search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "owner"

    • சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர்.
    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவருக்கு குமார், அரவிந்தன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அரவிந்தன் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சக்தி அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் வசித்து வருகிறார். எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார் பெங்களூரில் வசிக்கும் மூத்த மகளை பார்ப்பதற்கு நேற்று மாலை அரவிந்தன் மற்றும் அவரது மனைவி ரமணி மற்றும் இளைய மகள் ஆகியோர் குடும்பத்துடன் பெங்களூ ருக்கு சென்றுள்ளனர்.  இந்நிலையில் இன்று காலை அரவிந்தன் வசிக்கும் வீட்டிற்கு சென்று தங்கராசு பார்த்துள்ளார் அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 65 ஆயிரம் பணம் திருட்டு போய் உள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் வந்த பிறகே முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.மாவட்டம் சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர்.  இவருக்கு குமார், அரவிந்தன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அரவிந்தன் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சக்தி அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் வசித்து வருகிறார். எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார் பெங்களூரில் வசிக்கும் மூத்த மகளை பார்ப்பதற்கு நேற்று மாலை அரவிந்தன் மற்றும் அவரது மனைவி ரமணி மற்றும் இளைய மகள் ஆகியோர் குடும்பத்துடன் பெங்களூ ருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அரவிந்தன் வசிக்கும் வீட்டிற்கு சென்று தங்கராசு பார்த்துள்ளார் அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்    இது குறித்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 65 ஆயிரம் பணம் திருட்டு போய் உள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் வந்த பிறகே முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.உரிமையாளர்உரிமையாளர்

    • மாயமான 159 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 159 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

    மதுரை

    மதுரை மாநகரில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் மீனாட்சி கோவில் சரகம்-12, தெற்கு வாசல்-2, திடீர் நகர்- 19, தல்லாகுளம்- 50, செல்லூர்- 26, அண்ணாநகர்-36 உள்பட 159 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.17 லட்சம் ஆகும்.

    மதுரை மாநகரில் தொலைந்து போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 159 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (தெற்கு), வனிதா (தலைமையிடம்), ஆறுமுகசாமி (போக்கு வரத்து) மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியில் வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கினர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 23). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கியதாக கூறப்படுகிறது.

     இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் , மதன் (26), ஷாஜகான் (22), முருகன் (23), ஏழுமலை (21), தமிழரசன் (20) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழிப்பறி திருடர்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று ஸ்ரீ தேவி வீட்டுக்கு சென்றபோது வீட்டில் தாமோதரன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி கிராமடை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ தேவி (45). இவரது கணவர் தாமோதரன் (47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    தாமோதரன் ஈரோடு நகரில் உள்ள கண்ணகி வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு தலையில் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனைவி ஸ்ரீதேவி கடையை கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று உணவருந்த ஸ்ரீ தேவி வீட்டுக்கு சென்றபோது வீட்டின் படுக்கை அறையில் பேன் மாட்டும் கொக்கியில் தாமோதரன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ஸ்ரீதேவி அவரை மீட்டு அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரமாதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதிரேசன் மதுபோதையில் இருந்துள்ளார்.
    • படுக்கையறையில் உள்ள தொட்டில் மாட்டும் கொக்கியில் கதிரேசன் வயரால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    ஈரோடு, ஆக. 26-

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை சின்ன பிடாரியூரைச் சேர்ந்தவர் கதிரேசன் (38). இவரது மனைவி ரமாதேவி (34). இவர்களுக்கு 11 மற்றும் 9 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கதிரேசன் சென்னிமலை பெரியார் நகரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். ரமாதேவி அவருக்கு உதவியாக ஜவுளி கடையை கவனித்து வந்தார். கதிரேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் வீட்டுக்கு சென்ற கதிரேசன் மாலை 5 மணி ஆகியும் ஜவுளி கடைக்கு வரவில்லை.

    இதையடுத்து ரமாதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதிரேசன் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது ரமாதேவி இனிமேல் குடித்துவிட்டு ஜவுளி கடைக்கு வரவேண்டாம் என கூறியதாகத் தெரிகிறது.

    அதைக்கேட்ட கதிரேசன் உடனடியாக படுக்கையறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    உடனடியாக ரமாதேவி கதிரேசனின் சகோதரர் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து படுக்கையறை ஜன்னலை உடைத்து பார்த்தபோது படுக்கையறையில் உள்ள தொட்டில் மாட்டும் கொக்கியில் கதிரேசன் வயரால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று கதிரேசனை மீட்டுப் பார்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரமாதேவி அளித்த புகாரின்பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருடப்பட்ட, காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துத்தரக்கோரி காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டன.
    • சைபா் கிரைம் காவலா்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் திருடப்பட்ட, காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துத்தரக்கோரி காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டன. இந்தப் புகாா்களின்பேரில் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் சொா்ணவள்ளி, உதவி ஆய்வாளா் சையத் ரபீக் சிக்கந்தா் மற்றும் காவலா்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினா் நவீனதொழில் நுட்பங்களுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், செல்போன்களை வாங்கி தற்போது பயன்படுத்தி வருபவா்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவா்களிடமிருந்து 108 செல்போன்கள் மீட்கப்பட்டன. திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.பிரபாகன் உத்தரவின்பேரில் இந்த செல்போன்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த 108 செல்போன்களின் மதிப்பு ரூ.16.5 லட்சமாகும். காணாமல் போன செல்போன்களை மீட்ட சைபா் கிரைம் காவல் துறையினரை மாநகர காவல் ஆணையா் பாராட்டினாா். அப்போது மாநகர காவல் துணை ஆணையா் அபினவ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 49). இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 49). இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    பத்தமடை பகுதியை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். அம்பை கிளை சிறையில் வார்ட னாக பணிபுரிந்து வரும் இவர் கடந்த மாதம் ராஜகோபாலின் நிதி நிறு வனத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது அவர் அதிக அளவில் பணம் கடனாக கேட்டதால் இவ்வளவு பெரிய தொகை என்னிடம் இல்லை என்று ராஜகோபால் தெரிவித்துள்ளார். இதனால் அங்கிருந்து லட்சுமண பெருமாள் சென்று விட்டார்.

