search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pension"

    • மருத்துவ காப்பீடு, ஈமச்சடங்கு ஆகியவற்றை வழங்க வேண்டும்.
    • குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்க ன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மாவட்ட பொருளாளர் உமா தலைமை வகித்தார். வீராசாமி, கமலா , ஸ்ரீமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகள் கூறியதன் படி முறையான சிறப்பு பென்சன் ரூ .6750-ஐ டி.ஏ. உடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு, ஈமச்சடங்கு ஆகியவற்றை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்ப ட்டன.

    இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர் மனோகரன், தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் ஆறுமுகம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாநில முன்னாள் செயலாளர் அம்புஜம் காமராஜ் , சங்க மாநில துணைத்தலைவர் மதிவாணன் , சங்க மாநில செயலாளர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை ஒன்றிய பொருளாளர் விஜயா நன்றி கூறினார்.

    • அரியானா முதல் மந்திரியாக மனோகர் லால் காட்டார் இருந்து வருகிறார்.
    • முதல்முறையாக திருமணம் ஆகாதவர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் அங்கு அறிமுகமாகிறது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் முதியோர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது போல் திருமணமாகாதவர்களுக்கும் பென்ஷன் அளிக்க முடிவு செய்துள்ளது மாநில அரசு.

    விரைவில், அமலுக்கு வர உள்ள இந்த பென்ஷன் பெற தகுதிகளாக சில விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, திருமணம் ஆகாதவர்கள் 45 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    அவர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரியானாவில் திருமணமாகாதவர்கள் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் மாதந்தோறும் 2,750 ரூபாய் பென்ஷன் பெற உள்ளனர்.

    தற்போது திருமணமாகாதவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    ஏற்கனவே, பெண் குழந்தைகள் மட்டும் உள்ள ஒரு வீட்டில் தாய், தந்தையர் இருவரில் ஒருவர் உயிரிழந்தாலும் பென்ஷன் வழங்கும் திட்டம் அரியானாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
    • குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் லதா வரவேற்றார்.

    இதில் மாநிலத்தலைவர் கலா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட செயலாளர் ராமதேவன், மாநில செயலாளர் சிவபழனி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடையும், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.முடிவில் மாவட்ட பொருளாளர் வேம்பு நன்றி கூறினார்.

    • கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
    • கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ் மோகன் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் பாலகுரு முன்னிலை வகித்தார்.

    தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் முத்தையன், மாவட்ட தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் நல வாரிய அட்டை உள்ள அனைவருக்கும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    பெட்ரோல், டீசல் மற்றும் சிமெண்ட், மணல், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

    முடக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

    இடம்பெயரும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், இலவச மருத்துவ உதவி, குழந்தை பராமரிப்பு சேவை, கல்வி உதவி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    • நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    விளையாட்டுத்துறையில் சர்வதேச/தேசிய அளவி லான போட்டிகளில் வெற்றி களை பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழ கத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றி ருக்க வேண்டும். மேலும் அதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

    மத்திய அரசு, பல்கலைக்கழகங்கள் நடத்திய போட்டிகள், ஒலிம்பிக் சங்கம், விளையாட்டு அமைச்சகம் நடத்திய போட்டிகளில் விளையா டியிருக்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் ஜனவரி மாதம் 58 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவ ராகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்ற வராகவும் இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய-மாநில அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுபவர்கள் விண்ணப் பிக்க முடியாது.

    மேற்கண்ட தகுதியுடை யவர்கள் www.sdat.tn.gbv.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. விடம் நாகை மாவட்ட ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்தலிங்கம், புயல் குமார், திருமாவளவன், ரவி, திருமுருகன், ராமமூர்த்தி, செந்தில் நாதன் உள்பட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்தியஅரசு அறிவிக்கும் அகவி லைப்படிக்கு இணையான தொகையை மத்திய அரசு அறிவிக்கும் தேதியிலிருந்து நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொ ண்ட ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. இதுகுறித்து அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொடுத்து பேச வைக்கப்படும் என்றார்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • கிராம நிர்வாக அலுவலர்களுக்கு காலதாமதம் இன்றி பணி வரன்முறை செய்யவேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் தாலுக்கா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சங்க தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

    கிராம நிர்வாக அலுவலர்க ளுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், வருவாய் கிராமங்களை பரப்பளவு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு காலதாமதம் இன்றி பணி வரன் முறை செய்யவேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை முழக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பூதலூர் ஒன்றிய தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் பூதலூர் வட்ட தலைவர் பெஞ்சமின் தேவராஜ், செயலாளர் அன்பரசன், பொருளாளர் அருள் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷங்க ளை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டம்.
    • போட்டிகளில் பங்கேற்று முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளி–யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.

    குறைந்தபட்ச தகுதியானது சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

    மத்தியஅரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பானது 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

    விண்ணப்–பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்–களாகவும், தமிழ்நாடு சார்பில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

    மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

    முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்தமாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி மாலை 5 மணியாகும்.

    எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மே 29-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பத்திரிகை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    2004ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. 2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய பங்களிப்பு  ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்த அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். புதிய பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். 

    இந்நிலையில், மே 29ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்ததாகவும், அக்கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு அறிக்கை பரவி வருகிறது. அந்த அறிக்கையில், 2004-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்குவதற்கு தேவையான நிதி மத்திய பட்ஜெட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர், அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

    ஆனால், வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியானது என பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) தெரிவித்துள்ளது. 

    ‘மே 29-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அடிப்படை ஆதாரமற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முடிவோ அல்லது பரிந்துரையோ மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை’ என பிஐபி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
    70 வயதாகும் ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் பென்சன் வழங்க வேண்டும் என சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டக்கிளையின் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாடு கிரட் வளாகத்தில் நடந்தது.

    வட்ட கிளை இணை செயலாளர் காமாட்சி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்  நாராயணன், கிராம உதவியாளர் சங்க தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். வட்டக்கிளை இணை செயலாளர் பாண்டியம்மாள் வரவேற்றார். 

     வட்டக்கிளைசெயலாளர் வேல்மயில் வேலைஅறிக்கை வாசித்தார். பொருளாளர் பானு அறிக்கைவாசித்தார்.   செற்குழுஉறுப்பினர்  நாராயணன்   பேசினார்.  

    70வயதான ஓய்வூதியர் களுக்கு 10சதவிகித கூடுதல் பென்சன் வழங்கவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.2ஆயிரம் சமூகநீதிக்கு எதிரானது குறைந்தபட்சம் ரூ.7500வழங்கவேண்டும். 

    மருத்துவகாப்பீடு ரூ.350 என உயர்த்தப்பட்டுள்ளது வேதனைக்குறியது. காப்பீட்டு குளறுபடிகளை சரிசெய்யவேண்டும். புதியபென்சன்திட்டத்தை ரத்துசெய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்தவேண்டும். 

    கிராம நிர்வாக அலுவலராக பதவிஉயர்வு பெற்றவர்களின் முழுபணிக்காலத்தையும் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கவேண்டும். வாடிப்பட்டி பகுதியில் அரசுகலைக்கல்லூரி அமைக்கவேண்டும். 

    அலங்காநல்லூர் பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கஉத்தவிட்டதமிழக அரசுக்கு நன்றிதெரிவிப்பது, பாலமேடு பகுதியில் காய்கனிகள் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கு அமைத்துதரவேண்டும். 

    மத்திய அரசு வழங்குவதை போல் மாநிலஅரசும் ரூ.1000 மருத்துவபடி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரலட்சுமி நன்றிகூறினார்.
    பழைய பென்சன் திட்டத்தை முதல்வர் செயல்படுத்துவார் என அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பேட்டி அளித்துள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்றுதல், அகவிலைப்படி உயர்வு, சரண்விடுப்பு, உள்ளிட்ட கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்குதல், காலிபணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.

    இதில் மாநில பொதுச் செயலாளர் செல்வம் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பழைய பென்சன் திட்டத்தை முதல்வர்  மு.க. ஸ்டாலின் அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அழைத்து பேச வேண்டும்.

    பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவதில் தற்சமயம் சிக்கல் இருப்பதாக நிதித்துறை அமைச்சர் தெரிவித்தாலும் முதல்வர் அதனை நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை உள்ளது. 

    போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடந்த முறை நடந்த கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி தெருமுனை பிரசாரம் மற்றும் ஆய்வு கூட்டங்கள் நடத்தி எதிர்ப்பை அரசுக்கு தெரிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார். 

    தர்ணா போராட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    பூசாரிகளுக்கு மாதந்தோறும் தவறாமல் ஓய்வு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    வங்கி கணக்கிற்கு ஓய்வூதியம் அனுப்ப வேண்டுமென, ஓய்வு பெற்ற கோவில் பூசாரிகள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து கோவில் பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு கூறியதாவது:-

    கிராமப்புற கோவில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம், உதவி ஆணையர் அலுவலகத்தில் கிடைத்து வந்தது. அதுவும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைத்தது. இதனால், வயதான பூசாரிகள் சிரமப்பட்டு வந்தனர். கிராமப்புற கோவில் பூசாரிகள் ஓய்வூதிய தேர்வு குழு கூட்டம் சமீபத்தில் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.

    அதில் பூசாரிகளுக்கு மாதந்தோறும் தவறாமல் ஓய்வு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தோம். இதனால் ஓய்வுபெற்ற பூசாரிகளின் வங்கி கணக்குக்கு, நேரடியாக ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகம் முழுவதும் ஓய்வூதியம் பெறும் 3,500க்கும் அதிகமான பூசாரிகள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

    ×