search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "participation"

    • தர்கா சந்தனக்கூடு விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
    • சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    பசும்பொன்

    கமுதியில் பிரசித்தி பெற்ற முஸாபர் அவுலியா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட சந்தனக்கூடு திருவிழா கடந்த 18-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு சந்தன கூடு திருவிழா நடைபெற்றது. முன்னதாக கமுதி- சுந்தரபுரம் தைக்கா வீட்டில் இருந்து இந்த சந்தன கூடு ஊர்வலம் புறப்பட்டது.தர்ஹா வின் நிர்வாக தலைவரும், பேரூராட்சி தலைவருமான அப்துல் வஹாப் சகாராணி மலர்களால் அலங்கரிக் கப்பட்ட சந்தன குடத்தை, அலங்கார மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூட்டில் வைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

    ஏராளமான முஸ்லிம் மற்றும் இந்துக்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தின் முன்பு இளைஞர்கள் தீப்பந் தாட்டம் சுற்றி கொண்டே சென்றனர். இரவு முழுவதும் முஸ்லிம் பஜார் மற்றும் முஸ்லிம் தெருக்கள் வழியாக சென்ற இந்த சந்தனக்கூடு ஊர்வ லம் அதிகாலை தர்ஹாவை வந்தடைந்தது. இந் நிகழ்ச்சியில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் பங்கேற்றார்.
    • அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மதுரை

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் பேய்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் கலெக்டர் சங்கீதா கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 250 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 6 ஆயிரத்து 394 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    ஊரக பகுதிகளை தன்னி றைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்க ளுக்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, சுகாதாரம் ஆகிய திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

    விவசாயிகள் தங்களது வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டு செய்வதன் மூலம் அதிக வருவாய் பெறலாம். இதற்காக அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சவுந்தர்யா, மாவட்ட சமூக நல அலுவலர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ம.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான தாக்கு தலை கண்டித்து ராமநாத புரம் மாவட்டம் தொண்டி யில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

    த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார். த.மு. மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய தலை வர் பீர் முகமது வரவேற்றார்.

    ம.ம.க. மாவட்ட செயலா ளர் வழக்கறிஞர் ஜிப்ரீ, த.மு.மு.க. மாவட்ட செயலா ளர் பொறியாளர் ஜாவித் அசாம், த.மு.மு.க. மாவட்ட துணை தலைவர் யான்பு இப்ராஹிம், ம.ம.க. மாவட்ட துணை செயலாளர்கள்.

    தொண்டி ராஜ் உபை துல்லா, நிசார் அஹமத், வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயூப் கான், இந்து தர்ம பரிபாலன சபை நிர் வாகி ராஜா, தொண்டி பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ், தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, மாவட்ட ஜமாத்துல் உலமா செயலா ளர் முகமது ஜலாலுதீன் அன்வாரி, பைத்துல் மால் தலைவர் சையது அலி ஒன்றிய ம.ம.க. செயலாளர் காமராஜ் ஜின்னா மலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

    த.மு.மு.க. மாநில செய லாளர் தொண்டி சாதிக் பாட்சா த.மு.மு.க. தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெயி னுலாப்தின் த.மு.மு.க. தலைமைக் கழகத்தின் பேச் சாளர் சனாவுல்லா , இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பாலசுப் பிரமணியன், விடுதலை சிறுத்தை கட்சி திருவாடனை ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் பேசி னர்.

    ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். த.மு.மு.க.வின் தொண்டி பேரூர் தலைவர் நன்றி கூறினார்.

    • காரைக்குடி அருகே அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே கீழாநிலைக்கோட்டையில் உள்ள அரியநாயகி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி அருகே கீழாநிலைக்கோட்டையில் அரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த

    25-ந்தேதி அனுக்ஜை, விக்னேசுவஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.வேத மந்திரங்களும் வேத பாராயணங்களும் முழங்க பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமை யில் சிவாச்சாரியார்கள் 6 கால யாக பூஜைகளை நடத்தினர். பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி., தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, திருநாவுக்கரசர் எம்.பி., தொழிலதிபர் செல்லப் பன் அம்பலம், பி.எல்.படிக்காசு அம்பலம், செல்லப்பன் வித்யா மந்திர் தாளாளர் சத்தியன், தொழிலதிபர்கள் பி.எல்.பி. பாலசுப்பிரமணியன், பி.எல்.பி. பெரியசாமி, மாங்குடி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஆர்.ஆனந்த், பள்ளத்தூர் பேரூராட்சி சேர்மன் சாந்தி சங்கர், சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன், ராஜேஷ்கண்ணன், சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை 84 நாட்டு நாட்டார்கள், அம்பலக்காரர்கள், மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    • மதுரையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தமிழகத்தில் 3,600 பார்கள் லைசென்ஸ் இல்லாமல் நடந்துள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகிய வற்றை கண்டித்தும், அமலாக்கத்து றையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசுகையில் ''தமிழ கத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகள் வெற்றி கரமாக நடைபெறு கிறது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றி வருகிறார்.

    அ.தி.மு.க. இன்னும் ஒராண்டில் ஆட்சிக்கு வர போகிறது. தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராக உள்ளனர் என்றார்''.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து செந்தில் பாலாஜி சென்றார் எனும் தகுதியை இழந்து விட்டார். டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒரு கோடி என 2 வருடத்தில் ரூ.7,200 கோடியை ஊழல் செய்து உள்ளார். செந்தில் பாலாஜி, ஊழல் குறித்து கேட்ட நமக்கே நெஞ்சுவலி வருகிறது. ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வராதா?, சென்னை மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் முதல்வர் கலைஞர் கோட்டம் திறக்க திருவாரூர் சென்று விட்டார்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை ராஜ்நாத் சிங் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் உறுதி செய்து விட்டார், அ.தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளில் ஒரு பைசா கூட மின்சார கட்டணம் உயர்த்தவில்லை. தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு போகும் வரை அதி.மு.க.வினர் உறங்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

    ஸ்டாலினுக்கு மக்கள் படும் துன்பங்கள் தெரிகிறதா? தெரியவில்லையா?, கருணாநிதி காலம் தொட்டு தி.மு.க. பொய்யை சொல்லியே ஆட்சிக்கு வந்துள்ளது, கருணாநிதி காலத்தில் நம்முடைய ஜீவாதார உரிமைகளை விட்டு கொடுத்தார், தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது,

    புதுவிதமாக கஞ்சா மிட்டாய் விற்பனைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் 3,600 பார்கள் லைசென்ஸ் இல்லாமல் நடந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வசமாக மாட்டி கொண்டார். செந்தில் பாலாஜி தன்னை பாதுகாத்து கொள்ள நெஞ்சுவலி என சொல்ல வில்லை.பைபாஸ் சர்ஜரிக்கு 3 நாள் ஓய்வு போதும். ஆனால் இவர்கள் 3 மாதம் ஓய்வு கேட்பதை பார்த்தால் சந்தேகமாக தான் இருக்கிறது.

    இந்த ஆட்சியில் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது, இந்த ஆட்சியில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பு இல்லை. அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள். இவர்களது ஆட்சியில் எந்த துறையும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

    அதி.மு.க. ஆட்சி காலத்தில் மக்கள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தார்கள், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு அதி.மு.க.விற்கு புகழை சேர்க்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
    • அரசு அலுவலர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் நாலு கோட்டை ஊராட்சி யில் அமைந்துள்ள 7 சங்கிலி தொடர் கண்மாய்களை சின்ஜென்டா நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் செயலாக்கத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் மடை சீரமைப்பு, கழுங்குகள் சீரமைப்பு, வரத்து வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால் தூர் வாருதல், கண்மாய் நீர் பிடிப்பு பகுதி தூர்வாருதல் மேலும் அனைத்து கண்மாய் கரையிலும் 1000 மரக்கன்று கள் நடுதல் போன்ற பணிகளை கடந்த ஆண்டு அப்போதைய கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததையொட்டி அதன் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன் நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண் டன், சின்ஜென்டா நிறு வன இயக்குனர் வைத்தியநாதன், தமிழ்நாடு வர்த்தக மேலாளர் ஜெயமோகன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை இயக்குனர்-மேலாளர் கொண்டராதாகிருஷ்ணா, துணைத்தலைவர் கண்ணன், துணைப்பொதுமேலாளர் ஏழுமலை, திட்டமேலாளர் கார்த்திக், சமூக ஒருங்கி ணைப்பாளர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலகர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கண்மாய் கரைகளில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    • அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்ேகற்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அரண்மனை சிறுவயலில் அ.தி.மு.க. இளைஞர்-இளம் பெண்கள் பாசறை, மகளிரணி மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேலும் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் நிர்வாகிகள் பெற்று கொண்டனர். இதில் இளைஞர்-இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், அமல்ராஜ், விவசாய ஒன்றிய செயலாளர் முருகேசன், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் ஜின்னா, இளைஞரணி ஒன்றிய செயலாளர் ராஜா, மகளிரணி ஆனந்தவல்லி, சுரேஷ், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்றார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பஸ்நிலையம் அருகே தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன், மாவட்ட அவைத்தலைவர் ஜெய பெருமாள், முனியாண்டி, முத்துராமலிங்கம், சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் கலாவதி சந்திரன், பனைக்குடி கூட்டுறவு சங்கதலைவர் ராஜா, பட்டமங்களம் கூட்டுறவு சங்கத்தலைவர் மனோகரன், வரிசையூர் வீர மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் பேசுகை யில், நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கட்டிடப்பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவா ரணம் வழங்க வேண்டும்.

    நரிக்குடி அருகே உள்ள உண்டுறுமி கிடாக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக்கழிவுகள் எரியூட்டும் நிலையத்தை நிரந்தரமாக தடை செய்து மூட வேண்டும் என்றார்.

    • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 1 கோடி பேர் பங்கேற்றனர்.
    • இந்தியாவே திரும்பி பார்க்கிற வகையில் இந்த மாநாடு அமையும்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் வார்டு எண் 94,95, 96, மதுரை கிழக்கு தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த இலக்கியேந்தல், பனைக்குளம், ராஜாக்கூர், திண்டியூர், கருப்பாயூரணி,, வெள்ளி யங்குளம், அரும்பனூர், காதக்கிணறு, புதுப்பட்டி, சிட்டம்பட்டி, பூலாம்பட்டி, கொடிக்குளம், நரசிங்கம், ஒத்தக்கடை, திருமோகூர், புது தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

    திருப்பரங்குன்றத்தில் நடந்த முகாமிற்கு திருப்ப ரங்குன்றம் கிழக்குப்பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தற்போது தி.மு.க. விழுந்து கொண்டு வருகிறது. நமக்கு இது சரியான தருணமாகும். தி.மு.க. தனது பலவீனத்தை மறைக்க உறுப்பினர் சேர்க்கையை தேடிச் செல்கிறது. ஆனாலும் யாரும் சேரவில்லை. இன்றைக்கு அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையில் மக்கள் ஆர்வமாக இணைந்து வருகின்றனர். இதன் மூலம் நாம் பலம் வாய்ந்த இயக்கமாக உள்ளோம்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்ப ரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் தலா 1 லட்சம் வீதம் 3 லட்சம் உறுப்பி னர்களை சேர்த்து விட வேண்டும். அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் எடப்பாடியாரின் கரங்களால் விருதுகள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் அனுமதி இல்லாமல் மதுபார்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும் பல லட்சம் ரூபாய் வரை சென்று கொண்டி ருக்கிறது. எத்தனை மது பார்கள் உரிமை பெற்றது? என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க, கலாச்சார மிக்க செங்கோல் வைப்பது நமக்கு பெருமையாகும்.

    வருகிற ஆகஸ்டு 20-ந் தேதி மதுரை ரிங் ரோடு அருகே 50 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் மாநாடு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இதில் ஒரு கோடி தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவே திரும்பி பார்க்கிற வகையில் இந்த மாநாடு அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவில் தி.மு.க. பங்கேற்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ பேட்டிளித்தார்.

    மதுரை

    மதுரை பரவை பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐ.டி. ரெய்டு மிக தாமதமாக நடக்கிறது. இது முன்கூட்டியே நடந்தி ருந்தால் கள்ளச்சாராய மரணம், போலி மதுவால் ஏற்பட்ட மரணம் உள்ளிட்ட வை நடந்திருக்காது. சோத னைக்கு வந்த ஐ.டி. அதிகாரிகளை தாக்குவதன் மூலம் தி.மு.க. வன்முறை கட்சி என்பதை காட்டுகிறது.

    முதல்-அமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்று பயணம் இன்ப சுற்றுலா போல தான் இருக்கிறது. அவர் முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை. முதலீடு செய்வதற்கு சென்றுள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர்., போல வித விதமான உடைகளை அணிந்து கொண்டு பின்னி எடுக்கிறார். அதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. தி.மு.க. ஒரு விளம்பர அரசு, செயல்படுகிற அரசு அல்ல.

    காவல்துறை டி.ஜி.பி.,யை சுதந்திரமாக செயல்பட விடவில்லை.அவருடைய கை கட்டப்பட்டுள்ளது. அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழ்நாட்டில் மதுவால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.

    புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்வில் தி.மு.க. பங்கேற்க வேண்டும். செங்கோல் மீது மத சாயம் பூச கூடாது. செங்கோல் விஷயத்தில் உண்மையான தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றி பெறுவதற்கு உதவாத தி.மு.க. இன்று அவர்களை திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என சொல்வது வெளிவேஷம்.

    ஐ.பி.எல்., போட்டியில் சி.எஸ்.கே தான் வெற்றி பெற வேண்டும். தோனி கோப்பையை கைப்பற்ற வேண்டும். ''தல'' என சொல்லப்படுபவர்கள் யாரும் தல இல்லை.உண்மையான தல தோனி ஜெயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்றார்.
    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கான 5-ம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் அர்த்தனாரிபாளையம், மாணிக்கம்நத்தம், பரமத்தி, வீரணம்பாளையம், புஞ்சை இடையார் (மேற்கு), வேலூர் பில்லூர்,சீராப்பள்ளி ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டாமாறுதல், வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 103 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். 

    மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவாய் தீர்வாயம் முடிவதற்குள் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது தீர்வு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார். 

    இந்நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில், மண்டல துணை தாசில்தார் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரெட்டியார்பட்டி நாராயணன் பங்கேற்றார்.
    நெல்லை:

    குமரி மாவட்டம் உடையப்பன் குடியிருப்பில் அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் முப்பெரும் விழா  நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்ன தர்மத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் அய்யாவழி சுரேஷ், முத்தூர் ஊராட்சி கழக செயலாளர் முத்தூர் நைனார், பாளை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மாயா ரகுராம், தருவை   கிளை செயலாளர் செல்லத்துரை மற்றும் அய்யாவழி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ×