search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Training School campus"

    • போலீஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு போலீசாருக்கு பல்வேறு அறிவுைரகள் வழங்கி வருகிறார்.
    • குழந்தைகள் காப்பகத்திற்கு சென்ற கமிஷனர், அங்கு வந்திருந்த போலீசாரின் குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தார்.

    கோவை :

    கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அடிக்கடி போலீஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு போலீசாருக்கு பல்வேறு அறிவுைரகள் வழங்கி வருகிறார்.

    இதுதவிர விபத்துக்களை தவிர்ப்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு, பொதுமக்களை தினந்தோறும் சந்தித்து குறைகள் கேட்பது என தொடர்ந்து பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்.மாநகரில் உள்ள காவல்நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அவர்கள் சந்தோஷமாக பொழுதை கழிக்கவும், மன அழுத்தம் நீங்கவும் கடந்த 2 வாரங்களாக போலீசார் குடும்பத்துடன் பங்கேற்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. இதில் மாநகரில் பணிபுரியும் ஏராளமான போலீசார் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று மகிழ்ச்சியாக விளையாடினர்.

    இந்த நிலையில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், போலீசாரின் குழந்தைகள் விளையா டுவதற்கு என்று கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் குழந்தைகள் காப்பகம், நூலகம், காவலர் மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.இதனை இன்று மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் குழந்தைகள் காப்பகத்திற்கு சென்ற கமிஷனர், அங்கு வந்திருந்த போலீசாரின் குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார்.

    தொடர்ந்து நூலகம், காவலர் மனமகிழ் மன்றத்திற்கு சென்ற கமிஷனர் போலீசாருடன் சேர்ந்து கேரம் விளையாடினார்.

    இங்கு அமைக்க–ப்பட்டுள்ள நூலகத்தில் ஏராளமான பொது அறிவு புத்தகங்கள், பல அறிஞர்கள் எழுதி புத்தகங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனை போலீசாரும் ஆர்வமுடன் எடுத்து படித்து வருகிறார்கள்.

    ×