search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panchayat union"

    • பொட்டல்புதூர் கிராமத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலை பார்வையிட்டார்.
    • ரூ.45.10 லட்சம் மதிப்பீட்டில் ராஜாகுடியிருப்பு முதல் கருத்தலிங்கபுரம் வரை அமைக்கப்பட்ட சாலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.

    கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு கோப்புகள், பதிவேடுகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பொட்டல்புதூர் கிராமத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலையும் பார்வை யிட்டார். தொடர்ந்து அவர் சேர்வைக்காரன்பட்டி ஊராட்சியில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை குறித்தும், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.56 லட்சம் மதிப்பீட்டில் மைலப்பபுரம் முதல் நெல்லையப்பபுரம் வரை அமைக்கப்பட்ட சாலை யையும், வெங்கடாம்பட்டி கிராம ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45.10 லட்சம் மதிப்பீட்டில் ராஜாகுடியிருப்பு முதல் கருத்தலிங்கபுரம் வரை அமைக்கப்பட்ட சாலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வெங்கடாம்பட்டி கிராம ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசன், செயலாளர் மாரியப்பன் ரவண சமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் முகம்மது உசேன், கோவிந்தப்பேரி பஞ்சாயத்து தலைவர் டி.கே. பாண்டியன், கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் . வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஸாருகலா ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
    • ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இட பற்றாக்குறை உள்ளதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

    இதையடுத்து கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ள ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய கட்டட பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை வகித்து புதிய அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் லட்சுமணன், ஒன்றிய குழு துணை தலைவர் அபிராமி அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார்.இந்த விழாவில்,ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து துறைகளை சார்ந்த ஒருங்கிணைந்த திட்ட முகாம், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
    • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், குத்தப்பாஞ்சான் ஊராட்சி, காளத்திமடம் கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாமின் மூலமாக அனைத்து துறைகளை சார்ந்த ஒருங்கிணைந்த திட்ட முகாம், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் முன்னிலை வகித்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாமினை பற்றி, பொதுமக்களுக்கு திட்ட உரையினை விளக்கி பேசினார்.

    மேலும் குத்தப்பாஞ்ச் சான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைகளின் மூலமாகவும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் குத்தபாஞ் ளசான் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணிகுமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்பு பசுபதிதேவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுதா சின்னத்தம்பி, ஒப்பந்ததாரர் கணேஷ் பாண்டியன், அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் என பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஊராட்சியில் நடைபெற்ற எல்லா வரவு செலவு கணக்குகளை பொது மக்கள் முன்பாக படிக்க வேண்டும்.
    • முன்னதாக அவர் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், ஆச்சாள்புரம் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் லலிதா கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கிராம சபை கூட்டம் என்பது அனைத்து கிராம மக்களும் வருகை தந்து கடந்த 3 மாதத்தில் என்னென்ன செய்யப்பட்டன மேலும் எப்பணிகள் மேற்கொள்ள ப்படவுள்ளது என்பது போன்ற முக்கிய பொருட்கள் தெரியப்படுத்தப்படும்.

    இதுவரை கிராம சபைக் கூட்டம் குடியராசு தினம் ஜனவரி 26, தொழிலாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 என வருடத்திற்க்கு 4 முறை நடைபெற்று வந்ததை முதலமைச்சர் தற்போது கூடுதலாக உலக தண்ணீர் தினம் மார்ச் 22 மற்றும் உள்ளாட்சி தினம் நவம்பர் 1 ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்திரவிட்டுள்ளார்கள்.

    ஆக மொத்தம் வருடத்திற்க்கு 6 முறை கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.

    கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஊராட்சியில் நடைபெற்ற எல்லா வரவு செலவு கணக்குகளை பொது மக்கள் முன்பாக படிக்க வேண்டும்.

    மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும் அரசின் முக்கிய திட்டங்களை பற்றி நன்கு அறிந்துக்கொண்டு பயன்பெற வேண்டும்.

    பெண் கல்வியை ஊக்கப்படுத்த முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்தார்கள்.

    எனவே பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை அக்கறை கொண்டு பள்ளிக்கு அனுப்பிவைத்து உயர் கல்வி பயில ஊக்கப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்பேசினார்.

