search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poriyal"

    சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - ஒன்று,
    உருளைக்கிழங்கு - 2,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    உருளைக்கிழங்கைத் தோல் சீவி குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.

    வேக வைத்த உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    குடைமிளகாயின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டுச் சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் குடைமிளகாயைச் சேர்த்து லேசாக நிறம் மாறாமல் வதக்கவும். குடைமிளகாய் நன்றாக வேகக்கூடாது.

    உருளைக்கிழங்கு நன்கு பொன்னிறமாக வதங்கியதும் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா ரெடி.

    குறிப்பு: குடமிளகாயை மற்ற காய்கறிகளைப் போல் அதிக நேரம் சமைக்காமல் லேசாக வதக்கினால் அதன் சத்துகள் முழுவதுமாகக் கிடைக்கும்.

    இந்தப் பொரியல் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற சைடிஷ். மிளகுத்தூளுக்குப் பதிலாக, சாம்பார் பொடி சேர்த்து இதைச் செய்து எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதங்களுக்கு சைடிஷ்ஷாகப் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரெட்டில் பிரெட் பட்டர் ஜாம், பிரெட் சென்னா, சான்விச் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பிரெட்டில் பொரியல் செய்வது எப்படி என்று பாக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 15
    நெய் - 50 கிராம்
    தக்காளி - 2
    குடை மிளகாய் - 1
    இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மல்லி தூள் - 1 ஸ்பூன்

    தாளிக்க...

    கிராம்பு - 1
    ஏலக்காய் - 1
    பட்டை - 1 சிறிய துண்டு
    சோம்பு - ½ ஸ்பூன்



    செய்முறை :

    பிரெட்டை ஓரங்களை நீக்கி விட்டு துண்டுகளா வெட்டி கொள்ளவும்.

    குடைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு தாளித்து பின் இஞ்சி விழுது சேர்தது வதக்கிய பின்னர் தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது கிளறி அதில் பிரெட் துண்டுகளை சேர்த்து லேசாக கிளறி எடுக்கவும்.

    இதில் சிறிது சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    சூப்பரான பிரெட் பொரியல் ரெடி.

    தேவைப்பட்டால் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பிரெட் பொரியலை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஏராளமான சத்துகள் வெண்டைக்காயில் அடங்கியுள்ளன. இன்று சுவையான வெண்டைக்காய் பொரியல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 1/4 கிலோ,
    வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - 2,
    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
    கடுகு - 1/4 டீஸ்பூன்,
    உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,
    வரமிளகாய் - 1,
    பூண்டு - 2 பல்,
    தேங்காய் துருவியது - 3 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை

    முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, அதனை ஒரு துணியால் துடைத்து விட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு போட்டு தாளிக்க வேண்டும்.

    பின்பு அதில் மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமானதும், அதில் நறுக்கிய வெண்டைக்காய் போட்டு கிளறி, வெண்டைக்காய் வேகும் வரை அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.

    வெண்டைக்காய் வெந்ததும், அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    இறுதியில் அத்துடன் துருவி வைத்துள்ள தேங்காய் போட்டு கிளறி இறக்கி விட வேண்டும்.

    சூப்பரான வெண்டைக்காய் பொரியல் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கோவக்காய் பொரியல். இன்று இந்த பொரியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோவக்காய் - அரை கிலோ,
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
    உப்பு - தேவைக்கேற்ப.

    அரைக்க :

    தேங்காய் - ஒரு சில்லு,
    வரமிளகாய் - 2,
    சின்ன வெங்காயம் - 4,

    தாளிக்க:

    எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை



    செய்முறை :

    அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    கோவக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்த பின்னர் நீளமாக நறுக்கிய கோவக்காயை சேர்த்து வதக்கவும்.

    கோவக்காய் அரை வேக்காடு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

    தேங்காய் மற்றும் வெங்காயத்தின் பச்சை வாசனை அடங்கியதும், அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சுவையான கோவக்காய் பொரியல் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×