search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power cut"

    • பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • சன்னியாசிக்குப்பம், திருவண்டார் கோவில் மற்றும் பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    திருபுவனை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால்   காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை திருவண்டார் கோவில் மற்றும் ஜெயா நகர் பகுதியிலும் 20-ந் (திங்கட்கிழமை) திருபுவனை (பகுதி) கலிதீர்த்தால் குப்பம் ஆண்டியார் பாளையம், குச்சிப்பாளையம், சிலுக்காரிப்பாளையம், சன்னியாசிக்குப்பம், பி.எஸ்.பாளையம், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு மற்றும் வாதானூர் பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    21-ந் தேதி ( செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருபுவனை சகடபேட், கொத்தபுரி நத்தம், சன்னியாசிக்குப்பம், திருவண்டார் கோவில் மற்றும் பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க் ஆகிய பகுதிகளிலும் 22-ந் தேதி (புதன்கிழமை) திருபுவனை (பகுதி) கலிதீர்த்தாள் குப்பம் ஆண்டியார் பாளையம் திருபுவனை பாளையம், மதகடிப்பட்டு, மதகடிப்பட்டு பாளையம், நல்லூர், மற்றும் நல்லூர் குச்சிப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    23-ந் தேதி (வியாக்கிழமை) காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை திருபுவனை சகடபேட், கொத்தபுரி நத்தம், சன்னியாசிக்குப்பம், திருவண்டார் கோவில் மற்றும் பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்டம் தம்மம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்டம் தம்மம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதையொட்டி நாளை (16-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தம்மம்பட்டி நகரம், ஜங்கமசமுத்திரம், கொண்டையம்பள்ளி, மூலப்புதூர், கோனேரிப்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், நாரைகிணறு, கீரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

    • வார்டு கவுன்சிலரான ரஞ்சித், மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க முடிவு செய்தார்.
    • கிராமத்தில் ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட முறை மின்தடை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சமீபத்தில் மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் மாநிலத்தின் சில இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள தலவூர் கிராமத்தில் ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் மின்தடை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. அதே நேரத்தில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது தலவூர் கிராம மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதனால் அந்த பகுதியின் வார்டு கவுன்சிலரான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரஞ்சித், மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க முடிவு செய்தார்.

    அதன்படி தனது வார்டுக்கு உட்பட்டவர்கள் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை சில்லறை காசுகளாக மாற்றினார். மொத்தம் 9 வாடிக்கையாளர்களின் மின் கட்டணமான ரூ 7 ஆயிரத்துக்கு ரூ,1, ரூ2, ரூ5 நாணங்களாக மாற்றி ஒரு பையில் மூட்டையாக கட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று வழங்கினார்.

    அதனைப்பார்த்த மின் வாரிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடம் வாடிக்கையாளர்களின் மின் அட்டை மற்றும் சில்லறை காசுகள் அடங்கிய மூட்டை உள்ளிட்டவைகளை வழங்கினார். அவற்றை வேறு வழியின்றி வாங்கிக்கொண்ட மின் ஊழியர்கள், சில்லறை காசுகள் அனைத்தையும் பல மணி நேரமாக எண்ணினர்.

    பின்பு மின் கட்டணத்துக்கான ரசீதை கவுன்சிலரிடம் கொடுத்தனர். இதுகுறித்து கவுன்சிலர் ரஞ்சித் கூறியதாவது:-

    மின்சார வாரியமும், குடிநீர் வாரியமும் அவ்வப்போது கட்டணத்தை உயர்த்தி எங்களை கஷ்டப்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி எனது வார்டில் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. என்னுடைய வார்டில் தினமும் 20 முறையாவது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

    இன்று 9 வீடுகளின் மின் கட்டணத்தை சில்லறையாக கொண்டு வந்துள்ளேன். இதற்கு பிறகும் எங்களது பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், எனது வார்டில் உள்ள 450 வீடுகளுக்கான மின் கட்டண தொகையையும் நாணயங்களில் கொண்டு வருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • இடையன்சாவடி ரோடு, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள், உயர்மின் அழுத்த பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கணுவாப்பே ட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள்  நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை தண்டுகரை, பாலாஜி நகர், காமராஜர் நகர், அன்னை தெ ரசா நகர், மணிமே கலை நகர், வி.மணவெளி, ஒதியம்பட்டு, கே.வி.நகர், பெரியபேட், தில்லை நகர், வீரவாஞ்சி நகர், வில்லியனூர், பத்மினி நகர், வசந்தம் நகர், ஆத்தவாய்க்கால்பே ட், திருக்காமீஸ்வரர் நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இதே போல் லாஸ்பேட்டை மின்பாதை பராமரிப்பு பணிகள் நாளை நடப்பதால் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மே ட்டுப்பாளையம் வாகன முனையம், ஹரி நமோநகர், பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், கோரிமேடு, காவலர் குடியிருப்பு, இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், பல் மருத்துவ கல்லூரி, மதர் தெரசா நர்சிங் கல்லூரி, தொலைக்காட்சி நிலையம், புதுபேட், ராஜாஜி நகர், லாஸ்பேட், நெருப்புகுழி, நாவற்குளம், அன்னிபெ சன்ட நகர், கணபதி நகர், சின்ன