    முன்னதாக அவர் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர்உமாமகேஸ்வரி சங்கர், இணை இயக்குநர் (வேளாண்மை)சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)ரமேஷ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஸ்ரீதர், கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரெஜினா ராணி, அருண்மொழி, ஆச்சாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் வினோஷா கருணாகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்புவனேஸ்வரி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர்தை யல்நாயகி கலியமூர்த்தி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • கரைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டடங்கள் சீரமைப்பு பணி 90 நாட்களில் முடிக்கப்படவேண்டும்.
    • 9 மாதம் ஆகியும் இன்னும் பணியை முடிக்கவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய தலைவர் தேன்மொழி தலைமையில் ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கலந்துகொண்டு ஒன்றிய குழு உறுப்பினர் ரவி (மதிமுக) பேசுகையில்:- கரைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டடங்கள் சீரமைப்பு பணி 90 நாட்களில் முடிக்கப்படவேண்டும். 90 நாட்களில்சீரமைப்பு பணி முடிப்பதாக கூறி வேலை எடுத்த ஒப்பந்ததாரர் 9 மாதம் ஆகியும் இன்னும் பணியை முடிக்கவில்லை. அவருக்கு புதியதாக எந்த வேலையும் கொடுக்கக்கூடாது.மேலும் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதனால் அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கல்வி பாதிப்படைந்துள்ளது. அருள்புரம் முதல் உப்பிலிபாளையம் வரையிலான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதற்காக அந்த சாலையில் சர்வே செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துமனையில் காலியாக உள்ள சமையலர், தூய்மை பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    மங்கையர்கரசி ( அதிமுக): பருவாய், காரணம்பேட்டை பகுதியில் கல்குவாரி தொழில் நிறுவனங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் நல்ல வருமாணம் கிடைத்து வருவதால் அந்த பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தடுத்து நிறுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாலசுப்பிரமணியம்( துணைத்தலைவர்): அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை புதுப்பித்து கிராம மக்கள் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பல்லடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் இரண்டரை கோடி ரூபாயில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்க தயார் நிலையில் உள்ளது என்றார்.

    • காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • காங்கேயம் காளை சிலை அமைப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் பேசியதாவது:- காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட நெய்க்காரன்பாளையம் அரசுப் பள்ளி அருகே போதைப் பொருள் பயன்பாடு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தியுள்ளோம்.மேலும் இப்பள்ளி மாணவா்களின் கற்றல் தொடா்பாக பிரச்சினை எதுவும் உள்ளதா என வட்டாரக்கல்வி அலுவலகம் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் முன்பு காங்கேயம் காளை சிலை அமைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தோம். இப்போதைக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டரிடம் இருந்து பதில் வந்துள்ளது. காளை சிலை அமைப்பது தொடா்பாக மீண்டும் அனுமதி கேட்கவுள்ளோம்.காங்கயம் ஒன்றியத்துக்குட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதற்கென தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து ரூ.2 லட்சம் செலவிட வேண்டியுள்ளது. பிரதமா் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நடைபெறும் சாலைப்பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஒப்பந்தப்புள்ளி நிறைவுற்ற பின்னரும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.ஊராட்சி பகுதிகளில் பிரதமா் திட்டத்தின்கீழ் சாலை அமைக்கப்படும்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் அடிப்படை வசதிகளை விரைவாக செயல்படுத்துவது உள்பட 15 தீர்மானங்கள் ஏகமனதுடன் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியக் கவுன்சிலா்கள் மற்றும் குடிநீா் வடிகால் வாரியம், வட்டாரக் கல்வி அலுவலகம், மின்சார வாரியம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைரீதியான அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.கவுன்சிலர்களின் கோரிக்கைகளை ஏற்று விரைவில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனியன் அதிகாரிகளை சேர்மன் கேட்டுக்கொண்டார்.

    • மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    • குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20, 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் பழங்கரை, சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இப்பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20, 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதனால் மூன்று ஊராட்சி மக்களும் சாலைமறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

    தகவல் அறிந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சரிவர தண்ணீர் கிடைக்காததால் மூன்று ஊராட்சி பகுதி மக்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். தகவல் அறிந்து குடிநீர் வடிகால் அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து மூன்று ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதியளித்தனர்.

    அதன்படி மூன்று கிராமங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது.

    • காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தியுள்ளோம்.
    • ஒப்பந்தப்புள்ளி நிறைவுற்ற பின்னரும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் பேசியதாவது:- காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட நெய்க்காரன்பாளையம் அரசுப் பள்ளி அருகே போதைப் பொருள் பயன்பாடு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தியுள்ளோம்.மேலும் இப்பள்ளி மாணவா்களின் கற்றல் தொடா்பாக பிரச்சினை எதுவும் உள்ளதா என வட்டாரக்கல்வி அலுவலகம் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் முன்பு காங்கேயம் காளை சிலை அமைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தோம். இப்போதைக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டரிடம் இருந்து பதில் வந்துள்ளது. காளை சிலை அமைப்பது தொடா்பாக மீண்டும் அனுமதி கேட்கவுள்ளோம்.காங்கயம் ஒன்றியத்துக்குட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதற்கென தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து ரூ.2 லட்சம் செலவிட வேண்டியுள்ளது. பிரதமா் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நடைபெறும் சாலைப்பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஒப்பந்தப்புள்ளி நிறைவுற்ற பின்னரும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.ஊராட்சி பகுதிகளில் பிரதமா் திட்டத்தின்கீழ் சாலை அமைக்கப்படும்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியக் கவுன்சிலா்கள் மற்றும் குடிநீா் வடிகால் வாரியம், வட்டாரக் கல்வி அலுவலகம், மின்சார வாரியம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைரீதியான அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

    • இதனை தொடர்ந்து சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது.
    • காலியாக இருந்த சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 9 -ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் தேவசேனா ராஜேந்திரன். இவர் உடல்நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது.

    காலியாக இருந்த சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 9 தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

    தேர்தலில் மறைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவசேனா ராஜேந்திரன் மகள் நிலா (வயது22) ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.அவரை எதிர்த்து வேறு எவரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால் சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவராக நிலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தராஜ் அறிவித்தார்.

    போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் நிலாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொறியியல் பட்டதாரியான நிலா 22 வயது உள்ள தமிழகத்தில் மிகவும் குறைந்த வயது ஊராட்சி மன்ற தலைவர் என்பது குறிப்பிடதக்கதாகும்.

    • ஏற்காடு ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.
    • அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

    ஏற்காடு:

    ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சாந்தவள்ளி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர் கூட்டத்தை தொடங்கிவைத்தார்.

    கூட்டத்தில் ஊராட்சி நிதியில் இருந்து செய்யப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு. பின்பு செய்யப்பட வேண்டிய பணிகளுக்கு ஒப்புதல் கோரப்பட்ட்து. ஏற்காட்டில் உள்ள ஒரு சில அரசு பள்ளிகள் மிகவும் பழுதடைந்து உள்ளதாக வட்டார கல்வி அலுவலர் ஷேக் தாவூத் தெரிவித்தார்.

    பழுதடைந்த பள்ளிகள் புதுப்பிக்க ஆவன செய்யப்படும் என்று ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார். மேலும் துணை மின் நிலையம் அமைக்க மின்சார வாரியம் சார்பில் நிலம் தர கோரிக்கை விடுத்தனர்.

    தீயணைப்பு நிலையத்திற்கு இதுவரை சொந்த கட்டிடம் இல்லாமல் இருப்பதாகவும் தீயணைப்பு நிலையம் கட்ட சுமார் 2 ஏக்கர் நிலம் தர வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் ஏற்காடு ஆணையாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைவாணிமுரளி, வருதாயிரவி மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
    கரூர்:

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, காதப்பாறை, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, கோயம்பள்ளி, சேமூர், வாங்கல் குப்புச்சிபாளையம், மண்மங்கலம், நெரூர் தெற்கு மற்றும் வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் சாலை மேம்பாடு செய்தல், சாக்கடை வசதி செய்தல், கூட்டு குடிநீர் திட்ட பணிகள் என ரூ.2 கோடியே 56 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

    பின்னர் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி அரசு காலணி-சோமூர் கல்லூப்பாளையம்- அச்சமாபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.36 லட்சத்து 55 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 3 சமுதாய கூடங்களையும், கோயம்பள்ளியில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தையும் திறந்து வைத்தல் என மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதகிளில் இன்று 13 இடங்களில் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலப்பாளையம் புலியூர் இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப்பாலத்தின் அணுகு சாலையை கரூரை சுற்றி அமையவுள்ள சுற்றுவட்டச்சாலையுடன் இணைத்து சாலை வசதி மேம்படுத்தப்படும். கோயம்பள்ளி, செல்லிபாளையம் ஊராட்சிகளில் ரூ.34 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கோயம்பள்ளி மற்றும் செல்லிபாளையத்தில் ஆதார் எண் பதிய தவறியதால் அரிசி பெற இயலவில்லை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று கோயம்பள்ளி மற்றும் செல்லிபாளையம் ஊராட்சியில் ஆதார் எண் பதியாமல் விடுபட்டுள்ள நபர்களின் குடும்ப அட்டைகளை உரிய முறையில் பதிவு செய்திட சிறப்பு முகாமினை நடத்த அமைச்சர் உத்தரவிட்டார்.

    இதில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோ, கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பரமேஸ்வரன், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் காளியப்பன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, முன்னாள் மாணவரணி தலைவர் என். தானேஷ், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×