search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Potato Recipes"

    • மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 4,

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,

    மிளகாய் தூள் - தேவையான அளவு

    அரிசி மாவு - 3 டீஸ்பூன்

    பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.

    செய்முறை

    நீளமான உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி விரல்களைப் போல மெல்லிய தடிமனான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அல்லது கட்டர் கொண்டு நறுக்கவும்.

    நறுக்கிய உருளைக்கிழங்கில் உப்பு, மிளகாய் தூள், அரிசி மாவு, மிளகு தூள் கலந்து நன்றாக கலந்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்த உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் ரெடி.

    • குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

    எண்ணெய் - 150 கிராம்

    செய்முறை :

    உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.

    இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!

    காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு :

    உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.

    மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.

    • உருளைக்கிழங்கில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று உருளைக்கிழங்கு சமோசா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 200 கிராம்

    உருளைக்கிழங்கு - 2

    வெங்காயம் - 2

    சீரகம் - ஒரு தேக்கரண்டி

    மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவிற்கு பிசைவது போல் பிசைந்து 30 நிமிடங்கள் தனியாக மூடி வைக்கவும்.

    உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.

    பிசைந்து வைத்த மாவை சப்பாத்திக்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் தண்ணீர் தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும்.

    அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மசாலா சிறிது வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும்.

    இதே போல் மீதமுள்ள மாவிலும் மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும்.

    ஒரு அடிகனமாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சுவையான உருளைக்கிழங்கு சமோசா தயார்.

    • குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று உருளைக்கிழங்கில் சூப்பரான அல்வா செய்யலாம் வாங்க..

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - அரை கிலோ

    சர்க்கரை - 1/4 கப்,

    பாதாம் - 1 கையளவு,

    பிஸ்தா - தேவையான அளவு,

    நெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மசித்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

    பின்பு தீயை குறைவில் வைத்து, உருளைக்கிழங்கு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    வதக்கும் போது, நெய் சேர்த்து கொண்டே இருக்க வேண்டும்.

    பின் அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறவும்.

    கடைசியாக பாதாம், பிஸ்தாவை சேர்த்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு அல்வா ரெடி!!!

    • டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 5

    கேரட் - 1

    கோஸ் - 50 கிராம்

    குடைமிளகாய் - 1

    சீஸ் - 1 கப் துருவியது

    பச்சை மிளகாய் - 2

    பூண்டு விழுது - அரை ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    பிரெட் - 12 துண்டுகள்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ப.மிளகாய், கோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கோஸ்,குடைமிளகாய் போட்டு அதனுடன் துருவிய சீஸ், பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான சீஸ் வெஜிடபிள் போண்டா தயார்.

    • சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது உருளைக்கிழங்கு சிப்ஸ்.
    • வீட்டிலேயே எளிய முறையில் இதை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 3 கிலோ,

    எண்ணெய் - ஒரு கிலோ,

    மிளகாய் பொடி - 5 தேக்கரண்டி,

    பெருங்காயம் - தேவையான அளவு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    உருளைக்கிழங்கின் மேல் தோலை சுரண்டி அல்லது மேலாக சீவி கழுவி வைத்து கொள்ளவேண்டும்.

    பின்னர் தோல் சீவிய கிழங்கை சிப்ஸ் சீவும் கட்டை மூலம் சீவி எடுத்து சுத்தமான ஒரு மென்மையான துணியில் ஈரம்போக ஒற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுப்பில் இரும்பு சட்டியில் பொரித்து எடுக்கும் அளவில் எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும்.

    எண்ணெய் காய்ந்ததும் சீவிய கிழங்குகளை அதில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

    மிளகாய் தூள், மஞ்சள்பொடி, உப்புத்தூள் ஆகியவற்றை பொரித்து வைத்துள்ள சிப்ஸ் மீது தூவி நன்றாக கலந்து விட்டு ஆற விடவேண்டும்.

    சுமார் ஒரு மணி நேரம் கழித்ததும் பாலித்தீன் பைகளில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை சாப்பிடலாம்.

    • இன்று உருளைக்கிழங்கு பிரட் சேர்த்து வடை செய்யலாம்.
    • இந்த வடை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    உருளைக் கிழங்கு - 2

    பிரெட் துண்டுகள் - 10

    வறுத்த ரவை - அரை கப்

    அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்

    வெங்காயம் - 2

    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை - சிறிது

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக் கொள்ளுங்கள்.

    இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம். கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

    சூப்பரான பிரெட் உருளைக்கிழங்கு வடை ரெடி.

    விருப்பப்பட்டால் சாஸ், தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.

    • இந்த ரெசிபியை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்கலாம்.
    • இந்த ரெசிபியை செய்வதற்கு 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 5,

    வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),

    வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்,

    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

    மஞ்சள்தூள் - சிட்டிகை,

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

    செய்முறை:

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

    சப்பாத்திகளின் நடுவே வதக்கிய கலவையை வைத்து பாய் போல சுருட்டவும்.

    தோசைக்கல்லை காய வைத்து சுருட்டிய சப்பாத்திகளை வைத்து இருபுறமும் டோஸ்ட் செய்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சப்பாத்தி ரோல் ரெடி.

    பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2
    கேரட் - 1
    வெங்காயம் - 1
    முட்டை - 3
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    மிளகு தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கு, கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் துருகிய உருளைக்கிழங்கு, கேரட்டை போட்டு வதக்கவும்.

    உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் உப்பு, மிளகாய் தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற விடவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கலவையை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் ரெடி.

    கடையில் விற்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆரோக்கியமானதாக இருக்காது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ.
    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்.
    எண்ணெய் - 150 கிராம்.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை முதலில் நன்றாக கழுவி எடுத்து அதனை சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பு மற்றும் மிளகாயைத் தூளை சேர்த்து கலக்கி வைக்கவும்.

    அடுப்பினில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீவிய உருளைக் கிழங்கைப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக் கிழங்கு சிப்ஸை பாத்திரத்தில் போட்டு அதன் மீது மிளகாய் மற்றும் உப்பு தூள் கலந்த கலவையை தூவி எல்லா சிப்ஸ்களிலும் படும்படி கலக்கி கொள்ளவும்.

    சுவையான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயார்.

    காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாரம்வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு: உருளைக் கிழங்கை சீவி துணியின் மேல் பரப்பிவிடவும். அதிக நேரம் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் உருளைக்கிழங்கு கருத்து விடும். இதனால் ஈரம் உறிஞ்சப்பட்டு மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் கிடைக்கும். மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூள் பயன்படுத்தலாம்..

    உருளைக்கிழங்கில் பொரியல், சிப்ஸ், வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2
    அரிசி மாவு - 2 கப்
    கடலை மாவு - 1 கப்
    மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேகவைத்து, அதோடு 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அந்தக் கலவையில் வெண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும்.

    இப்போது அரைத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

    இந்த மாவை சூடான எண்ணெயில் முறுக்கு வடிவில் பிழிந்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இப்போது உருளைக்கிழங்கு முறுக்கு தயார்.

    நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு ரெய்தா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெய்தாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 100 கிராம்,
    பச்சை மிளகாய் - 2,
    வெங்காயம் - 1,
    புளிக்காத தயிர் -1 கப்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - அலங்கரிக்க.

    தாளிக்க :

    கடுகு,
    உளுந்து,
    கறிவேப்பிலை,
    பெருங்காயம்



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிருடன் உப்பு கலந்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் சேர்த்து, நன்றாக கிளறவும்.

    இந்த கலவையை தயிருடன் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×