search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pledge"

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முன்னதாக திருச்செந்தூரை குப்பையில்லா நகராட்சியாக மாற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், நகராட்சி ஆணையர் கண்மணி ஆலோசனையின்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரமேஷ், உறுப்பினர்கள் ஆனந்த ராமச்சந்திரன், சுதாகர், கிருஷ்ணவேணி செண்பகராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துளசி பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்டப்பணியாளர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கோவில் கடற்கரை பகுதியில் உள்ள நெகிழிகள், கடல் கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக திருச்செந்தூரை குப்பையில்லா நகராட்சியாக மாற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலர் வாள் சுடலை, துணைச்செயலர் மகராசன், செண்பகராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • என்னுடைய செயல்பாடுகள் அமையும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி மேலாண் இயக்குனர்மோகன் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

    பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு தெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்.

    சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுப் பார்வையும கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.

    சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என மேலாண்இயக்குனர் கூற அனைவரும் வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • மாணவர்கள் தங்களது வகுப்பறையில் ஆசிரியர்கள் முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் "சமூக நீதி நாள்" உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி உறுதி மொழியினை வாசித்தார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, உதவியாளர்கள் சிலுவைரோஸ் மேரி, மதன், மகாலட்சுமி வினிதா மற்றும் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களும் தங்களது வகுப்பறையில் ஆசிரியர்கள் முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

    • தூய்மையே சேவை சிறப்பு முகாம் திருப்புகலூர் வவ்வாலடியில் தொடங்கியது.
    • தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    தூய்மை பாரத இயக்க ஊரகம் விழிப்புணர்வு செயல்பாடுகளின் தூய்மையே சேவை சிறப்பு முகாம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடியில் தொடங்கியது.

    இதில் வவ்வாலடி பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டதுடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    மேலும் ஊராட்சியை தூய்மையாக வைக்க பாடுபடுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    முகாமை ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாம் வரும் அக்டோபர் 2-ம் தேதிவரை ஊராட்சி பகுதி முழுவதும் நடக்கிறது.

    அதேபோல் பனங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் கொடியசைத்து முகாமை துவக்கி வைத்தார்.

    • மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
    • நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் 74-வது நினைவு தினம் அவர் பிறந்த ஊரான நாகையில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நாகை ரெயில்வே நிலையத்திற்கு எதிரே உள்ள மறைமலை அடிகளாரின் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் தஞ்சாவூரில் வசிக்கும் மறைமலை அடிகளாரின் மகன் 76 வயதான பச்சையப்பன் , அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    இதேப்போல் நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

    அப்போது தமிழை வளர்த்த மறைமலை அடிகளாருக்கு நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், நாம் தமிழர் கட்சி நாகை பாராளுமன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் நாகை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மதியழகன், நாகை தொகுதி செயலாளர் ஆதித்தன், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிவேல், தமிழர் மீட்சி பாசறை மாவட்ட தலைவர் மதிவாணன், நாகை சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜேஷ், பொருளாளர் நாகராஜன், கீழ்வேளூர் தொகுதி தலைவர் அருள் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு இன்று தஞ்சை ரயில் நிலையம் முன்பு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் அங்கன்வாடி பணியாளர்கள் ஏராளமா னோர் கலந்துகொண்டு ஊட்டச்சத்து, ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேருவதை நான் உறுதி செய்வேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    பல்வேறு வழியாக சென்று அறிஞர் அண்ணா மண்டபத்தில் பேரணி முடிவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகர நல அலுவலர் சுபாஷ்காந்தி, தாசில்தார் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Saplings were planted in government school on Independence Day
    • தொடர்ந்து, போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஏ.எம்.சி. லயன்ஸ் சங்கம் சார்பில் ஈச்சங்கோட்டையில் உள்ள அரசினர் மேல்நி லைப்பள்ளியில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தா மரை தலைமை தாங்கினார்.

    சங்க தலைவர் லயன் மனோஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் லயன் எஸ்தர் சாந்தினி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் வீரமணி வாழ்த்துரை வழங்கினார்.

    பின்னர், சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டது.

    தொடர்ந்து, 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    பின்னர், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு 2 சீலிங் பேன்கள் வழங்கப்பட்டது.

