search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus 1 exam"

    • முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடந்தது.
    • மாணவர்களும் தேர்வு தொடங்கும் 20 நிமிடத்திற்கு முன்பு தேர்வு மையங்களுக்கு வந்தனர்.

    கோவை,

    தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு மொத்தம் 128 மையங்களில் நடந்தது.

    இந்த தேர்வை மாவட்டத்தில் 362 பள்ளிகளை சேர்ந்த 15,630 மாணவர்கள், 18,754 மாணவிகள் என மொத்தம் 34,390 மாணவ மாணவிகள் எழுதினர். தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் அனைத்து தேர்வர்களும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டுமென அறிவு றுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி அனைத்து மாணவர்களும் தேர்வு தொடங்கும் 20 நிமிடத்திற்கு முன்பு தேர்வு மையங்களுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அந்தந்த மையங்களில் உள்ள தகவல் பலகையில் தேர்வு அறை எண், தேர்வர்கள் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நோட்டீசை பார்த்து விட்டு அறைகளுக்குள் சென்றனர். மாணவர்களின் உடமை களை சோதனை செய்த பின்னரே அறை கண்கா ணிப்பாளர்கள் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

    பிளஸ்-1 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் தேர்வை ஆர்வமுடன் வந்து எழுதினர். பின்னர் தேர்வுகள் 1.15 மணிக்கு முடிந்தது.

    தேர்வில் காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க 180 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 128 முதன்மை கண்கா ணிப்பாளர்கள், 138 துறை அதிகாரிகள், 1,800 அறை கண்காணிப்பா ளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    • சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு ஆங்கிலம் பாடத்தில் ஒரே ஒருவருக்கு 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தார்.
    • தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 2021-2022 கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது.

    இதில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 325 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 19 ஆயிரத்து 254 பேர், மாணவிகள் 20 ஆயிரத்து 227 பேர் என மொத்தம் 39 ஆயிரத்து 481 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள்.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது. அதில், 15 ஆயிரத்து 879 மாணவர்களும், 19 ஆயிரத்து 109 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதன்படி பிளஸ்- 1 தேர்ச்சி சதவீதம் 88.62 சதவீதம் ஆகும். தேர்வு முடிவு அடிப்படையில் மாநிலத்தில் சேலம் மாவட்டம் 23-வது இடம் பிடித்துள்ளது. கடந்த காலங்களில் 10 முதல் 15 இடங்களுக்குள் வந்த சேலம் மாவட்டம் தற்போது 23-வது இடத்துக்கு சென்றுள்ளது.

    பிளஸ்-1 பாடங்களில் 1651 மாணவ- மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனர். அதில் பிரதான மொழிப்பாடமான ஆங்கிலம் பாடத்தில் ஒரே ஒருவர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார். கணக்கு பாடத்தில் 45 பேர், இயற்பியல்- 34 பேர், வேதியியல்- 6 பேர், உயரியல்- 24 பேர், வணிகவியல்- 23 பேர், கணக்கு பதிவியல்- 63 பேர், பொருளியல்- 21 பேர், கணினி அறிவியல்- 29 பேர், கணினி பயன்பாடு- 58 பேர், செவிலியல்- 33 பேர், வணிகக்கணிதம் மற்றும் புள்ளியல் - தலா 6 பேர் மற்றும் தொழிற்கல்வி பாடங்களில் 1,308 பேர் என மொத்தம் 1,651 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தேர்வு எழுதிய 212மாணவ-மாணவிகளில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேரும் 500 மதிப்பெண்களுக்கு மேல்50 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் ஷரண்யா ஸ்ரீ 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார்.

    தென்காசி:

    தென்காசி பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற பிளஸ்-௧ பொதுத்தேர்வில் 212 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

    பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் ஷரண்யா ஸ்ரீ 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், ஐஸ்வர்யா 587 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும் அனுஷ்யா மற்றும் சிவரஞ்சனி ஆகிய இருவரும் 582 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். தேர்வு எழுதிய 212மாணவ-மாணவிகளில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேரும் 500 மதிப்பெண்களுக்கு மேல்50 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    கணக்கு பதிவியலில் 3 மாணவர்களும் கணினி அறிவியலில் 2 மாணவர்களும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2 மாணவர்களும் இயற்பியல் பாடத்தில் 2 மாணவர்களும் பொருளியல் பாடத்தில் 1 மாணவரும் கணித பாடத்தில் 2 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    பள்ளிக்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் ஆர்.ஜெ.வி. பெல், செயலாளர் கஸ்தூரி பெல், பள்ளி முதல்வர் ராபர்ட் பென், தலைமை ஆசிரியர் ஸ்டீபன் மற்றும் அனைத்து ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.

    • புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 43 பேரில் 5 ஆயிரத்து 773 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
    • தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 802 பேரில் 7 ஆயிரத்து 721 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த மே மாதம் நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

    புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் 90.90 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் அரசு பள்ளியில் 81.97 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 142 மாணவர்கள், 7 ஆயிரத்து 703 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 845 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    இதில் 6 ஆயிரத்து 153 மாணவர்கள், 7 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 43 பேரில் 5 ஆயிரத்து 773 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 802 பேரில் 7 ஆயிரத்து 721 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    புதுவையில் மட்டும் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய 5 ஆயிரத்து 451 பேரில் 4 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 15 பேரில் 6 ஆயிரத்து 954 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    காரைக்காலில் மட்டும் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய ஆயிரத்து 592 பேரில் ஆயிரத்து 279 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 787 பேரில் 767 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 155 அரசு, தனியார் பள்ளிகளில் 70 சதவீத பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுவையில் மட்டும் 58 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 12 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 53 அரசு பள்ளிகளில் புதுவையில் ஒரு பள்ளி மட்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

    புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் இயற்பியல் 17, வேதியியல் 4, உயிரியல் 34, கணிப்பொறி அறிவியல் 24, கணிதம் 17, பொருளியல் 23, வணிகவியல் 21, கணக்குப்பதிவியல் 43, வணிக கணிதம் 5, கணிணி பயன்பாடு 60, விலங்கியல் 2 பேர் என மொத்தம் 250 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிளஸ்-1 தேர்ச்சியில் மாணவர்களை விட மாணவியர் 10.13 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மொத்தம் 90.07 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பிளஸ்-1 தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட் டுள்ளது.

    தமிழகம்-புதுச்சேரியில் பிளஸ்-1 தேர்வு எழுதிய மொத்த மாணவ-மாணவிகள் 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7 லட்சத்து 59 ஆயிரத்து 856 பேர் ஆகும்.

    இதில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 612 மாணவிகளும் (94.99 சதவீதம்), 3 லட்சத்து 48 ஆயிரத்து 243 மாணவர்களும் (84.86 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி அடைந்துள்ளார்.

    பிளஸ்-1 தேர்ச்சியில் மாணவர்களை விட மாணவியர் 10.13 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 90.07 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த மார்ச் 2020-ல் தேர்ச்சி 96.04 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2,605. இதில் அரசு மேல்நிலைப்பள்ளி எண்ணிக்கை 103. அறிவியல் பாடத்தில் 93.73 சதவீதம், வணிகவியல் பாடப்பிரிவில் 85.73 சதவீதம், கலைப்பிரிவுகளில் 72.49 சதவீதம் தொழிற்பாட பிரிவுகளில் 76.15 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இயற்பியல் 94.56 சதவீதம், வேதியியல் 94.42 சதவீதம், உயிரியல் 95.99 சதவீதம், கணிதம் 95.56 சதவீதம், தாவரவியல் 87.98 சதவீதம், விலங்கியல் 87.96 சதவீதம், கணினி அறிவியல் 98.60 சதவீதம், கணக்குப் பதிவியல் 87.91 சதவீதம் தேர்ச்சி சதவீதமாக உள்ளது.

    100 சதவிகிதம் மதிப் பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை இயற்பியல் 714, வேதியியல் 138, உயிரியல் 383, கணிதம் 815, தாவரவியல் 3, விலங்கியல் 16, கணினி அறிவியல் 873, வணிகவியல் 821, கணக்கு பதிவியல் 2,163, பொருளியல் 637, கணினி பயன்பாடு-2,186, வணிக கணிதம் மற்றும் புள்ளியல் 291 ஆகும்.

