search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poondi madha"

    தஞ்சை அருகே பூண்டி மாதா பேராலயத்தில் உலக நன்மைக்காக புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை அருகே பூண்டி மாதா பேராலயத்தில் உலக நன்மைக்காக புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அருட்தந்தை அற்புதராஜ் தலைமையில் அருள் பொழிவு திருப்பலி நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட புதுமை மாதா சொரூபம் ஆலயத்தை சுற்றி வந்தது. இதை தொடர்ந்து இரவு ஜெப வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    நிகழ்ச்சியில் பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைசாமி உதவி பங்குதந்தையர்கள், ஆன்மிக தந்தையர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி இளையோர் பணிக்குழு செயலாளர் அற்புதராஜ் புதுமை இரவு வழிபாட்டினை நடத்தினார்.
    பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான புதுமை இரவு வழிபாடு நடந்தது.
    உலக நன்மைக்காகவும், பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான புதுமை இரவு வழிபாடு நடந்தது.

    இதையொட்டி நடைபெற்ற திருப்பலியில் வெள்ளக்குளம் பங்குத்தந்தை ராபர்ட், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜேம்ஸ், ஜெயன், ஆன்மிக தந்தை அருள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பூண்டி மாதா தேர்பவனி நடைபெற்றது.
    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டியில் மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலய ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தினை தொடர்ந்து நவ நாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை கொடி ஊர்வலம், சிறு சப்பர பவனியுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    பூண்டி மாதா பேராலயத்தில் பங்குத்தந்தையர்களாக பணியாற்றி மறைந்து, பூண்டிபேராலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அருட்தந்தையர்கள் லூர்துசேவியர் மற்றும் ராயப்பர் அடிகளார் நினைவு திருப்பலி நேற்று காலை 6 மணிக்கு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் மரியா-அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நடைபெற்றது.

    இந்த திருப்பலியில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டிமாதாபேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் அமலதாஸ், எடிசன்ராஜ் மற்றும் மறைமாவட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர். திருப்பலி நிறைவடைந்தவுடன் குடந்தை பெஸ்கி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இரவு 10 மணிக்கு மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது. தேர்பவனியை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார். தேர்பவனி தொடங்கியதும் வாணவேடிக்கை நடைபெற்றது. தேர்பவனியின் போது பக்தர்கள் தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மரியா- புதியஏவாள் என்ற பெயரில் திருப்பலி நிறைவேற்றப்படுவதுடன் பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். 
    ×