search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Omar Abdullah"

    காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தாததால் பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #OmarAbdullah #Modi
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.

    இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



    அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடி பாகிஸ்தானிடம், பயங்கரவாதிகளிடம், ஹூரியத் அமைப்பிடம் (பிரிவினைவாத அமைப்பு) சரண் அடைந்துவிட்டார். நன்றாக செய்து விட்டீர்கள் மோடி. 56 அங்குல மார்பு தோற்றுப்போய் விட்டது” என கூறி உள்ளார்.

    மேலும், “காஷ்மீர் தேர்தல் மீது சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், உலக அரங்கில் பிரதமர் மோடி தனது தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்புவார் என நான் ஒருபோதும் கருதவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகளின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக ராஜ்நாத் சிங்குடன் உமர் அப்துல்லா ஆலோசித்தார்.
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் மிரட்டப்படுவதாகவும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாவது சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்கள் மூலம் தகவல் பரவி வருகிறது.

    குறிப்பாக, உத்தரகாண்ட மாநிலத்தில் தங்கி படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் உடனடியாக தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு உரிமையாளர்களால் மிரட்டப்படுவதாக செய்திகள் வெளியாகின.

    இதுபோன்ற அசம்பாவிதங்கள் மற்ற பகுதிகளில் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிக அக்கறைகாட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று மாலை டெல்லி வந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். பிற மாநிலங்களில் உள்ள  காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகளின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக ராஜ்நாத் சிங்குடன் உமர் அப்துல்லா சுமார் 30 நிமிடங்கள் ஆலோசித்தார்.



    தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக சந்திக்க நேரம் ஒதுக்கித்தந்த ராஜ்நாத் சிங்குக்கு நன்றி தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, காஷ்மீர் மாணவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துகளை கவனமாக கேட்டறிந்த ராஜ்நாத் சிங், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். #OmarmeetsRajnath #safetyofKashmiristudents #Kashmiristudents #PulwamaAttack
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்க அனுமதித்தது பா.ஜ.க.தான் என முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். #Omar #JKMilitancy
    ஸ்ரீநகர்:

    மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, ஜம்மு காஷ்மீரில் அதிக அளவிலான பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றிருப்பதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறியிருந்தார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை பட்டியலிட்டு ஒப்பீடு செய்தார். இதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் கதை என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக்கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    “ஜம்மு காஷ்மீரில் அதிக அளவிலான பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கொல்ல வேண்டிய அளவிற்கு பயங்கரவாதம் மற்றும் வன்முறையை மீண்டும் தலைதூக்க அவர்கள் அரசாங்கம் எப்படி அனுமதித்தது? என்கிற கதையைத்தான் உண்மையில் மந்திரி சொல்லியிருக்கிறார். நீங்கள் தெரிவித்த புள்ளி விவரங்களால் நீங்கள் வருத்தப்பட வேண்டுமே தவிர, சாதனையாக கருதக்கூடாது” என உமர் கூறியுள்ளார். #Omar #JKMilitancy
    ×