    4,470 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதியதில் 3,899 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 99 பேர் தேர்வு எழுதியதில் 89 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்வு எழுத வராத மாணவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 677. இந்த ஆண்டு தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 376 ஆகும்.

    தஞ்சை மாவட்ட பிளஸ்-1 தேர்வு முடிவுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா வெளியிட்டார். தேர்ச்சி சதவீதம் 95.85 ஆகும். இது கடந்தை ஆண்டைவிட 4.82 சதவீதம் கூடுதலாகும். #Plus1Results
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பிளஸ் 2 , எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு போல் பிளஸ் 1 க்கும் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்வானது கடந்த ஆண்டு முதல் முறையாக நடைபெற்றது. அதன்படி பிளஸ் 1 பொது தேர்வுகள் கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை‌, தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலும் மொத்தம் 27 ஆயிரத்து 386 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 12 ஆயிரத்து 98 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 288 பேரும் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மார்ச் இறுதியில் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையினர் அறிவித்தபடி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

    தஞ்சை மாவட்ட பிளஸ்-1 தேர்வு முடிவுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா வெளியிட்டார். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் 11 ஆயிரத்து 378 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 872 பேர் என மொத்தம் 26 ஆயிரத்து 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.85 ஆகும். இது கடந்தை ஆண்டைவிட 4.82 சதவீதம் கூடுதலாகும். அதேபோல் மாநில அளவில் தஞ்சை மாவட்டம் கடந்த ஆண்டு 21 வது இடத்தை பிடித்துருந்தது. ஆனால் இந்த ஆண்டு 4 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளது.

    பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. மேலும் அரசு இணையதளத்திலும் முடிவு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவை காண மாணவர்கள் அந்தந்த பள்ளி முன்பு காலையில் இருந்தே திரண்டனர். அங்கு நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்ட மதிப்பெண் விவரங்களை பார்த்தனர். #Plus1Results
    தமிழகத்தில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. #TNResults #11thResult #Plus1Result
    சென்னை:

    தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுள்ளது.

    www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


    11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.5 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பிளஸ்1 தேர்வு எழுதிய 78 சிறைக் கைதிகளில் 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 98.08 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் 97.90 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 97.60 சதவீத தேர்ச்சியுடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. 89.29 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. #TNResults #11thResult #Plus1Result
    உயர்கல்விக்கு பிளஸ்-1 தேர்வு மார்க் தேவையில்லை என்ற அரசின் முடிவால் பிளஸ்-1 பாட திட்டத்தை தனியார் பள்ளிகள் மீண்டும் கை கழுவும் சூழ்நிலை ஏற்படும் என்று சில ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன.
    சென்னை:

    பிளஸ்-2 முடித்த பிறகு கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அங்கு முதல் வருட பாடத்திட்டத்தை கையாள்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    மேலும் மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவு தேர்விலும் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.

    பிளஸ்-1 பாட திட்டத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள் நடத்தாமல் புறக்கணித்து விட்டு அதிக தேர்ச்சிக்காக பிளஸ்-2 பாட திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததே காரணம் என தெரிய வந்தது.

    அதை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 தேர்வை பொது தேர்வாக அரசு அறிவித்தது. மேலும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மதிப்பெண்கள் சேர்த்து ஒரே மதிப்பெண் சான்றிதழாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வு அரசு பொது தேர்வாக நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிப்புக்கு தலா 600 மதிப்பெண் வீதம் தனித்தனியாக மார்க் சான்றிதழ் வழங்கப்படும்.

    மேலும் உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமே போதுமானது என்றார். தற்போதைய திட்டத்தினால் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதாகவும், பாடங்களை சரிவர படிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

    எனவே உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமே போதுமானது என உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

    இதற்கு சில ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அரசின் இத்தகைய முடிவால் பிளஸ்-1 பாட திட்டத்தை தனியார் பள்ளிகள் மீண்டும் கை கழுவும் சூழ்நிலை ஏற்படும்.

    அரசு பள்ளிகளை தவிர தனியார் பள்ளிகள் பிளஸ்-1 பாடத்திட்டத்தை விட பிளஸ்-2 பாடத்திட்டத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். ஏனெனில் பிளஸ்-2 தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் காட்டுவதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

    அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் எப்போதும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கு சமமான முக்கியத்துவம் அளித்து வந்தனர். ஆனால் தனியார் பள்ளிகள் பிளஸ்-1 பாடத்தை தவிர்த்து விட்டு பிளஸ்-2 தேர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தனர். இதனால் அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேரும் நிலை இருந்தது என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.

