search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people suffering"

    திருக்கனூர் பகுதியில் நேற்று நள்ளிரவு இடி - மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
    திருக்கனூர்:

    புதுவையில் பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    காலை 9 மணிக்கே வெயில் தாக்கம் தொடங்கி விடுகிறது. நேரம் செல்ல, செல்ல வெயிலின் உக்கிரம் அதிகரித்தபடியே உள்ளது. இதனால் பகல் வேளையில் வெயிலுக்கு பயந்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் புதுவையில் மழை பெய்யவில்லை. இதனால் இரவு வேளையில் ஏழை மக்கள் மற்றும் நடுத்தரமக்கள் புழுக்கத்தினால் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருக்கனூர் பகுதியில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசினாலும் மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். திருக்கனூர் கடை வீதியில் மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.

    திருக்கனூர் பகுதியில் பலத்த மழை கொட்டிய நிலையில் புதுவை நகர பகுதியில் சிறிய தூறல் மழை மட்டுமே பெய்தது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்தாகவே வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்தாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டதே என்றே கூறலாம். அந்த அளவிற்கு பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துணியை போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டு சென்று வருகின்றனர். சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.

    இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கூலிங்கிளாஸ் அணிந்து செல்கின்றனர். இந்த வெயில் கொடுமையால் ஏற்படும் தாகத்தை தீர்க்க பொதுமக்கள் பழச்சாறு, கரும்புச்சாறு, நுங்கு, தர்ப்பூசணி, இளநீர், முலாம் பழச்சாறு, மோர், கூழ் போன்றவற்றை கடைகளில் வாங்கி பருகுகின்றனர். இதனால் அந்த கடைகளில் கூட்டம் அலைமோதி, விற்பனையும் சூடுபிடித்துள்ளது. 

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களால் இந்த வெயிலை சமாளிக்க முடியவில்லை. அக்னி நட்சத்திரம் என்கிற கத்தரி வெயில் மே மாதம் 4-ந் தேதி தொடங்க இருக்கிறது. அந்த வெயிலை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என பொதுமக்கள் தற்போதே புலம்பி வருகின்றனர். 
    தரடாப்பட்டு காலனியில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு ஒன்றியம் தரடாப்பட்டு கிராம காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த காலனியில் கடந்த 1983-ம் ஆண்டு ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டப்பட்டது. அதன் பின்பு இங்கு வாழும் பொதுமக்களுக்கு பெரிய அளவில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

    கடந்த 1996-ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

    குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இனி இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்தவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டதால் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. ஆனால் மாற்று ஏற்பாடு செய்யப்படாததால் குடிநீருக்காக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, கால்வாய் வசதி போன்றவை ஏதும் செய்யப்படவில்லை.

    தரடாப்பட்டு காலனிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தரடாப்பட்டை சுற்றியுள்ள கண்ணகந்தல், நெடுங்காவாடி, கீழ்வணக்கம்பாடி, கரிப்பூர், கொழுந்தம்பட்டு ஆகிய கிராமத்தில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்காக தரடாப்பட்டில் கால்நடை மருத்துவமனை உள்ளது. ஆனால் மருத்துவமனை சரிவர செயல்படுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் மற்றும் கால்நடை மருத்துவமனை சரிவர இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×