என் மலர்

  நீங்கள் தேடியது "Pooja"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
  • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் அருள் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு மாலையணிந்து, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதியுலா வாண வேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சோழீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது
  • பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்

  புதுக்கோட்டை:

  பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கி ழமையையொட்டி 63ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளி நாளில் திருவிளக்கு பூஜை நடைபெறும். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக திருவிளக்கு பூஜை நடைபெறாத நிலையில் நடப்பாண்டுக்கான திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.

  சிவாச்சாரியார் வைரவன், கணேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் திருவிளக்கு மந்திரம் ஒதி பூஜையை வழிநடத்தினர். பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த 1001 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். பூஜையையொட்டி சோழீஸ்வரர் மற்றும் ஆவுடையநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை சோழீஸ்வரர் கோயில் திருவிளக்கு பூஜை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

  அதுபோல கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில், பரியாமருதுபட்டி பரியாமருந்தீஸ்வரர் கோயில், பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில், பாலமுருகன் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதர் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற ஆடிவெள்ளி சிறப்புவழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
  • பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.

  கோவில்பட்டி:

  கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.

  இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் கொரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாராயணன், பிரேமா முருகன், சீதா எட்டப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
  • பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் பூஜைகளை செய்தார்.

  கோவில்பட்டி:

  கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி சித்தர் பீட ஆலயத்தில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி மற்றும் காலை பூஜையும், 9 மணிக்கு கும்ப பூஜையும், 9.35-க்கு பூமாதேவி அம்பாளுக்கு 21 வகையான மாபொடி, மஞ்சள், திரவியம், பால், தேன், குங்குமம், சந்தனம் மற்றும் 21 குடங்கள் தீர்த்தம் பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் பூஜைகளை செய்தார்.இதில் சுப்பாராஜ், மாரிய ப்பன், ஆறுமுகம், கோபால கிருஷ்ணன், மாரீஸ்வரன், கதிர்காம சுப்பிரமணியன், திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்த னர். முடிவில் அன்னபிரசாதம் வழங்க ப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பூமாதேவி ஆலய விழா குழுவினர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 22-வது ஆண்டாக குழந்தை வரம் வேண்டி புத்திரகாமேட்டி சிறப்பு பூஜை நடந்தது.
  • இதில் சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்தனர்.

  ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் குழந்தை வரம் வேண்டி நடந்த யாக பூஜையில் 258 தம்பதியர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ஆரணி புதுக்காமூர் பகுதியில் அமைந்துள்ள பெரிய நாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் 22 ஆவது ஆண்டாக குழந்தை வரம் வேண்டி புத்திரகாமேட்டி சிறப்பு பூஜை நடந்தது.

  இந்த பூஜையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் 258 தம்பதியர்கள் கலந்து கொண்டனர்.இதனையொட்டி விநாயகர் பூஜை, லட்சுமி சரஸ்வதி பூஜை, நவகிரக பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட தம்பதியர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு புதுமண தம்பதியர்கள் போல அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களது பெயர்களில் சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்பட்டு யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

  இதில் சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்தனர். நிகழ்ச்சியின்போது பூஜிக்கப்பட்ட புனித நீர் கலச நீரானால் சாமிக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. பின்னர் ஆனி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டிருந்த உற்சவர் சிவன் பார்வதி சாமியை கோவில் வெளிவளாகத்தில் சிவபுராணம் பாடியபடி பக்தர்கள் வலம் வந்தனர்.

  விழாவில் ஆரணி நகர சபை தலைவர் ஏ.சி.மணி, ஆரணி ஒன்றிய குழு தலைவர் கனிமொழி சுந்தர், ஒன்றிய தி.மு.க.செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன் மற்றும் திரளான தம்பதியர், பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ம.சிவாஜி, ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முத்தையாசாமி-அய்யனார்சாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
  • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்க ளாக கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன.

  மதுரை

  மதுைர மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடகரை கிராமத்தில் முத்தையாசாமி- அய்யனார் சாமி கோவில் உள்ளது. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு விசேஷ நாட்களில் பக்தர்கள் திரண்டு வந்த சாமி தரிசனம் செய்வார்கள்.

  கோவில் திருவிழா வின்போது சுற்று வட்டார கிராம மக்கள் ஏராள மானோர் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதுண்டு. இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்த நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு அதற்கான புனரமைப்பு பணிகள் நடந்தன.

  அந்த பணிகள் முடி வடைந்த நிலையில் முத்தை யாசாமி- அய்யனார் சாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 11-ந்தேதி (திங்கட்கி ழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்துகின்றனர்.

  இந்த விழாவில் டாக்டர் அய்யம்பெருமாள், ஜெய பிரகாஷ், மோகன், வடகரை செல்வராஜ் (பெரியபூசாரி), தொழில் அதிபர் குமார், மணிநகரம் ராஜாமணி, பங்காளிகள், கிராம கமிட்டியாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்க ளாக கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
  • பூஜைப் பொருட்களில் பச்சை நிறத்தை எந்த காரணம் கொண்டும் படிய விடக்கூடாது.
  • பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை பொருட்களை மிகவும் கூர்மையானதாக வாங்கக் கூடாது.

