search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power cut"

    • வில்லியனூர்-மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், அமைதி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    புதுச்சேரி:

    வில்லியனூர்-மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதையொட்டி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி. நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர்,

    ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்க குட்டை, மூலக்குளம், ஜே.ஜே.நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், புது நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினி யோகம் நிறுத்தப்படுகிறது.

    இதேபோல் பிள்ளைச்சாவடி மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், அமைதி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    • ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மின் வினியோகம் இருக்காது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இதனால் பரமத்திவேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி.சூரியாம்பாளையம், வீராணம் பாளையம், கோப்பணம்பாளையம், குப்பிச்சிபாளையம், ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரைப்பாளையம், கண்டிப்பாளையம், வடுகபாளையம், நஞ்சப்ப கவுண்டம்பாளையம், நாயக்கனூர், சிறுநல்லி கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பள்ளம் ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோம் தடை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    இச்சிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) இந்த துைண மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட இச்சிப்பட்டி, சின்ன அய்யன் கோவில், பெருமாகவுண்டன்பாளையம் பிரிவு, தேவராயன்பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடுபுதூர், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபாளையம், கொத்துமுட்டிபாளையம், கோடாங்கிபாளையம், சின்ன கோடாங்கிபாளையம் மற்றும் சாமளாபுரம் பகுதியில் உள்ள சூரியா நகர், ராம்நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சபரிராஜன் தெரிவித்துள்ளார்.

    • நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.
    • குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் மற்றும் வீரசோழபுரம் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது.

    உடுமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உடுமலை இயக்குதலும் பேணுதலும் செயற்பொறியாளர் த.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    பாலப்பம்பட்டி துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. அது சமயம் உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரெயில்நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி. புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணம்மநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டினம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் மற்றும் வீரசோழபுரம் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்திருந்த பொதுமக்கள் மின் தடையால் கடும் அவதியடைந்தனர்.
    • தண்ணீர் மோட்டார்கள் இயக்க முடியாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்ட ராமேசுவரம் தீவுக்கு மண்டபம் துணை மின் நிலையத்தில் இருந்து உயர் மின்னழுத்த கம்பிகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர் மின்னழுத்த கம்பத்தில் உள்ள பீங்கான் இன்சுலேட்டர் மழையின் காரணமாக வெடித்துச் சிதறியது. இதன் காரணமாக ராமேசுவரம் நகர் முழுவதும் இன்று அதிகாலை 3 மணி முதல் இருளில் மூழ்கியது.

    பொதுமக்கள் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்திருந்த பொதுமக்கள் மின் தடையால் கடும் அவதியடைந்தனர். ஓட்டல்களில் உணவு தயாரிக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. தண்ணீர் மோட்டார்கள் இயக்க முடியாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மின் கம்பத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றினர். இருப்பினும் இன்று காலை 10 மணி வரை ராமேசுவரத்தில் மின் வினியோகம் வழங்கப்படவில்லை.

    மகாளய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்துள்ள நிலையில் 7 மணி நேரமாக ஏற்பட்டுள்ள மின்தடை பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது.

    கந்தர்வகோட்டை சில பகுதிகளில்நாளை மின் நிறுத்தம்

    கந்தர்வகோட்டை, 

    புனல்குளம் மற்றும் குளத்தூர் நாயக்கர் பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் புனல்குளம், தெத்துவாசல் பட்டி, மஞ்ச பேட்டை, தச்சன் குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, சோழகம் பட்டி, நொடியூர், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன் பட்டி, புதுநகர், முதுகுளம், குளத்தூர் நாயக்கர் பட்டி, நடுப்பட்டி, சேவியர் குடிகாடு, ஆத்தங்கரைபட்டி, கீழ ராத்தூர், பருக்கை விடுதி, மூக்கப் புடையான் பள்ளம் ஆகிய பகுதிகளில் நாளை (12-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின் நிறுத்தம் நடைபெறுகிறது.
    • உயர் மின் தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    குரும்பாபேட் துணைமின் நிலையத்தில் அளவு திருத்தப் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணியிலிருந்து பகல் 2 மணி வரை மேட்டுபாளையம் டிரக் முனையம் போக்குவரத்து நகரம், ஹரி நமோ நகர் ஒரு பகுதி, பிரியதர்ஷினி நகர், ராஜாஅண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒரு பகுதி, இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், பல் மருத்துவ கல்லூரி, மதர்தெரசா நர்சிங் கல்லுாரி, தொலைக்காட்சி நிலையம், புதுபேட் ஒரு பகுதி, ராஜாஜி நகர் ஒரு பகுதி,

    லாஸ்பேட் ஒரு பகுதி, நெருப்புகுழி, நவாற்குளம், அன்னிபெசன்ட் நகர், கணபதி நகர், சின்னகண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர் நகர், வாசன் நகர், பொதிகை நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், செவாலியர் சீனிவாசன் நகர், தில்லைகன்னு அம்மா நகர், அசோக் நகர், இலாசுபேட் அரசு ஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர், அவ்வை நகர் ஒரு பகுதி, சாந்தி நகர், வள்ளலார் நகர், கலைவாணி நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், லஷ்மி நகர்,

    லஷ்மிநகர் விரிவாக்கம், வரதராஜாபிள்ளை நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர், இடையன்சா வடிரோடு, லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள், மற்றும் உயர் மின் அழுத்தநுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்) மற்றும் அதனைசார்ந்தபகுதிகள் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைச்செய்யப்படுகிறது.

    அதேபோல் தொண்ட மாநத்தம்-வில்லியனூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கோனேரிகுப்பம், உயர் மின் தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

    • முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • மேற்கண்ட பகுதியில் வழக்கம் போல் மின்வினியோகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உடுமலை:

    உடுமலை மின் பகிர்மான வட்டம் கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் மின் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.எனவே மேற்கண்ட பகுதியில் வழக்கம் போல் மின்வினியோகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • பழங்கரை மற்றும் பெருமாநல்லூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது.
    • மாதேஸ்வரன்நகர் பிரிவு அலுவலக மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட பகுதியில் மேம்பாட்டுபணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    திருப்பூர்:

    பழங்கரை மற்றும் பெருமாநல்லூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீராம் நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி,ஓ.அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி.நகர்,

    திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ, பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவபட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், ெதாரவலூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அதேபோல் மாதேஸ்வரன்நகர் பிரிவு அலுவலக மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட பகுதியில் மேம்பாட்டுபணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை குங்குமபாளையம், தியானலிங்க ரைஸ்மில் ேராடு, கவுண்டம்பாளையம், வாய்க்கால்மேடு, ஆதி நாராயணன் நகர் பகுதியில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதேபோல் காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பல்லடம், அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில், பெரும்பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், சின்னியகவுண்டம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி, ஆகிய ஊர்களில் மின் வினியோகம் தடைபடும் என்று பல்லடம் வட்டமின் பகிரமான செயற்பொறியாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    • பசூர் மற்றும் கானூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பசூர் மற்றும் கானூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பசூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பசூர், அன்னூர், மேட்டுப்பாளையம், பூசாரிப்பாளையம், இடையர்பாளையம்,செல்லனூர், அயிமாபுதூர், ஒட்டர் பாளையம், ஜீவா நகர், மேட்டுக்காடு புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம் ஆகிய பகுதிகளிலும், இதேபோல் கானூர் பகுதிக்கு உட்பட்ட கானூர் புதூர், அல்லபாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், முண்டிப்பாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • குப்பண்ணசெட்டியார் வீதி, தட்டான் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருப்பூர் கோட்டம் சந்தைபேட்டை துணை மின் நிலையப்பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பல்லடம் ரோடு, காமராஜ் ரோடு, எம்.ஜி.புதூர், குப்பண்ணசெட்டியார் வீதி, தட்டான் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை 4-ந்தேதி புதன்கிழமை காலை 9 முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    திருப்பூா்,:

    திருப்பூர் திருநகா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப்பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 4-ந்தேதி புதன்கிழமை காலை 9 முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: திருநகா், பாரப்பாளையம், செங்குந்தாபுரம், பூச்சக்காடு, கிரி நகா், எருகாடு (ஒரு பகுதி), கே.வி.ஆா்.நகா் பிரதான சாலை, மங்கலம் சாலை, அமா்ஜோதி காா்டன், கே.என்.எஸ்.காா்டன், ஆலங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கே.ஆா்.ஆா்.தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், தொடக்கப் பள்ளி 1, 2-ஆவது தெரு, பொன்னுசாமி கவுண்டா் வீதி, முத்துசாமி கவுண்டா் வீதி, எஸ்.ஆா்.நகா் வடக்கு மற்றும் தெற்கு, பாத்திமா நகா், மாஸ்கோ நகா், காமாட்சிபுரம், திரு.வி.க.நகா், எல்.ஐ.சி.காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ்.பி.ஐ.காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகா், புவனேஸ்வரி நகா், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜே.ஜே.நகா், திருவள்ளுவா் நகா், கொங்கணகிரி கோயில், ஆா்.என்.புரம் (ஒரு பகுதி), கல்லூரி சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

    ×