search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "palayamkottai"

    • நேற்று இரவு மொட்டை மாடியில் மகனும், கீழ்தளத்தில் செல்வ பெருமாள், செல்வி ஆகியோரும் தூங்கி உள்ளனர்.
    • அந்த பகுதியில் மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

    நெல்லை:

    பாளை ஐகிரவுண்டு சரண்யா நகரை சேர்ந்தவர் செல்வ பெருமாள். இவர் பி.எஸ்.என்.எல். ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

    இவரது மனைவி செல்வி (வயது 55). இவர் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு மொட்டை மாடியில் மகனும், கீழ்தளத்தில் செல்வ பெருமாள், செல்வி ஆகியோரும் தூங்கி உள்ளனர். நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும்.

    இன்று காலை வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் பாளை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதே போல அந்த பகுதியில் மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த 3 சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • சிறிது நேரத்தில் இருதரப்பு மாணவர்களுக்கும் ஆதரவாக மேலும் சில மாணவர்கள் சேர்ந்து கொண்டனர்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

    நெல்ைல:

    பாளை சமாதானபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். நேற்று மாலை வகுப்பில் இருந்து வெளியே வந்த மாணவர்களில் 3 பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அவர்கள் இரு பிரிவாக பிரிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இருதரப்பு மாணவர்களுக்கும் ஆதரவாக மேலும் சில மாணவர்கள் சேர்ந்து கொண்டனர்.

    பின்னர் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் கும்பலாக தாக்கி கொண்டனர். இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை விலக்கிவிட்டனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடையே சமரசம் ஏற்படுத்தினர். இந்நிலையில் பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீகா மற்றும் போலீசார் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது இனி இதுபோன்று மாணவர்கள் மோதலில் ஈடுபட்டால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    கடந்த ஆண்டு இதேபள்ளியில் சில மாணவர்கள் கும்பலாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அப்ேபாதைய இன்ஸ்பெக்டர் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் திருக்குறள் எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினார். இந்நிலையில் தற்போது அந்த பள்ளியில் மீண்டும் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

    • ஆனந்தபாண்டியை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.
    • தலைமறைவாக இருந்த அருள்ராஜ் என்ற சின்ன அருணா(32) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    நாசரேத்:

    பாளை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ஆனந்த பாண்டி (வயது 51 ).

    கொலை

    இவர் நாசரேத் அருகே வைத்திலிங்கபுரததில் உள்ள உபமின் நிலையத்தில் லைன் மேன் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு அலுவலகத்தில் பணியில் இருந்தபோது ஆனந்தபாண்டியை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.

    மேலும் ஒருவர் கைது

    இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 16 வயது சிறுவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் தொடர்புடைய குணசேகரன் (28), முத்துக்குமார் (20) ஆகியோர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த அருள்ராஜ் என்ற சின்ன அருணா(32) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையிலான போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

    • பாளையில் நாளை மறுநாள் யோகா தின நிகழ்ச்சிகள் நடக்கிறது.
    • 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனர்.

    நெல்லை:

    நேரு யுவகேந்திரா, நெல்லை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 2,000 மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட யோகாசன சங்க தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர்கள் சிவசங்கர், அமல்தாஸ், செயலாளர் அழகேச ராஜா, துணைச்செயலாளர் அதிசயராஜ், செயற்குழு உறுப்பினர் சங்கர ராமசுப்பு ஆகியோர் செய்து வருகின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாவட்ட விளையாட்டு, வனத்துறை, காவல்துறை மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    இதில் மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம். கலந்துகொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து மொத்தமாக மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்ய வந்தால் அந்த பள்ளிக்கு நினைவு பரிசு மற்றும் கேடயம் உள்ளிட்டவை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்த விபரங்களை அறிய சங்க செயலாளர் அழகேசராஜாவை 9659819009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் குரூப் ‘சி‘ தபால்காரர்கள் சங்கத்தினர் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
    நெல்லை:

    அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் குரூப் ‘சி‘ தபால்காரர்கள் சங்கத்தினர் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். கோட்ட தலைவர் அழகுமுத்து தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் பாட்சா முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் ஜேக்கப்ராஜ் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.

    அஞ்சல் சேவையை பாதிக்கும் சீர்கேடுகளை உடனே சரி செய்ய வேண்டும். அனைத்து தபால் நிலையங்களுக்கும் புதிய கம்ப்யூட்டர் உபகரணங்கள் வழங்க வேண்டும். இணையதள வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

    உண்ணாவிரதத்தில் நிர்வாகிகள் கண்ணன், அனந்த கோமதி, வண்ணமுத்து, தங்கராஜ், சங்கர், முருகன், பிரபாகரன், விஜயலட்சுமி, பசுமதி, ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    பாளை அருகே குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள திருவேங்கடநாதபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது38). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரத்தினம் (32). இவர்களுக்கு அதிசயா (9), சுபஸ்ரீ (6) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    சங்கரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று அவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். மதுபோதையில் இருந்த அவர் மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சங்கரன் திடீரென அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடனே மனைவி ரத்தினம் அவரை காப்பாற்ற முயன்றார். இந்த சம்பவத்தில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் சங்கரன் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த ரத்தினத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் ரத்தினம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்-மனைவி தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    பாளை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    பாளையை அடுத்த தியாகராஜநகர் அருகேயுள்ள டி.வி.எஸ்.நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி அந்தோணியம்மாள்(வயது 79). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

    அவர்களில் ஒரு மகன் பால்பிரான்சிஸ் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக உள்ளார். இவர் பாளை கே.டி.சி.நகரில் வசித்து வருகிறார். ஞானப்பிரகாசமும், அந்தோணியம்மாளும் டி.வி.எஸ்.நகரில் வசித்து வந்தனர். நேற்று இரவு ஞானப்பிரகாசம் பணிக்கு சென்றுவிட்டார். அந்தோணியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது மகன் பால் பிரான்சிஸ் தனது தாய்க்கு போன் செய்தார். வெகுநேரம் போன் அடித்தும் போனை எடுக்கவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த பால் பிரான்சிஸ் வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கு அந்தோணியம்மாள் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) தில்லைநாகராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தோணியம்மாளை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தின்போது அந்தோணியம்மாள் கழுத்தில் கிடந்த நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால் நகைக்காக கொலை நடக்கவில்லை என போலீசார் உறுதி செய்தனர். நிலத்தகராறு அல்லது வேறு பிரச்சினைகளில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கொலை பற்றி விசாரணை நடத்தவும், கொலையாளிகளை பிடிக்கவும் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×