search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "palvannanathar swamy"

    • சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் துணைக்கோவிலான கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீ ஒப்பனை அம்மாள் சமேத பால்வண்ணநாதர் சுவாமி கோவில் ஆவணிதபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் துணைக்கோவிலான கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீ ஒப்பனை அம்மாள் சமேத பால்வண்ணநாதர் சுவாமி கோவில் ஆவணிதபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிபட்டம் வீதி உலா நடந்தது. காலை 6.45 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டது.

    13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவில் வருகிற 3-ம் தேதி (சனிக்கிழமை) தேரோட்டம் நிகழ்ச்சியும், 5ம் தேதி மாலை6.20மணிக்கு மேல் 6.40மணிக்குள் ஸ்ரீ ஒப்பனை அம்மாளுக்கு முகலிங்கநாதராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் ஒப்பனை அம்மாளுக்கு பால்வண்ண நாதராக காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மதிமாரி முத்து, ஒன்றியஅவைத் தலைவர் மோகன் குமார், உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ×