search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pension"

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை ப்படுத்த வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

    முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    தஞ்சை ரெயிலடியில் இருந்து புதுஆற்றுப்பாலம் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    இதற்கு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் இளையராஜா, சத்யசீலன், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • ஈட்டிய விடுப்பு சரண்டர் தொகை நிலுவையில் உள்ளதை உடனே வழங்க வேண்டும்.

    சுவாமிமலை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு சரண்டர் தொகை நிறுவையில் உள்ளதை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட பொறுப்பாளர் நீலகண்டன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    இதில் கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 3 வட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

    • முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 19.4.2023 மாலை 5 மணி ஆகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விளையாட்டுத் துறை யில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஒய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.

    சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய போட்டிகளில் முதலிடம்,2-ம், 3-ம் இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

    மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளை யாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணை யத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் போன்ற தகுதியான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

    2023-ம் வருடம் ஜனவரி மாதம் (31.1.2023) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

    முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran/Masters Sports meet) வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

    இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 19.4.2023 மாலை 5 மணி ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • அகவிலைப்படி, சரண்டர் தொகையை வழங்க வேண்டும்

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட இணை செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தின் போது கால முறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், சி.பி.எஸ் யை திட்டத்தை ரத்து செய்யவேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் தொகையை வழங்கிட வேண்டும்.

    தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு வாழ்வாதார கோரிக்கைகள் இடம் பெறாததை கண்டித்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் வட்டக்கிளை செயலாளர் ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க வட்ட செயலாளர் முரளிதரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், விஜயகுமார், ஓய்வு பெற்ற வருவாய் துறை வட்ட செயலாளர் கலியமூர்த்தி, வருவாய் துறை வட்ட செயலாளர் சுந்தேரேசன், வட்ட பொருளாளர் செல்வராணி, நில அளவை துறை வட்ட சார் ஆய்வாளர் தேவதாஸ், தலைமையிடுத்து துணை வட்டாச்சியர் தமயந்தி, உதவியாளர் பிரதாப், பதிவரை எழுத்தர் ரமேஷ், மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நில அளவைத் துறை உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • ஓய்வூதிய தொகை அரசு உத்தரவுபடி வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சித்ரா தலைமை தாங்கினார்.வட்டார இணை செயலாளர் சுகுமாறன், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், முன்னாள் வட்ட செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

    ஓய்வூதிய தொகை அரசு உத்தரவுபடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.முடிவில் சத்துணவு ஊழியர் சங்க திருமருகல் ஒன்றிய தலைவர் உஷாராணி நன்றி கூறினார்.

    • கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 சம்பளம் வழங்கப்படும்.
    • 60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கிராமங்களில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வார் பேரவை, பூ கட்டுவர் பேரவையின் சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட அமைப்பாளர் கோபிநாதன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில், கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 சம்பளம் வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதனை எந்த நிபந்தனையும் இன்றி மாதம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

    60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன், கருணாகரன், பிரபாகரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோயில் பூசாரி பேரவை ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பலர் பேசினர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும் கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் பண்ணீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.துணை தலைவர் சிவசங்கர் வரவேற்றார்.

    இதைப் போல் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்கத்தினர் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
    • ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாத கருணை ஓய்வூதியம் ரூ. 4000 வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் செயல்படும் அனைத்து சங்க ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.

    ஐ.என்.டி.யூ.சி பொதுசெயலாளர் இளவரி தலைமை வகித்தார்.

    ஏ.ஜ.டி.யூ.சி சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், சி. ஐ. டி .யூ சங்க மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், பாட்டாளி சங்க தலைவர் முருகன், அம்பேத்கர் தொழிற்சங்க மாநிலத் தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

    ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாத கருணை ஓய்வூதியும் ரூ. 4000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள், சேமிப்பு நிலையங்கள், நவீன அரிசி ஆலைகள் முன்பு வருகின்ற 9-ந்தேதி ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

    இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் தரக் கட்டுப்பாடு மேலாளர் ஓய்வு வேணுகோபாலன், அன்பழகன், சிவானந்தம், மணியரசன், புவனேஸ் வரன், பாண்டியன், பழனிவேல், ராஜ்குமார், மணிமாறன், அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏஐடியூசி மாநில பொருளாளர் கோவிந்த ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
    • ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கைகள் வரும் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்ற வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒருங்கிணைப்பாளர்கள் இளவரசன், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். செல்வம், அசோக் குமார், முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் அன்பரசன் வரவேற்றார். நடைபெற்ற போராட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

    இதில் உரையாற்றிய தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான மாயவன் பேசுகையில்:-

    ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கைகள் வரும் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்ற வேண்டும்.

    கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மார்ச் 20 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நாளன்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்டி மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்படும் என்றார்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஊக்க ஓய்வூதியம் ரூ.4000 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தஞ்சை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மாவட்ட ஓய்வூதி யர்கள் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொதுச் செயலாளர் தில்லைவனம் முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.

    இதில் நுகர்பொருள் சங்க சி.ஐ.டி.யூ மண்டல செயலாளர் பாண்டித்துரை, அரசு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன், மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி, நுகர் பொருள் வாணிப கழக போராட்ட குழுவை சார்ந்த வேணுகோபாலன், முருகேசப்பிள்ளை, மாரியப்பன், தியாகராஜன், ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×