    மேலும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் சேர்ந்து பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் பங்கேற்கிறார்கள். அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடங்களின் வழியே தான் போட்டி தேர்வுக்கான பயிற்சியை பெற முடியும்.

    இந்த சூழ்நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படும் போது மாணவர்களால் நல்ல ஊக்கத்துடன் படிக்க இயலாது என்றும் அவர் கூறினார்.

    இருந்த போதிலும் அரசின் தற்போதைய முடிவை தனியார் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர். உயர் கல்வியில் சேர 1200-க்கு பதிலாக 600 மதிப்பெண் சான்றிதழே போதுமானது என்ற அரசின் அறிவிப்பு மாணவர்களின் மனச்சுமையை பெரிதளவு குறைக்கும் என தெரிவித்துள்ளனர். #Plus1 #Plus2 #TNMinister #Sengottaiyan
    கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் எழுதிய பிளஸ்-1 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. #PublicExam
    சென்னை:

    கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் பிளஸ்-1 தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் scan.tnd-ge.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

    இவ்விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து நாளை (புதன்கிழமை) முதல் 22-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மை கல்வி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.

    இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். #PublicExam
    வேடந்தாங்கல் அருகே பிளஸ்-1 தேர்வில் 4 பாடத்தில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மதுராந்தகம்:

    வேடந்தாங்கலை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் தீபா (வயது 16). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. இதில் தீபா 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் மனவருத்தத்தில் இருந்தார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை தீபா பள்ளிக்கு சென்று வந்தார். பள்ளியில் இருந்து வந்தது முதல் அவர் யாரிடமும் பேசவில்லை. பெற்றோர் கேட்டபோதும் எதுவும் கூற மறுத்துவிட்டார்.

    நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற தீபா திரும்பி வரவில்லை. அவரை தேடி வந்தனர்.

    இதற்கிடையே இன்று காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் தீபா பிணமாக கிடப்பது தெரிந்தது. 4 பாடங்களில் தேச்சி பெறாததால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    கோவளத்தை அடுத்த வட நெம்மேலியை சேர்ந்தவர் ‌ஷமியா (23). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 30-ந் தேதி அவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி, மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். கொத்தனார். இவரது மகள் ரபீனா (வயது 18). மேச்சேரியில் உள்ள தனது பாட்டி அம்மாசி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கோடை விடுமுறையில் ரபீனா மாதா கோவில் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    பிளஸ்- 1 தேர்வில் ரபீனா தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கூடுவாஞ்சேரியை அடுத்த காரணை புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபிநயா (14). 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டு வேலை செய்யும்படி அபினயாவை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனவேதனை அடைந்த அபினயா உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.#tamilnews
    திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த முடிந்த பிளஸ்-1 தேர்வில் 91.72 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். #PlusoneResult
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் முதல் முறையாக இந்த வருடம் பிளஸ்-1 வகுப்புக்கு அரசு தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 199 மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினர்.

    இதில் 20 ஆயிரத்து 362 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 84.01 சதவீதமும், மாணவிகள் 95.61 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 91.72 சதவீதம் ஆகும். தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வராமலேயே தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.

    தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் தொடர்ந்து பிளஸ்-2 வகுப்பில் பயிலலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு வருவதற்குள் தோல்வியடைந்த பாடங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 72 அரசு பள்ளிகளில் இருந்து 8 ஆயிரத்து 370 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7 ஆயிரத்து 71 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 84.48 சதவீதம் ஆகும். #PlusoneResult
    சேலத்தில் பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு உள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
    சேலம்:

    சேலம் சூரமங்கலம், ஆண்டிப்பட்டி மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ரவீனா (வயது 17). இவர் மேச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ரவீனா தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இன்று காலை வீட்டில் இருந்தபோது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

    இதனால் தீ உடல் முழுவதும் பற்றி எரிந்தது. வலி தாங்காமல் அவர் அலறினார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து ரவீனாவை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு உள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
    ×