என் மலர்

  நீங்கள் தேடியது "Petrol diesel"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.72.99 ஆகவும் டீசல் விலை 8 காசுகள் குறைந்து 68.10 காசுகளாக உள்ளது. #PetrolPriceHike
  சென்னை :

  பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது. தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது.

  ரூ.86-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82-க்கு விற்பனை ஆனது. 80 ரூபாயை தாண்டி விற்பனையான டீசலும் ரூ.68.26 என்ற அளவுக்கு குறைந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 11-ந்தேதி வெளியாகின.  அதைத் தொடர்ந்து, 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாகத்தான் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது என்றும், இப்போது முடிவுகள் வெளியாகி விட்டதால் அவற்றின் விலை உயரக்கூடும் என்றும் பேசப்பட்டது. இதற்கு மத்தியில், சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் நேற்று முன்தினம் 2 மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் விலை திடீரென உயர்ந்தது.

  இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.72.99 ஆக விற்பனை ஆகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து 68.10 காசுகளாக உள்ளது. #PetrolPriceHike 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.74.91 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.77 காசுகளாகவும் விற்பனையாகிறது. #FuelPrice
  சென்னை:

  சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.74.91 காசுகளாவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.77 காசுகளாகவும் விற்கப்படுகிறது

  நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 32 காசுகள், டீசல் விலை 35 காசுகள் குறைந்து விற்பனையாகியது.

  தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  #FuelPrice 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறுவது உறுதி என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #ParliamentElection
  நாகர்கோவில்:

  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சுகிராமம் அருகே உள்ள கனகப்பபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

  கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக டெல்லியில் மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசி உள்ளேன். மத்திய குழு ஆய்வை முடித்துவிட்டு ஆய்வறிக்கையை சமர்ப்பித்த பிறகு அது தொடர்பாக மந்திரி சபை கூடி முடிவெடுக்கும்.


  தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறுவது உறுதி. தற்போது உள்ள காலம் கூட்டணி காலம். அ.தி.மு.க. தொடங்கிய காலம் முதல் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்ததே இல்லை. இதேபோல் தி.மு.க.வும் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்தித்து வருகிறது.

  தமிழகத்தில் கூட்டணிக்கு பழக்கப்பட்டுள்ளனர். வேறு மாநிலங்களில் இந்த நிலை இல்லை. கழகங்கள் இல்லாத தமிழகத்தை நாம் கண்டாக வேண்டும். அது வந்தால் தான் தமிழகத்தில் உச்சக்கட்ட வளர்ச்சியை காண முடியும். ஒவ்வொரு தமிழனும் இதை உணர வேண்டும்.

  அதே நேரத்தில் இன்றைய கால கட்டத்தில் தேர்தல் சூழல் என்பது கூட்டணி இல்லாமல் முடியாது. காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வந்த கட்சி தி.மு.க. ஆனால் அவர்களுடன் தான் தி.மு.க. கூட்டணி வைத்தது. தற்போது தமிழகத்தில் கூட்டணி சேர்ந்து தான் தேர்தலை அணுக வேண்டும் என்ற நிலையில் தான் அனைத்து கட்சிகளும் உள்ளன.

  பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி இருக்கும் வரை பெட்ரோல் விலை குறைந்து கொண்டே இருக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #ParliamentElection
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் பெட்ரோ, டீசல் விலையில் இன்றும் சரிவு காணப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல்-டீசல் விலையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளது. #FuelPrice
  சென்னை:

  பெட்ரோல்-டீசல் சர்வதேச விலைக்கு ஏற்ப அன்றாடம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

  இதனால் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.80-ஐ தாண்டியது, டீசல் விலை லிட்டர் ரூ.76 ஆக அதிகரித்தது. கடந்த 14-ந்தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை குறைந்து வருகிறது.

  14-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.42 ஆகவும், டீசல் ரூ.76.30 ஆகவும் இருந்தது. அதன்பிறகு 17-ந்தேதி பெட்ரோல் ரூ.79.87 ஆகவும், டீசல் ரூ.75.82 ஆகவும் குறைந்தது.

  தொடர்ந்து 40 காசு, 20 காசுகள் என குறைந்து கொண்டே வந்தது. 20-ந்தேதி பெட்ரோல் லிட்டர் ரூ.79.31-க்கும், டீசல் லிட்டர் ரூ.75.31-க்கும் விற்கப்பட்டது. நேற்று வரை ஏற்ற இறக்கம் இல்லாமல் 3 நாட்களாக இதே விலை நீடித்தது.

  இன்று பெட்ரோல்-டீசல் விலை மேலும் சரிந்தது. பெட்ரோல் விலையில் 42 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.78.46 ஆகவும், டீசல் விலையில் 44 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.74.55 ஆகவும் விற்கப்பட்டது.

  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல்-டீசல் விலையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளது. #FuelPrice
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு பிரான்சில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். #FrenchRevolution
  பாரீஸ்:

  பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மீண்டும் அதிகரிப்பதால் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என அதிபர் இம்மானுவல் மெக்ரான் அறிவித்தார்.

  இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வெகுண்டெழுந்த மக்கள் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  2034 இடங்களில் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. அதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  போராட்டக்காரர்கள் முக்கிய சாலைகளை மறித்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். ரோட்டில் கற்கள், மரங்கள் போன்றவற்றை போட்டு இருந்தனர். ஆங்காங்கே டயர்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

  பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை சம்பவங்களில் 409 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 28 பேர் போலீசார், எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு படையினரும் அடங்குவர்.

  போராட்டத்தின்போது வன்முறை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்தவர்களில் 14 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

  157 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை பிரான்ஸ் உள்துறை மந்திரி கிறிஸ்டோப் கேஸ்டனர் தெரிவித்தார்.

  இப்போராட்டத்தின் காரணமாக அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் செல்வாக்கு 25 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு பத்திரிகை பொதுமக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. அப்போது கடந்த மாதத்தை விட தற்போது மெக்ரானின் மக்கள் செல்வாக்கு மிகவும் குறைந்து இருப்பது தெரியவந்தது. #FrenchRevolution
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா முழுக்க மோடிக்கு எதிராக அலைகள் வீசி வருகிறது என்பதுதான் உண்மை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #Modi
  கம்பைநல்லூர்:

  தருமபுரி மாவட்டம் அரூரில் திருமண விழாவிற்கு வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிரூபர்களிடம் கூறியதாவது:-

  இந்திய அரசியலில் ஒரு மிக முக்கியமான கால கட்டத்தை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். பல்வேறு மொழிகள், தேசிய இனங்கள், கலாச்சாரங்கள் கொண்டிருக்கக்கூடிய இந்திய நாட்டில் ஒரே கட்சியின் ஆட்சி ஒரே மொழி, ஒரே மதம் என்கிற ஜனநாயகத்தை அழிக்கின்ற முயற்சியில் நரேந்திர மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்துத்துவா சக்திகள் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இயங்கி கொண்டிருக்கிறது.

  சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை உருவாகியிருக்கிறது. மீண்டும் ராமர் கோவில் பிரச்சனையை ஏற்படுத்தி பெரும் மோதலை உருவாக்கி, உத்தரபிரதேச தேர்தலில் தோல்வியை இடைப்பட்ட காலத்திலே சந்தித்தது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொகுதியிலேயே தோல்வி, துணை முதலமைச்சர் தொகுதியில் தோல்வி என்று அந்த கட்சி தோல்வியை சந்தித்தது. நபர் ஒருவருக்கு 15 லட்ச ரூபாய் கொடுப்பதாக பொய்யான தேர்தல் வாக்குறுதியை கூறி அன்றைக்கு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி தந்தாரோ அதே போல இப்போதும் இந்தத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற மோடி நினைக்கிறார் அது நடக்காது.

  கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும், 2 பாராளுமன்ற தொகுதியிலும் பாரதிய ஜனதா தோற்றது. எடியூரப்பா கடந்த தேர்தலில் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இப்போது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரது மகன் வெற்றி பெற்றுள்ளார்.


  எனவே இந்தியா முழுக்க மோடிக்கு எதிராக அலைகள் வீசி வருகிறது என்பதுதான் உண்மை. நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மட்டுமல்ல பாரதிய ஜனதா கட்சி ஆட்சி மீண்டும் வரக்கூடாது என சந்திரபாபு நாயுடு, சரத்பவார் ஆகியோர் முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று நாங்கள் விரும்புகின்றோம்.

  தமிழகத்தில் கட்டுக்கடங்காத ஊழல் மிகப்பெரிய அளவில் இருக்கிறது, அனைத்து துறைகளிலும் ஊழல், அமைச்சர் மீது குற்றச்சாட்டு, சிபிஐ விசாரணை, முதலமைச்சரே குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார் என்பது தமிழ்நாட்டில் நிர்வாகம் சீர்குலைந்து இருக்கிறது என்பதற்கு உதாரணமாகும்.

  மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்ரமசிங், மகேந்திர ராஜபக்சே ஆகியோர் படுகொலைகாரர்கள். சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள். மகேந்திர ராஜபக்சே மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடிய சூழல் என்பது கவலை அளித்துள்ளது.

  தமிழகத்தின் உரிமைகளை அளிக்கக்கூடிய இந்த நேரத்தில் வரக்கூடிய பாராளுமன்றத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

  தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான வெறுப்புணர்வு, மத்திய அரசுக்கு எதிரான கோப உணர்ச்சி வேகமாக ஏற்பட்டு வருகிறது.

  டீசல் விலையில் அஞ்சு பைசா, பத்து பைசா என குறைத்து மக்களை ஏமாற்ற முடியாது. இது ஒட்டகத்தின் மேலே உள்ள பாரத்தை நீக்குவது போல ஆகும். ஒரு துரும்பை தூக்கி கண்ணுக்கு முன் காட்டி கீழே போடுவது போல நரேந்திர மோடி ஈடுபட்டு வருகிறார். ரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 10-ந் தேதி ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது அனைத்து துறைகளிலும் ஆக்டோபஸ் கரங்களை போல வளைத்து தன் கைகளில் வைத்து ஆட்டி படைக்க நினைக்கும் நரேந்திர மோடி அரசு முயற்சிக்கிறது என்பதற்கு சரியான உதாரணம் ஆகும்.