    இந்நிலையில் கடந்த 6-ந் தேதி ராஜகோபால் தனது நண்பர்களுடன் காரில் அம்பை தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார்.

    அதன் பின்னர் கல்லி டைக்குறிச்சி ஆற்றுப்பாலம் பகுதியில் வந்த போது அங்கு வந்த லட்சுமண பெருமாள் அவரது காரை வழி மறித்துள்ளார். பின்னர் பணம் கேட்டால் கொடுத்தாக வேண்டும் என்று கூறி காரில் இருந்த ராஜகோபாலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ராஜகோபால் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் லெட்சுமண பெருமாள் மீது சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மதுரையில் 2 வீடுகளை அபகரித்து உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்குதெருவை சேர்ந்தவர் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் நாராயணன் என்ற வடிவேல் (வயது 61). இவர் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய பிரஜையாக உள்ளேன். மதுரை வளர் நகர் பகுதியில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறேன்.இங்கு எனது பெயரில் வாங்கிய இடத்தில் 2 வீடுகள் கட்டி வந்தேன்.

    இதற்காக சிறுகூடல் பட்டியை சேர்ந்த நாச்சியப்பன் என்பவரை உதவியாளராக நியமித்து அவரது வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் வரை வீடுகள் கட்டுவதற்காக அனுப்பியதுடன், அவருக்கும் மாதம்தோறும் ரூ.25 ஆயிரம் சம்பளம் கொடுத்தேன்.

    இந்த நிலையில் அவசர வேலை காரணமாக வெளிநாடு சென்ற நான் அந்த வீட்டுகளுக்குரிய சாவியை நாச்சியப்பனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டேன். இங்கு வந்து பார்த்தபோது நாச்சியப்பனும், அவரது மனைவி அருள் சசிகலாவும் என்னுடைய அனுமதியில்லாமல் 2 வீடுகளையும் அபகரித்து க்கொண்டதுடன் அதில் அத்துமீறி நுழைந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கேட்ட போது ஆபாசமாக பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின் பேரில் நாச்சியப்பன், அவரது மனைவி அருள் சசிகலா ஆகியோர் மீது மாட்டு தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மளிகை கடை உரிமையாளர் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் கொங்கு நகரை சேர்ந்தவர் பீட்டர் (46). இவர் மணிக்கூண்டு அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    இன்று காலை பீட்டர் தனது 2 மகள்களை அழைத்து கொண்டு அய்யப்பன் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் மகள்களை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அய்யப்பன் நகர் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி பீட்டர் மீது மோதியது.

    இதில் நிலைகுலைந்த அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர்.

    பின்னர் பலியான பீட்டரின் உடலை மீட்டு பரிேசாதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
    • விவசாயி இறந்துகிடந்தது குறித்து வீட்டின் உரிமையாளர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் அருகே தாளக்கரையில் சுதா என்பவரது வீட்டில் விவசாயி செல்வராஜ் என்பவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். தகவல் அறிந்த செல்வராஜின் மனைவி மற்றும் அவர்களது உறவினர்கள் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரின் அடிப்படையில் நெல்லூர் போலீசார் சுதாவை கைது செய்து செல்வராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் செல்வராஜ் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்

    • மொடக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் கேபிள் கடை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவரது மனைவி கோகிலா. இவர்கள் பெருந்துறையில் கேபிள் கடை வைத்து நடத்தி வந்தனர்.

    கார்த்திகேயனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும்அவர் தனது பெற்றோரிடம் சொத்தில் பங்கு கேட்டார். ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். கடன் தொல்லையால் கார்த்திகேயன் மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கார்த்திகேயன் வண்ணாம் பாறையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மனைவியுடன் வந்து தங்கி இருந்ததார். இதையடுத்து கோகிலா அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வீட்டில் தனியாக இருந்த கார்த்திகேயன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவையில் காணாமல் போன நாயை அதன் உரிமையாளர் பேனர் வைத்து தேடி வருகிறார். மேலும் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
    கோவை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் தீபக்(வயது 45). ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் தனது வீட்டில் 8 மாதமாக ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்தார்.

    ராய் என்று பெயரிடப்பட்ட அந்த நாய் கடந்த ஜனவரி 24-ந்தேதி வீட்டில் இருந்து காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் நாய் கிடைக்கவில்லை.

    நாய் மீது அதிக பாசம் வைத்திருந்த தீபக் தற்போது அந்த நாயை தேடி கோவை முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து தீவிரமாக தேடி வருகிறார்.

    மேலும் ஒரு டெம்போவில் நாயின் படத்துடன் கூடிய பேனர் வைத்து கோவை முழுவதும் சுற்றி வருகிறது.

    தனது நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்க இருப்பதாக உரிமையாளர் தீபக் தெரிவித்துள்ளார்.
    ×