    மாணவர்கள் நூலகத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காக நூலகத்திற்கு 50 புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, எஸ்தர் சாந்தினி ஸ்டாலின் பள்ளியில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    விழாவில் சங்க ஆலோசகர் லயன் ஸ்டாலின் பீட்டர் பாபு, செயலாளர் லயன் காயத்திரி, சங்க ஜி.எல்.டி. ஒருங்கிணைப்பாளர் லயன் அமிர்தராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சி, பரிசளிப்பு விழா நடை பெற்றது.
    • தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்துவோம் என ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ஸ்ரீராகவேந்திரா சேவா அறக்கட்டளை 2-ம் ஆண்டு விழா லஷ்மி மகாலில் நடை பெற்றது. அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    அறக்கட்டளை செய லாளர் ஜோதி காமாட்சி வரவேற்று பேசினார். தலைவர் ஜெயக்கொடி, நிர்வாக குழு நடராஜன் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, லட்சுமி ஆகியோர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தினர்.

    நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சி, பரிசளிப்பு விழா நடை பெற்றது. தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்துவோம் என ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அனைவருக்கும் மரக்கன்றுகள், துணி பைகள் வழங்கப்பட்டது.

    இதில் சிறப்பு விருந்தி னர்களாக நகராட்சி தலைவர் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மாவட்ட அரசு மருத்துவ மனை குழந்தைகள் நலசிறப்பு மருத்துவர் தேவசேனா, மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி, லட்சுமி திருமண மகால் உரிமையாளர் ஜெகதீசன் லட்சுமி பிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் பராசக்தி மேட்ச் ஒர்க்ஸ் கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எம். காய்கனி கடை உரிமையாளர் முத்துராஜன், அருண் பேக்கரி மாடசாமி, ஆஞ்சநேயர் விலாஸ் கடலை மிட்டாய் சக்திவேல், சுதர்சன் டிரேடிங் கம்பெனி தனபால், கே.என். சுப்புராஜ் நினைவு கல்வி கல்லூரி ராமச்சந்திரன், கொல்லம் சேகர், விக்னேஷ்வர் என்டர்பிரைசஸ் அசோக் மற்றும் நகராட்சி உறுப்பினர் லவராஜா, சண்முகவேல், பஜ்ரங் கணபதி ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், அரசு இயற்கை மருத்துவர் திருமுருகன், எம்.கே.எஸ். கேட்டரிங் கருப்பசாமி, வி.ஏ.ஓ. மந்திர சூடாமணி, வக்கீல்கள் முனீஸ்வரன், கார்த்திக், கார்த்திகேயன், நடராஜன், கதிரேசன், சுப்பிரமணியன், மாரிமுத்து, பாலமுருகன், தங்கராஜ், முருகன், செல்வம், சண்முக சுந்தரம், பாண்டியன், முத்து மாரியம்மன், காளிராஜ், மிலிட்டரி சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரியில் உள்ள அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களது வகுப்பு பாடவேளையில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, உதவியாளர்கள் சிலுவை ரோஸ் மேரி, மதன், மகாலட்சுமி வினிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர். மேலும் கல்லூரியில் உள்ள அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களது வகுப்பு பாடவேளையில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.

    • கோவை மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் முன்னிலையில் நிகழ்ச்சி நடந்தது.
    • 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கோவை,

    கோவையில் மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் துறை சார்பில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக இன்று அவிநாசி ரோடு பீளமேடு பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநகர போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.

    கோவை மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருட்களை தடுப்பதற்கு அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் உறுதிமொழியை முன்மொழிய அதனைத் தொடர்ந்து மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இதில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மக்காத குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
    • மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 'என் குப்பை எனது பொறுப்பு' விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் சுதா, கணேஷ், வனிதா, சதீஷ், கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் குப்பைகளை கையாளும் முறைகள் குறித்தும், மக்காத குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் மாணிக்கம் நன்றி கூறினார்.

    • அன்பகம் திருப்பதி தலைமை தாங்கி காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • தன்னலமற்ற சேவையை காமராஜர் செய்து அணைகள் பல கட்டி நீர்ப்பாசன புரட்சியை ஏற்படுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட கே.வி. ஆர்.நகர், செல்லம்நகர் மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42-வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தலைமை தாங்கி காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டியை தொடங்கி வைத்து கவுன்சிலர் அன்பகம் திருப்பதி பேசும்போது, 'தன்னலமற்ற சேவையை காமராஜர் வழங்கினார். அணைகள் கட்டி நீர்ப்பாசன புரட்சியை ஏற்படுத்தினார். அவரைப்போல் பொதுநல சேவையை மாணவ- மாணவிகள் செயல்படுத்த உறுதி ஏற்க வேண்டும்' என்றார். பின்னர் மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தலைமை ஆசிரியர் மருதையப்பன், நிர்வாகிகள் சிட்டி பழனிச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, பொன் மருதாசலம், மாரிமுத்து, தமிழன், அய்யப்ப சேவா சங்க தலைவர் சுனில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×