  இவ்வாறு அவர் கூறினார்.  #MDMK #Vaiko #Modi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தபடி இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகளும் குறைக்கப்பட்டு வருகின்றன. இன்று 19-வது நாளாக பெட்ரோல்- டீசல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. #FuelPrice
  சென்னை:

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தபடி இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகளும் குறைக்கப்பட்டு வருகின்றன.

  இன்று (திங்கட்கிழமை) 19-வது நாளாக பெட்ரோல்- டீசல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

  சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 23 காசுகள் குறைத்து எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.61க்கு விற்கப்படுகிறது.

  டீசல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு லிட்டர் டீசல் சென்னையில் ரூ.77.34 ஆக உள்ளது.

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெட்ரோல்-டீசல் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

  டெல்லியில் சென்னையை விட பெட்ரோல்-டீசல் விலைகள் சுமார் ரூ.2 வரை குறைவாக உள்ளது. கடந்த 19 நாட்களில் தொடர்ச்சியாக விலை குறைந்ததால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.50 வரை குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #FuelPrice
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.84க்கு விற்பனையாகிறது. இதேபோன்று டீசல் விலை 18 காசுகள் குறைந்து ரூ.77.55க்கு விற்பனை செய்யப்படுகிறது. #FuelPrice #Petrol #Diesel
  சென்னை:

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.

  இந்த நிலையில் கடந்த 18ந்தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய தொடங்கியது.  இதனை அடுத்து தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக இவற்றின் விலை குறைந்துள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.

  இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.84க்கு விற்பனையாகிறது.  இதேபோன்று டீசல் விலை 18 காசுகள் குறைந்து ரூ.77.55க்கு விற்பனை செய்யப்படுகிறது. #FuelPrice #Petrol #Diesel
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல், டீசல் விலை சென்னையில் இன்று ஆறாவது நாளாக குறைந்துள்ளது. இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.53க்கு விற்கப்பட்டது. #PetrolPrice
  சென்னை:

  பெட்ரோல், டீசல் விலை சென்னையில் இன்று ஆறாவது நாளாக குறைந்துள்ளது.

  கடந்த 2 மாதமாக உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது. கச்சா எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகளாலும் இந்தியாவுக்கு சிக்கல் உருவானது.

  இந்த தடுமாற்றங்களில் இருந்து தற்போது இந்தியா மீண்டு வருகிறது. இதன் காரணமாக பெட்ரோலியம் பொருட்களின் விலைகள் குறையத் தொடங்கியுள்ளன.

  பெட்ரோல், டீசல் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) 6-வது நாளாக குறைந்துள்ளது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 11 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

  இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.53க்கு விற்கப்பட்டது. சில நிறுவனங்களின் நேரடி பங்குகளில் 84 ரூபாயாக இருந்தது.

  டீசல் விலையில் இன்று லிட்டருக்கு 7 காசுகள் குறைக்கப்பட்டன. இதனால் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.79.15க்கு விற்பனை செய்யப்பட்டது.

  இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக இந்திய எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

  கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.57ம் டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகள் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #PetrolPrice
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். #PetrolPumpsStrike #Kejriwal
  புதுடெல்லி:

  டெல்லியில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெட்ரோல் பங்குகள் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விநியோக மையங்கள் மூடப்பட்டுள்ளன.

  இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவின் மிரட்டல் காரணமாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

  இதுபற்றி டுவிட்டரில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-


  ஸ்டிரைக்கில் ஈடுபடாவிட்டால் வருமான வரித்துறை சோதனை நடக்கும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை பாஜகவினர் மிரட்டியுள்ளனர். ஸ்டிரைக்கில் ஈடுபடாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எண்ணெய் நிறுவனங்களும் மிரட்டி உள்ளன.

  நான்கு பெருநகரங்களில் டெல்லியில்தான் பெட்ரோல் டீசல் விலை குறைவு. அதிகபட்ச விலை இருந்தும்கூட மும்பையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஏனென்றால் அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  ‘பாஜக இந்த ஸ்டிரைக்கை நடத்துவதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் இதற்கு ஆதரவு அளிப்பதாகவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தனர்’ என கெஜ்ரிவால் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.  #PetrolPumpsStrike #Kejriwal
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த ஐந்து நாட்களில் பெட்ரோல் விலை 1.46 ரூபாய் குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Petrol #Diesel
  சென்னை:

  பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.

  கடந்த 5-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை சற்றே குறைந்தாலும், மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கியது.

  தொடர்ந்து 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 18-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைய தொடங்கியது. அன்று முதல் கடந்த ஐந்து நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது.  கடந்த 5 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.46 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 82 காசுகளும் குறைந்துள்ளது.

  அதன்படி, இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 32 காசுகள் குறைந்து 84 ரூபாய் 64 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் குறைந்து 79 ரூபாய் 22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

  கடந்த 5 நாட்களாக பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகத்தில் இருப்பது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #Petrol #Diesel
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin