search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pool"

    • ரூ.2.85 கோடி மதிப்பிலான மீன்பிடி இறங்கு தளம், வலை பின்னும் தளம், ஏல கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
    • கொடியம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளிகள், குளம் கட்டுமான பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் 2000-க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ரூ.2.85 கோடி மதிப்பிலான மீன்பிடி இறங்கு தளம், வலை பின்னும் தளம், ஏல கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் மேற்குவ ங்கம் நேஷனல் என்வராயில்மெண்ட் வைல்டு லைப் சொசைட்டி மூலம் சதுப்புநில காடுகள் (மாங்குரோவ் காடுகள்) விரிவாக்கம் செய்வதற்கான இடம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் லலிதா படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து கொடிய ம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளிகள், குளம் கட்டுமான பணி ஆகியவற்றைபார்வையிட்ட ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது காவல் கண்கா ணிப்பாளர் நிஷா, மேற்கு வங்கத்தை சேர்ந்த நேஷனல் என்விரான்மென்ட் சொசைட்டியின் நிர்வாகி அஜந்தா டே, மாவட்ட கடல் சார் சட்ட அமலாக்க பிரிவு ஆய்வாளர் வெர்ஜினியா, வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    சுந்தரக்கோட்டை:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் மாதேஷ்குமார் (வயது17). இவர் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் மன்னார்குடி அருகே உள்ள அம்மா குளத்தில் குளிக்க சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மாதேஷ்குமார் குளத்தில் மூழ்கி மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த அவருடைய நண்பர்கள் கூச்சல் போட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். இதுபற்றி மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று குளத்தில் மூழ்கி மாயமான மாதேஷ் குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவர் குளத்தில் மூழ்கி பலியாகி விட்டது தெரியவந்தது. குளத்தின் ஒரு பகுதியில் கிடந்த அவருடைய உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு கரை சேர்த்தனர். இதைத் தொடர்ந்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை அருகே குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார். இதுதெடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் ராமநாயக்கன் குளத்தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் சிவன் மாதவன் (வயது 18). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவன் மாதவன் தனது நண்பர்கள் 3 பேருடன் காடம்பாடி வண்ணான் குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது சிவன்மாதவன் திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சிவன்மாதவனை குளத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே பொதுமக்கள் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி தேடினர். அப்போது சிவன்மாதவனின் உடலை மீட்டனர். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த வெளிப்பாளையம் போலீசார், சிவன்மாதவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பான புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கேரளாவில் குளத்தில் மூழ்கி பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் திருநாவாய் பகுதியை சேர்ந்தவர் காரீப். இவரது மகன் ஆசிக் அலி (16). அதே பகுதியை சேர்ந்த ஷாபி மகன் முகம்மது அர்ஷாத் (16).

    இவர்கள் இருவரும் காரத்துரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    வரும் வழியில் அங்குள்ள குளத்தில் இறங்கி குளித்தனர். அப்போது இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். அவர்கள் தங்களை காப்பாற்றும்படி சத்தம் போட்டனர்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திரூர் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்த மாணவர்கள் இருவரையும் மீட்டு திரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிறிது நேரத்தில் மாணவர்கள் இருவரும் இறந்தனர். இது குறித்து திரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருமாநல்லூர் அருகே தண்ணீரில் விழுந்த துணியை எடுக்க முயன்ற போது குளத்தில் மூழ்கி மாணவி பலியானார்.
    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூர் அருகே தண்ணீரில் விழுந்த துணியை எடுக்க முயன்ற போது குளத்தில் மூழ்கி மாணவி பலியானார். தாய்-தங்கை கண் முன்னே இந்த பரிதாபம் நடந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த பட்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரோஸி (வயது 32). இவர்களுடைய மகள்கள் பவித்ரா தர்ஷினி (10) மற்றும் வைஷாலினி (8). பட்டம்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பவித்ரா தர்ஷினி 4-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பள்ளியில் வைஷாலினி 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் நேற்று காலையில் பட்டம்பாளையத்தில் உள்ள பெரியகுளத்திற்கு ரோஸி, பவித்ரா தர்ஷினி மற்றும் வைஷாலினி ஆகிய 3 பேரும் சென்றனர். இந்த குளத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் சுமார் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீர் வழியாக முதலில் ரோஸியும், அவரை தொடர்ந்து வைஷாலினியும், பவித்ரா தர்ஷினியும் கடந்து சென்றனர். முதலில் தண்ணீரை கடந்து ரோஸியும், வைஷாலினியும் சென்று விட்டனர். இவர்களுக்கு பின்னால் சென்று கொண்டிருந்த பவித்ரா தர்ஷினி கழுத்தில் போட்டிருந்த சால் (துணி) தண்ணீரில் விழுந்தது. அதற்குள் அந்த துணி குளத்தின் நடுப்பகுதிக்கு சென்று விட்டது.

    இதையடுத்து பவித்ரா தர்ஷினி அந்த துணியை எடுக்க சென்றார். ஏற்கனவே குளத்தில் மண் அள்ளப்பட்ட இடத்தில் பள்ளம் இருப்பது தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது மாணவிக்கு தெரியவில்லை. இதையடுத்து அந்த துணியை எடுக்க முயன்றபோது திடீரென்று தண்ணீரில் மாணவி மூழ்கினாள். அப்போது “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று கூச்சல் போட்டாள். மகள் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த ரோஸி அதிர்ச்சியடைந்து அவளை காப்பாற்ற முயன்றார். அப்போது ரோஸியும் தண்ணீரில் மூழ்கினார். இருவரின் அலறல் சத்தம் கேட்டும், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ரோஸியை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பவித்ரா தர்ஷினியை மீட்க முடியவில்லை.

    இது குறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவினாசி தீயணைப்பு துறை வீரர்களும், பெருமாநல்லூர் போலீசாரும் விரைந்து சென்று பவித்ரா தர்ஷினியை தேடினார்கள். சுமார் ஒரு மணிநேரம் தேடலுக்கு பிறகு பவித்ரா தர்ஷினியின் இறந்த நிலையில் உடலை மீட்டனர். பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய்-தங்கை கண் முன்னே தண்ணீரில் மூழ்கி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×