    கண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர், வாசன் நகர், பொதிகை நகர், அசோக் நகர், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, நேரு நகர், அவ்வை நகர், சாந்தி நகர், லட்சுமி நகர், வரதராஜபிள்ளை நகர், வள்ளலார் நகர், கலைவாணி நகர், ஆனந்தா நகர், நெ சவாளர் நகர், சப்தகிரி நகர், இடையன்சாவடி ரோடு, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள், உயர்மின் அழுத்த பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

    • துணை மின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • தகவலை இருளி பட்டு மின்நிலைய உதவி பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அழிஞ்சி வாக்கம், எம்ஜிஆர் நகர், சித்தி விநாயகர் பண்ணை, சாய் கிருபா நகர், கணேஷ் நகர், ஸ்ரீ நகர், விருந்தாவன நகர், இருளி பட்டு, சத்திரம், பாதி பகுதி அத்திப்பேடு, எம்கே கார்டன், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை, சத்திரம், ஜெகநாதபுரம், அகரம், குதிரை பள்ளம், ஆமூர் காலனி, கங்கையாடி குப்பம், நெடுவரம் பாக்கம் காலனி, மாலிவாக்கம் போன்ற பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை இருளி பட்டு மின்நிலைய உதவி பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில்நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

    புதுக்கோட்டை,  

    புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டும், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, நடையக்குடி, லேணாவிலக்கு எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம், ஆவணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, திருப்புனவாசல், மீமிசல், ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

    • நாளை 2-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் வெ.ராஜாமணி தெரிவித்துள்ளாா்.
    • பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை. ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     உடுமலை:

    உடுமலை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 2-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் வெ.ராஜாமணி தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, சிந்து நகா், ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை. ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை தனிக்குப்பம், நத்த மேடு மின் நிறுத்தம் நடைபெறுகிறது.
    • திருபுவனை (பகுதி), ஆண்டியார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கோர்க்காடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை தனிக்குப்பம், நத்த மேடு, கம்பலிக்காரன்குப்பம், ஏம்பலம், மணக்குப்பம், சங்கரன்பேட், புதுக்குப்பம், செம்பியப்பாளையம், சாத்தமங்கலம், சிவராந்தகம் மற்றும் கீழூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இதேபோல் திருபுவனை துணை மின் நிலையத்திலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கலிதீர்த் தாள்குப்பம், திருபுவனை (பகுதி), ஆண்டியார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    • வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 1-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • ஜீவாநகர், திருமுருகன்பூண்டி விவேகானந்த கேந்திரா,டி.டி.பி.மில் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 1-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் ஒரு பகுதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், திருமுருகன்பூண்டி விவேகானந்த கேந்திரா,டி.டி.பி.மில் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • கேயம்பாளையம் மற்றும் பழனிகவுன்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விஜயமங்கலம், பகளாயூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், மு.தொட்டிபாளையம், புத்தூர்பள்ளபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம் மற்றும் பழனிகவுன்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
    • குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

    அவினாசி:

    அவினாசி அருகே உள்ள கருவலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா். அதன்படி கருவலூா், அரசப்பம் பாளையம், நைனாம்பாளையம், ஆரியக் கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

    சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால்,அரியலூர் ஒரு சில பகுதிகள்

    அரியலூர்,  

    அரியலூர் துணைமின் நிலையத்தில் 21-ந்தேதி நாளை சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால்,அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், இராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜ நகரம், வெங்கட கிருஷ்ணா புரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாக லூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி,

    தேளுர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுர், கா.அம்பாபூர், பாளை யக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழை க்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கிய ர்பாளையம், மைல்லாண்ட கோட்டை,

    உடையார்பாளையம் துணை மின் நிலையங்களி லிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி,

    இடையார்  மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் முழுவதும் காலை 09.00 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் செய்ய இயலாது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    ×