என் மலர்
நீங்கள் தேடியது "Period Kit"
- பெண்கள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- அதிகம் உறிஞ்சக்கூடிய தன்மை பீரியட் டைம் பேண்டீகளில் இருக்கிறது.
ஸ்கூல், காலேஜ் போகும் குழந்தைகளுக்கும், அலுவலகம் செல்லும் பெண்களுக்கும் என எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் பீரியட் ஹேக்ஸ் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பீரியர் நாட்களை நினைத்தாலே மிகவும் கஷ்டமாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு இந்த ஹேக்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஹேக்ஸ்களை நீங்கள் எடுத்துக்கொண்டால் நீங்கள் அந்த நாட்களை எளிதாக கடந்துவிடலாம்.
பள்ளி மற்றும் காலேஜ் செல்லும் பெண்கள், அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் பெண்கள் என அனைவரும் ஒரு பீரியட் கிட்டை எப்போதும் கையில் வைத்துக்கொள்வது நல்லது. இந்த பீரியர் கிட்டை ஸ்லிங் பேக் எடுத்துச்செல்வது நல்லது. ஏனெனில் ஸ்லிங் பேக்காக இருந்தால் பொது இடங்களில் ரெஸ்ட் ரூம் செல்லும்போது தோள்பட்டைகளில் மாட்டுக்கொள்வதற்கு எளிதாக இருக்கும்.
பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பெண்களுக்கும் இந்த பீரியட் கிட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பீரியட் கிட்டில் 2 சானிட்டரி நாப்கின், 2 பேண்டி லைனர், நியூஸ் பேப்பர், ஒரு எக்ஸ்ட்ரா பேண்டி, அதை உருளை வரிவில் உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதுகூடவே ஒரு வாஸ்லின் மற்றும் சேஃப்டி பின், மாஸ்கிங் டேப், கடைசியாக ஒரு பிளாஸ்டிக் கவர் அவ்வளவுதான் பீரியட் கிட் ரெடி. இதனை நாம் எடுத்துபோகும் எந்த பேக்குகளிலும் வைத்துக்கொள்ளலாம்.
பீரியட் கிட்டில் உள்ள மாஸ்கிங் டேப் எதற்கு பயன்படுகிறது என்றால் பீரியட் நேரத்தில் பேண்டிகளில் நாப்கின்களை ஒட்டும்போது அதில் உள்ள விங்ஸ் விலகி வரும். மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும்போதோ அல்லது பயணம் செய்யும் போதோ, தூங்கும்போதோ இந்த மாஸ்கிங் டேப் கொண்டு நாப்கின் விங்ஸ்களை பேண்டியில் ஒட்டிவிட்டால் விங்ஸ்கள் விலகாமல் இருக்கும்.
சரி பீரியட் கிட்டில் சேஃப்டி பின் எதற்கு என்றால் பள்ளி செல்லும் பெண்குழந்தைகள் ஒயிட் கலர் யூனிபார்ம் அணிந்து செல்வர். பீரியட் நேரத்தில் லீக்கேஜ் ஆகிவிட்டால் அவர்களுக்கு பதட்டம் ஏற்படும். நிலைமையை எப்படி கையாள்வது என்று தெரியாது. எனவே சேஃப்டி பின்னை லீக்கேஜ் இருக்கும் ஸ்கட்டை மடித்து சேஃப்டி பின் மாட்டிக்கொள்ளலாம்.
பீரியட் நேரத்தில் உடலுக்கு ஓய்வு மிகவும் அவசியம். ஆனால் ஓவர் லீக்கேஜ் என்ற பயத்தினால் நிறைய பேர் தூங்காமல் விழித்து இருக்க நேரிடும். எனவே அவர்கள் பீரியட் டைம் பேண்டீஸ் பயன்படுத்தலாம். இப்போது தரமான பீரியட் டைம் பேண்டீஸ் கிடைக்கிறது. 5 நாப்கின்களில் உறிஞ்சக்கூடிய தன்மை இந்த பீரியட் டைம் பேண்டீகளில் இருக்கிறது. இதனை ஓவர் லீக்கேஜ் நாட்களிலும், பயணத்தின்போதும் பயன்படுத்தலாம்.
அதேபோல் பீரியட் நேரத்தில் நிறைய பெண்களுக்கு அதிக வயிற்றுவலி இருக்கும். எனவே அவர்கள் மாத்திரைகளை எடுத்துக்கொள்வர். அதனால் கிட்னி பாதிக்கப்படும். அவ்வாறு செய்யாமல் வயிறு வலிக்கும் நேரங்களி அவர்கள் ஹீட் பேக் தற்பொது சந்தைகளில் கிடைக்கிறது. அவர்கள் இந்த ஹீட் பேக் கொண்டு முதுகுத்தண்டுவடம் மற்றும் அடிவயிறு பகுதிகளில் ஒத்தடம் கொடுக்கலாம். அல்லது சூடான நீரில் குளிக்கலாம்.
அவ்வாறு குளிக்கும்போது தசைகள் தளர்வடைந்து வயிறு வலி குறையும். பீரியட் நேரங்களில் இரவே வெந்தயத்தை ஊறவைத்து அந்த நீருடன் சேர்த்து வெந்தயத்தையும் சேர்த்து சாப்பிட வேண்டும். ஊறவைத்து சாப்பிட்டால் கசப்பு தெரியாது.
பீரியட் வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பு இருந்தே ஒயிட் டிஸ்சார்ஜ் அதிகமாக இருக்கும். பீரியட் வந்துவிட்டதா? என்று அடிக்கடி சென்று பார்ப்பதுபோல் இருக்கும். அப்போது பேண்டி லைனர்ஸ் பயன்படுத்தலாம். இது நாப்கின்போலவே சிறிய அளவில் இருக்கும். எனவே இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முடிந்தவரை பீரியட் நேரங்களில் அலுவலகங்களுக்கு லீவ் போடுவதை தவிர்ப்பது நல்லது. வீட்டில் இருந்தால் பீரியட் பற்றிய நினைவுகளும், சோர்வும் அதிகமாக இருக்கும். நீங்கள் வேலைக்கு செல்லும் போது கவனம் திசைதிரும்புவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பீரியட் நேரங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும், கூல்டிரிங்ஸ் குடிக்க வேண்டும், சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அதனை முழுமையாக தவிர்த்துவிடுவது நல்லது. ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் சாப்பிடுவதால் வயிற்றுவலி அதிகமாகும். பீரியட் நேரங்களில் நிறைய தண்ணீர் பருக வேண்டும். நம் உடலை ஹைடேட்டடாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
பீரியட் வருவதற்கு 3 நாட்களுக்கு முன்னால் இருந்தே (பி.எம்.எஸ்.) ஃப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம் ஆரம்பித்துவிடும். இந்த நேரங்களில் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் மனதிலும் உடல் அளவிலும் பல மாற்றங்கள் இருக்கும். அதாவது அதிகமாக கோபப்படுவது, எரிச்சல் அடைவது, சோகமாக இருப்பது போன்று காணப்படுவர். இந்த நேரங்களை மனதை மென்மையாக வைத்துக்கொள்சது மிகவும் அவசியம்.
பீரியட் நேரங்களி பெண்கள் அவர்கள் பயன்படுத்தும் நாப்கின்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். நியூஸ் பேப்பர்களை பயன்படுத்தி நன்றாக மூடி டிஸ்போஸ் செய்ய வேண்டும். வீடுகளில் பயன்படுத்திய நாப்கின்களை குப்பை கவரில் போடாமல் தனியாக ஒரு பிளாஸ்டிக் கவரில் சேர்த்து போட வேண்டும். அவ்வாறு செய்தால் குப்பை எடுப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குப்பை எடுப்பவர்களும் மனிதர்கள் தான். எனவே அவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும்.