  எல்லா விஷயத்திலும் நாள், நட்சத்திரம், கிழமை போன்றவற்றை பார்த்து செய்யும் பொழுது அதில் தடைகள், தாமதங்கள் ஏற்படுவது இல்லை. நம் முன்னோர்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்களுக்கும், ஒவ்வொரு விதமான பலன்களும் கூறிச் சென்றுள்ளனர். அந்த வகையில் விளக்கு, பூஜை சாமான் போன்றவற்றை எந்த நாளில் தேய்க்கக் கூடாது? இதனால் செல்வம் சேருவது தடைப்படுமா? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

  ஒரு குறிப்பிட்ட நாட்களில் ஒரு சில பொருட்களை வாங்கினால் நல்லது என்றும், வாங்கக் கூடாது என்றும் கூறப்படுவது உண்டு. அது போல பூஜை பொருட்களை தேய்ப்பது என்பதற்கும் ஒரு நாள், கிழமை உண்டு! அதை கவனிக்காமல் நீங்கள் இருப்பதால் உங்களுக்கு வரக்கூடிய நல்ல பலன்கள் தள்ளி செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இதை தீட்டு இருக்கும் சமயங்களில் நிச்சயம் தொடக் கூடாது. தீட்டு உள்ளவர்கள் இந்த பொருட்களை சுத்தம் செய்வதற்கு தொடக்கூடாது.

  பூஜை செய்கிற நாள் அன்று கட்டாயம் எந்த காரணத்தை கொண்டும் பூஜை பொருட்களை சுத்தம் செய்யக் கூடாது என்பது நியதி. அப்படி வேறு வழியில்லாமல் அன்றைய நாளில் நீங்கள் சுத்தம் செய்ய நேரிட்டால் சூரியன் மறைவதற்குள் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சூரியன் மறைந்த பிறகு பூஜை பாத்திரங்களை தேய்த்து, பிறகு விளக்கை ஏற்றி வழிபட்டால் அதில் எந்த பலனும் இல்லாமல் போய்விடும், மேலும் தெய்வ குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.

  பூஜை பொருட்களை நீங்கள் வியாழன் கிழமை அன்று சுத்தம் செய்வது உசிதமானது. மறுநாள் வெள்ளிக்கிழமை பூஜை செய்ய போகிறீர்கள் என்றால், வியாழன் கிழமையில் சூரியன் மறைவதற்கு முன்பே நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்த துணியால் துடைத்து பளிச்சென வைத்து விட வேண்டும். அதன் பிறகு அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு வைக்கக் கூடாது. பூஜை செய்யும் நாளான வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள், குங்குமம் வைத்து அலங்காரம் செய்து பூஜைகள் துவங்க வேண்டும். பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்த உடன் சிலர் மஞ்சள், குங்குமம் எல்லாம் வைத்து விடுவார்கள், அப்படி எல்லாம் செய்யக்கூடாது.

  விளக்கில் எண்ணெய் ஊற்றி வெகு நேரம் காத்திருக்கவும் கூடாது. எண்ணெய் ஊற்றிய பிறகு தான் திரி போட வேண்டும். திரியைப் போட்டு வைத்துவிட்டு பின்னர் எண்ணெய் ஊற்றக் கூடாது. பூஜை பாத்திரத்தை திங்கட் கிழமையிலும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம். செவ்வாய்க் கிழமையில் விளக்கை ஏற்றுபவர்கள் திங்கட் கிழமையில் பூஜை பொருட்களை சுத்தம் செய்யலாம். திங்கட் கிழமை பூஜை செய்பவர்கள் சூரியன் மறைவதற்கு முன்னர் சுத்தம் செய்து விட்டு பூஜையை துவங்கலாம்.

  வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக பூஜை பொருட்களை சுத்தம் செய்த பின்பு தான் பயன்படுத்த வேண்டும். பூஜைப் பொருட்களில் பச்சை நிறத்தை எந்த காரணம் கொண்டும் படிய விடக்கூடாது. இது குடும்பத்திற்கு தரித்திரத்தை ஏற்படுத்தும். மேலும் பூஜைப் பொருட்களை கை தவறி கீழே போடக் கூடாது. அதை கவனமாக கையாள வேண்டும். பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை பொருட்கள் வாங்கும் பொழுது மிகவும் கூர்மையானதாக வாங்கக் கூடாது. நல்ல நிலையில் இருக்கும் பொருட்களை பார்த்து தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். கூர்மையான ஆயுதங்கள் போன்று இருக்கும் பூஜை பொருட்கள் குடும்பத்திற்கு ஆகாது எனவே உடனே அதனை மாற்றிக் கொள்வது நல்லது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.
  • உணவு தானிய பயிர் விளைச்சல் அதிகரிக்கலாம் என்பதை சிவன்மலை ஆண்டவன் உணர்த்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

  காங்கயம்,

  திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோவில்களில் முக்கியமான கோவிலாகும். சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற ஸ்தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வழிபடும் புகழ்பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

  வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு இந்தக் கோவிலுக்கு உள்ளது. அது இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார்.

  அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.

  அடுத்தொரு பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும். இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையானதாகவும் இருக்கலாம். எதிர்மறையானதாகவும் இருக்கலாம்.

  முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்ட போது, அதன் பயன்பாடு வெகுவாகக் குறைந்து போனது. மண் வைத்து பூஜிக்கப்பட்டபோது நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா வெற்றி வாகை சூடியது. தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்டபோது சுனாமி பேரலை ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாயினர்.

  இவ்வாறு எந்தப் பொருள் வைக்கப் படுகிறதோ, அது ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 1 ந்தேதி முதல் கடலூர் பகுதியைச் சேர்ந்த கபில்தேவ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான ஸ்ரீபோகரின் திருவுருவப்படம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

  1-ந் தேதி வைக்கப்பட்டு 2நாட்கள் மட்டுமே பூஜிக்கப்பட்ட நிலையில் கோவை, பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான 3கிலோ விபூதி மற்றும் 7எலுமிச்சை பழங்கள் வைத்து ஏப்ரல்4-ந் தேதி முதல் பூஜிக்கப்பட்டு வந்தது.

  தற்போது பக்தர் ஒருவரின் கனவில் உத்தரவான நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.இது போல் இதற்கு முன்பாக தானியங்கள் வைத்து பூஜை செய்தபோது அதன் விளைச்சல் உயர்வு மற்றும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. தற்போது கம்பு வைத்து பூஜை செய்வது மானாவாரி நிலங்களில் அதிக அளவில் இந்த ஆண்டு சாகுபடி பணிகள் நடைபெறலாம்.

  அதன் மூலம் உணவு தானிய பயிர் விளைச்சல் அதிகரிக்கலாம் என்பதை சிவன்மலை ஆண்டவன் உணர்த்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில் தற்போது தென்மேற்கு பருவ மழை சராசரியாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்,அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கயம் சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்வது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொருளாதார ரீதியாகவும் கொடுக்கல் வாங்கல் நல்லமுறையில் நடைபெறும்.
  • புண்ணிய கால நாளை வீணாக்காமல் அவரவர் சக்திக்குத் தக்கவாறு நற்காரியங்கள் செய்து பயனடையலாம்.


  உடுமலை:

  உடுமலை திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் புதாஷ்டமி புண்ணிய காலம் நாளை (8 ந்தேதி) நடக்கிறது.

  புதன்கிழமையும் அஷ்டமி திதியும் ஒன்றாக சேரும் நாள் புதாஷ்டமி ஆகும்.இது சூரிய கிரகணத்திற்கு ஒப்பானநாள் என்பதால் அன்று செய்யப்படும் மந்திர ஜெபம், பாராயணம், மற்றும் தானம், ஆலயதரிசனம் மற்ற நாட்களில் செய்வதால் ஏற்படும் பலனை விட அதிகமான பலனைத் தரும். இது போன்ற புண்ணிய கால நாளை வீணாக்காமல் அவரவர் சக்திக்குத் தக்கவாறு நற்காரியங்கள் செய்து பயனடையலாம்.

  பொருளாதார ரீதியாகவும் கொடுக்கல் வாங்கல் நல்லமுறையில் நடைபெறும். பெருமாள் கோவிலில் 3 நெய் தீபமேற்றி தங்களுக்கு தெரிந்த விஷ்ணு ஸ்லோகங்கள் அல்லது நாமாக்களை பாராயணம் செய்து (விஷ்ணு சகஸ்ரநாமம்) பெருமாளுக்கு பச்சைப்பயறு, வெல்லம், நிவேதனம் செய்து வழிபட்டால் நிச்சயம் பொருளாதார நிலையில் உயர்வு வரும் என உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் நேற்று சூரியபூஜை நடைபெற்றது. இதில் கோபுர வாசல் வழியாக சூரிய ஒளி சிவலிங்கம் மீது விழுந்தது.
  கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் போது சூரிய பூஜை நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்த போது பூஜை நடைபெற்றது.

  அப்போது நாகேஸ்வரர், பெரியநாயகி அம்மன் மற்றும் கோவிலில் உள்ள சூரியபகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், கோவில் செயல் அலுவலர் கணேஷ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தை அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
  ராமேசுவரத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களான ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி சிவராத்திரி போன்ற நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடுவது வழக்கம். தைஅமாவாசையொட்டி நேற்று கார், வேன், பஸ் போன்றவற்றின் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர். அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

  தை அமாவாசையையொட்டி ராமர் தங்க கருட வாகனத்திலும், சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அதன் பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

  கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலின் உட்புறத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடுவதற்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதனை தொடர்ந்து சாமி-அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு நாள் முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருந்தது.

  சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் குமரேசன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, துணை சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo