search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "platform"

    • பாபநாசம் நடைமேடையில் ஒரு பாலித்தீன் கவர் கிடந்தது.
    • பஸ் நிலையத்தில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகரின் நேர்மையை சக அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.

    நெல்லை:

    பாளை கக்கன்நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

    ரூ. 1 லட்சம்

    நேற்று இவர் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள பாபநாசம் நடைமேடையில் ஒரு பாலித்தீன் கவர் கிடந்தது. அதனை சண்முகசுந்தரம் எடுத்து பார்த்த போது அதில் ரூ. 1 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்தை அவர் மேலப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பணம் யாருக்கு சொந்தமானது? பணத்தை காணவில்லை என யாரேனும் புகார் செய்துள்ளார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாராட்டு

    இந்நிலையில் பஸ் நிலையத்தில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகரின் நேர்மையை சக அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.

    கதவில் புடவை சிக்கியதால் மெட்ரோ ரெயிலில் இழுத்து செல்லப்பட்டு பெண் தலையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். #MetroDoor #WomanDragged
    புதுடெல்லி:

    டெல்லியில் இந்தர்லோக் பகுதியில் அமைந்துள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர், ஜெகதீஷ் பிரசாத். இவரது மனைவி கீதா.

    கீதாவும், அவரது மகளும் நவாடா என்ற இடத்துக்கு போய் விட்டு, மெட்ரோ ரெயிலில் டெல்லி மோதி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று வந்து இறங்க முற்பட்டனர்.

    முதலில் ரெயிலில் இருந்து மகள் இறங்கினார். அவரைத் தொடர்ந்து, கீதா இறங்கிக்கொண்டிருந்தபோதே, சடாரென ரெயில் கதவு மூடிக்கொண்டது. இதில் அவரது புடவை சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக அவர் ரெயிலில் இழுத்துச்செல்லப்பட்டு, தலையில் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதை டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.

    இந்த சம்பவம் பற்றி கீதாவின் கணவர் ஜெகதீஷ் பிரசாத் கூறுகையில், “ என் மனைவியின் புடவை, ரெயில் கதவில் சிக்கியதால், அவர் ரெயிலில் இழுத்துச்செல்லப்பட்டு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பற்றி என்னை என் மகள் செல்போனில் அழைத்து தகவல் கூறினார். பயணிகளில் ஒருவர் நெருக்கடி கால பொத்தானை அழுத்தி ரெயிலை நிறுத்தி இருக்கிறார்” என குறிப்பிட்டார்.

    இந்த பரிதாப சம்பவத்தால் மோதி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று பரபரப்பு நிலவியது.
    அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தேரடி வரை சாலையின் ஓரத்தில் நடைமேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தேரடி வரை சாலையின் ஓரத்தில் பாதசாரிகளுக்காக நடைமேடை அமைக்க வேண்டும். அந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி பஸ் நிலைய பகுதிகளில் உள்ள சாலைகளிலும் நடைமேடை அமைக்க வேண்டும்.

    மேலும் நடைமேடைகளில் தடுப்பு கம்பிகளும் அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்து அரியலூர் நகரை அழகு படுத்த நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×