search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passenger train"

    குளித்தலைக்கு தாமதமாக வரும் ரெயிலால் பயணிகள் அவதியடைகின்றனர்.
    குளித்தலை:

    கரூர் ரெயில் நிலையத்திலிருந்து குளித்தலை வழியாக திருச்சி வரை தினந்தோறும் காலை பயணிகள் ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயிலில் குளித்தலை ரெயில் நிலையத்திலிருந்து குளித்தலை மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் தினசரி பயணம் செய்து வருகின்றனர். இதில் கல்லூரி மாணவ- மாணவிகள் 3 மாதங்களுக்கு ரெயில் பாஸ் எடுத்துக்கொண்டும், வேலைக்கு செல்வோர் ஒரு மாதத்திற்கு பாஸ் எடுத்துக்கொண்டும் பயணம் செய்துவருகின்றனர்.

    பஸ் கட்டண உயர்வை அடுத்து பஸ்சில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல இயலாத பலர் திருச்சிக்கு செல்வதற்கு இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் இது உள்ளது. இந்த ரெயில் கரூர் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு குளித்தலை ரெயில் நிலையத்திற்கு காலை 7.49 மணிக்கு வந்து 7.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். பல நாட்கள் காலை 8 மணிக்கு கூட இந்த ரெயில் குளித்தலைக்கு வருவதுண்டு.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கம் முதலே இந்த ரெயில் குறித்த நேரத்தில் குளித்தலை ரெயில் நிலையத்திற்கு வராமல் அதிக காலதாமதமாக வருவதாக இதில் பயணம் செய்வோர் தெரிவிக்கின்றனர். காலதாமதமாக ரெயில் வருவதால் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதுபோல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்தில் பணிக்கு செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனராம். அதிக கட்டணம் செலுத்தி பஸ்சில் பயணம் செய்யமுடியாத காரணத்தினால் தான் ரெயில் பாஸ் எடுத்து மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் ரெயிலில் சென்று வருகின்றனர். இச்சூழ்நிலையில் இந்த ரெயில் மிகவும் காலதாமதமாக வருவதால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்சில் பயணம் செய்யவேண்டிய இக்கட்டான சூழ்நிலை அனைவருக்கும் ஏற்படக்கூடும். ஆகவே கல்லூரி மாணவ- மாணவிகள் வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த பயணிகள் ரெயிலை குறித்த நேரத்தில் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே ரெயில் பயணிகளின் வலியுறுத்தலாக உள்ளது. 
    தென்னக ரெயில்வே காஞ்சீபுரம்- சென்னை கடற்கரை இடையே புதிய ரெயில் விட ஒப்புதல் அளித்தது. அதன்படி இன்று காலை முதல் புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு பணி நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் சென்று வருகிறார்கள்.

    காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு புதிய ரெயில் வண்டிகளை கூடுதலாக இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கூடுதல் ரெயில் சேவை குறித்து காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அவர் தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து காஞ்சீபுரம் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய ரெயில்களை இயக்க கோரிக்கை விடுத்து வந்தார்.

    இந்த நிலையில் தென்னக ரெயில்வே காஞ்சீபுரம்- சென்னை கடற்கரை இடையே புதிய ரெயில் விட ஒப்புதல் அளித்தது. இன்று காலை முதல் புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டது. காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். காஞ்சீபுரத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரை இந்த ரெயில் செல்கிறது.

    இதே போல சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.40-க்கு புறப்பட்டு காஞ்சீபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே செல்லும் பயணிகள் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று காரைக்குடி பொதுநல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி வள்ளல் அழகப்பர் நடையாளர் சங்கம், அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம், தொழில் வணிக கழகம், அரிமா சங்கம், ரெயில் பயணிகள் பாதுகாப்பு கழகம் ஆகிய பொதுநல சங்கத்தினர் திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான அகல ரெயில் பாதை பணி கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ரூ.700கோடி மதிப்பீட்டில் தொடங்கி நிறைவு பெற்றது. இதையொட்டி சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ரெயில் பாதையில் கடந்த மார்ச் மாதம் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, காரைக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ரெயிலை அதிகஅளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பஸ் கட்டணம் தற்சமயம் அதிகஅளவு உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், மாணவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினசரி சென்று வருகின்றனர். காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினந்தோறும் சுமார் 70 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதியில் உள்ள மாணவர்கள் காரைக்குடி மற்றும் மதுரைக்கும் கல்லூரி படிப்பிற்கு சென்று வருகின்றனர். தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிகஅளவு கட்டணம் உள்ளதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காரைக்குடி-பட்டுக்கோட்டை பயணிகள் ரெயிலை தினந்தோறும் சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டித்து இயக்கினால் அதிகஅளவில் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர். 
    ×