட்டங்களில் இருந்த 1 லட்சத்து 13 ஆயிரம் மின் கம்பங்கள், 201 துணை மின் நிலையங்கள், 841 மின்மாற்றிகள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. இவற்றை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

  மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். தற்போது எந்த அளவுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

  மின் வினியோகத்தை பொறுத்தவரை நகராட்சி பகுதிகளில் ஓரளவு முழுமையாக மின் இணைப்பு கொடுத்து விட்டோம்.

  11 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்த வேதாரண்யம் நகரில், 75 சதவீத வீடுகளுக்கு நேற்று மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு 2 நாளில் கிடைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

  இதேபோல் முத்துப்பேட்டை நகருக்கு மின் இணைப்பு கொடுக்க வேலைகள் நடந்து வருகிறது. நாளை அல்லது நாளை மறுநாளில் இருந்து அங்கு மின்சாரம் கிடைத்து விடும்.

  திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதமும், மன்னார்குடி நகராட்சியில் 92.66 சதவீதமும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 92.42 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 75.02 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

  கிராம பகுதிகளில் 30 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

  நிறைய வீடுகளில் மின் இணைப்பு சேதம் அடைந்திருப்பதால் 30-ந்தேதி வரை பில் கட்ட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலக்கெடுவை நீட்டிப்பது பற்றி முதல்-அமைச்சருடன் கலந்து பேசி அறிவிப்பு வெளியிடப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

  மாமல்லபுரம்:

  கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் நேற்று நள்ளிரவில் இருந்து 220 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

  இதுபற்றி அணுமின் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

  ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொழில் நுட்ப கோளாறால் முதல் அணுஉலையும் இயங்காமல் இருக்கிறது. இதனால் தற்போது மொத்தம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

   மாமல்லபுரம், கோவளம், நெய்வேலி, கொக்கிலமேடு, வெண்புரு‌ஷம், சூலேரிக்காடு, கல்பாக்கம் பகுதி மீனவ கிராமங்களில் 2-வது நாளாக இன்றும் காற்றின் வேகம் அதிகரித்து சாரல் மழை பெய்து வருகிறது. கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

  இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகு, வலை, மிஷின்களை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைத்து வருகிறார்கள்.

  இந்த நிலையில் மழை, காற்று, கடல்சீற்றம் என அப்பகுதி கடலோர கிராம மக்களும், மீனவர்களும் பீதியில் உள்ளனர். இந்த நேரத்தில் அணு உலையும் நிறுத்தப்பட்டதால் கடலோர பகுதி மீனவர்களிடையே தற்போது சுனாமி பயமும் நிலவி வருகிறது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோடி ஆட்சிக்கு கடைசிகாலம் நெருங்கி விட்டது என்று புதுவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசினார். #pmmodi #narayanasamy #congress

  புதுச்சேரி:

  ரபேல் விமான ஊழலை மறைக்க சி.பி.ஐ.துறை அதிகாரிகளை சுய லாபத்திற்காக மத்திய பா.ஜனதா மாற்றி உள்ளதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

  அதுபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால்நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

  முதல்- அமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுவை பொறுப் பாளருமான சஞ்சய்தத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

  டெல்லியில் ராகுல்காந்தி சி.பி.ஐ. அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார். ஊழலை ஒழிப்பேன் எனக்கூறி மோடி ஆட்சிக்கு வந்தார்.

  ஆனால், பா.ஜனதா ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ராஜஸ்தானில் நிலக்கரி ஊழல், மத்திய பிரதேசத்தில் டாக்டர் நியமனத்தில் ஊழல், சத்தீஸ்கரில் அரிசி வாங்கியதில் ஊழல் என பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழலை காங்கிரஸ் கட்சி ஆதாரத்தோடு எடுத்துக்கூறி வருகிறது.

  தமிழகத்தில் முதல்- அமைச்சர் மீது சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. அமைச்சர்களின் வீடுகளில் சோதனைகள் நடக்கிறது.

  எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை பா.ஜனதா முடக்குகிறது, கண் காணிக்கிறது. ஆனால் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழலை கண்டும், காணாமலும் உள்ளது.

  இதைத்தான் ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் கேட்டார். பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தும் கேள்வி எழுப்பி வருகிறார். ஆனால், மோடி இவை எதற்கும் பதில் கூறவில்லை.

  ஊழலை ஒழிப்பேன் என சொன்ன மோடி ஊழலுக்கு உறுதுணையாக உள்ளார். மோடிக்கு கடைசிகாலம் நெருங்கிவிட்டது. இன்னும் 5 மாதங்களில் மோடியின் ஆட்சி வீட்டிற்கு போகும். நாம் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும். அதற்கு உறக்க மின்றி நாம் பணியாற்ற வேண்டும்.


  புதுவையின் பாராளு மன்ற வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும். ராகுல்காந்தியை பிரதமராக்க புதுவை எம்.பி. கை கொடுக்க வேண்டும். இதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  போராட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக் கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் பாலன், விஜயவேணி, தனவேலு, டெல்லி பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் துணைத்தலைவர்கள் விநாயகமூர்த்தி, நீல. கங்காதரன், பொதுச் செயலாளர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கருணாநிதி, தனுசு, ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ரவிச்சந்திரன்,

  இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் விக்னேஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் விக்கிர மாதித்தன், மகிளா காங்கிரஸ் தலைவி பிரேமலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கோ‌ஷம் எழுப்பினர். #pmmodi #narayanasamy #congress

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2030-ம் ஆண்டுக்குள், நமது மின்சார தேவையில் 40 சதவீதத்தை சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் பூர்த்திசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். #India #NonFossilFuel #Modi
  புதுடெல்லி:

  டெல்லி விஞ்ஞான பவனில், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி என்ற அமைப்பின் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதில் அவர் பேசியதாவது:-

  கடந்த 200 ஆண்டுகளாக, பூமிக்கு அடியில் கிடைக்கும் நிலக்கரி போன்ற பொருட்களைத்தான் மின்சார தேவைக்காக பயன்படுத்தி வந்தோம். ஆனால், பாதுகாப்பான எதிர்காலத்துக்காக, பூமிக்கு மேலே கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை போன்ற வளங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.

  2030-ம் ஆண்டுக்குள், நமது மின்சார தேவையில் 40 சதவீதத்தை சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் பூர்த்திசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

  இவ்வாறு அவர் பேசினார்.  #India #NonFossilFuel #Modi 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo