search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old woman"

    • மன்னார்குடி செங்குந்த முதலியார் தெருவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார்.
    • மோட்டார் சைக்களிவ் வந்த இருவர் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், இருள்நீக்கி பகுதியை சேர்ந்தவர் காந்திமதி (75) .

    இவர் மன்னார்குடி செங்குந்த முதலியார் தெருவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார்.

    அங்கு நேற்று மதியம் பள்ளிக்கு சென்று இருந்த பேரக்குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்களிவ் வந்த இருவர், சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் இருவரும் காந்திமதியிடம் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, வயதானவர்கள் கழுத்தில் நகை அணிந்து தனியாக செல்லக்கூடாது வழிப்பறி நடக்கிறது.

    எனவே கழுத்தில் அணிந்திருக்கும் தங்க சங்கிலியை கழட்டித் தாருங்கள்" எனக் கூறி அவரது மணிபர்ஸில் வைப்பது போல, ஏமாற்றி செயினை திருடி சென்றுள்ளனர்.

    வீட்டில் வந்து மூதாட்டி காந்திமதி பார்த்தபோது செயின் இல்லை.

    இது தொடர்பாக மன்னார்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் எனக் கூறி மூதாட்டி காந்திமதி இடம் தங்க சங்கிலியை நூதனமாக திருடிய இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசி டிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

    அந்த சிசிடிவி வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் மன்னார்குடி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்துக்கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • மூதாட்டியிடம் ரூ.11¾ லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
    • விசாரித்தபோது கடந்த 2019-ம் ஆண்டு தனியார் வங்கியிடம் அந்த நிலம் அடமானம் வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் குருவம்மாள்(வயது 68). இவர் அல்லம்பட்டி ஆர்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த தம்பதி திருப்பதி- நல்லதங் காள் ஆகியோருக்கு சொந்த மான நிலத்தை பேரம் பேசி வாங்கிக்கொள்ள சம்ம தித்தார். பின்னர் கடந்த டிசம்பர் 2020 முதல் ஜனவரி 2022 வரை ரூ.15¾ லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த தம்பதியினர் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தராமல் காலம் கடத்தி யுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட நிலம் குறித்து விசாரித்தபோது கடந்த 2019-ம் ஆண்டு தனியார் வங்கியிடம் அந்த நிலம் அடமானம் வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதன் பேரில் ரூ. 4 லட்சத்தை அந்த தம்பதி மூதாட்டிக்கு திரும்ப கொடுத்தனர். மீதி பணத்தை கொடுக்கவில்லை.

    மூதாட்டி பணத்தை கேட்டபோது பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். மூதாட்டி அங்கு சென்றபோது பணத்தை திருப்பதித்தர முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மூதாட்டி வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்படி விருதுநகர் மேற்கு போலீசார் அந்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • பெரம்பலூர் பாலையூரில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமி
    • பொதுமக்கள் கையில் சிக்காமல் மர்ம ஆசாமி தப்பி ஓட்டம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 70). இவர் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு படுத்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி திடீரென மூதாட்டி செல்லம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதையடுத்து மூதாட்டியின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் அந்த ஆசாமியை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காணமல் போன மல்லிகா புனேவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பது தெரிய வந்தது.
    • 9 ஆண்டுகளுக்கு பிறகு தாய் கிடைத்த சந்தோசத்தில் மகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    நாகப்பட்டினம்:

    சென்னை அம்பத்தூர் கலைவாணர் நகரை சேர்ந்த மூதாட்டி மல்லிகா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து மல்லிகாவின் மகன் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பினர். இந்த தகவலின் அடிப்படையில் நாகப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணமல் போன மல்லிகா புனேவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் புனே சென்று மல்லிகா மீட்டு நாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரது மகனுக்கு தகவல் தெரிவித்து அவரை நாகப்பட்டினத்திற்கு அழைத்து மல்லிகாவை ஒப்படைத்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு தாய் கிடைத்த சந்தோசத்தில் மகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    இவ்வாறு திறம்பட செயல்பட்ட நாகை மாவட்ட போலீசாரனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பாராட்டியதுடன் காணாமல் போன மூதாட்டியையும் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

    • அழ–கர்கோவில் மலைப்பாதை–யில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    புதூர்

    மதுரை மாவட்டம் அழ–கர்கோவில் மலைப்பாதை–யில் கரும்பாறை கன்னிமார் கோவில் அருகே நேற்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

    இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள், வலையப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி மதன்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லி–யாஸ் ரிபோனி, அப்பன் திருப்பதி இன்ஸ் பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் அபி கோவிந்தராஜ் மற்றும் போலீ–சார் சம்பவ இடத் திற்கு சென்று இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத–னைக்காக அரசு மருத்துவம–னைக்கு அனுப்பி வைத்த–னர்.

    சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி மதன்குமார் கொடுத்த புகா–ரின் பேரில் அப்பன் திருப் பதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் கிடந்த தடயங் களை சேகரித்தனர்.

    இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரிய–வில்லை. மூதாட்டியை நகை, பணத்துக்காக மர்ம நபர்கள் யாராவது கொலை செய்துவிட்டு உடலை வீசி சென்றார்களா? அவரை கொலை செய்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அப்பன் திருப்பதி போலீசார் விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று வீட்டில் இருந்த கண்ணம்மாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் நரசன். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 70). சம்பவத்தன்று வீட்டில் இருந்த கண்ணம்மாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    • மூதாட்டி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை கண்ட பொதுமக்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மரத்தில் தூக்கு போட்டு மரத்தில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த மூதாட்டி பச்சை கலர் பூ போட்ட சேலையால் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள புட்டா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள்
    • புட்டா ரெட்டியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த ஒருவர், எதிர்பாராத விதமாக ராஜம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள புட்டா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 66).

    இவர் கடந்த 14-ந் தேதி மாலை பொதியம்பட்டி - புட்டா ரெட்டியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த ஒருவர், எதிர்பாராத விதமாக ராஜம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த ராஜம்மாளை அருகே இருந்தவர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ராஜம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்த னர். இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தேடி வருகிறார். 

    • மடத்தூர்- சோரீஸ்புரம் சாலையில் வரும் போது சுப்புலட்சுமிக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது.
    • உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் இ.பி. காலனியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சுப்புலட்சுமி(வயது 65). இவர் தனது மகன் முகேசுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மடத்தூர்- சோரீஸ்புரம் சாலையில் வரும் போது சுப்புலட்சுமிக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் முகேசிடம் கூறியுள்ளார். உடனடியாக அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றுள்ளார். அதற்குள் சுப்புலட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு கொன்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • மதுரை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து முட்புதரில் வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையை அடுத்த காலாங்கரையில் உள்ள முட்புதரில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது. உடலில் பல்வேறு பாகங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன. எனவே மர்ம நபர்கள் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விட்டு முட்புதரில் வீசிச்சென்றி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது கண்டறியப்பட்டால் அவரை கொலை செய்து வீசி சென்றவர்கள் யார்? என்பது தெரியவரும். ஆகவே பிணமாக கிடந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • பூமாலை மனைவி சிலம்பாயி.
    • அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை மனைவி சிலம்பாயி (வயது 70), இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலியின் காரணமாக விஷ தழையை அரைத்து குடித்துள்ளார். இதனால் மயக்கமடைந்தஅவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். இதுகுறித்து இவரது மகள் பச்சையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    • ெதாண்டி அருகே தலையில் கல்லை போட்டு மூதாட்டியை கொன்றது யார்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தளிர் மருங்கூர் பாகனவயல் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலி(வயது75). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன், மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.

    இதன் காரணமாக ஜெயசீலி தனியாக வசித்து வந்தார். மேலும் பிழைப்புக்காக ஆடு வளர்ப்பு தொழிலை ஜெயசீலி செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று தனது வீட்டின் முன்பு ரத்தவெள்ளத்தில் ஜெயசீலி பிணமாக கிடந்தார். அவரை யாரோ மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டும், கட்டையால் தாக்கியும் கொடுரமாக கொலை செய்துள்ளனர்.

    இதுகுறித்து அவரது மகள் கொடுத்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கொலை நடந்த இடத்தை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

    தனியாக வசித்துவந்த மூதாட்டி ஜெயசீலியை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    முதற்கட்டமாக ஆடு திருட வந்த சிலர் ஜெயசீலியை கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் கொலையாளிகள் யார்? என்று துப்புதுலக்க கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×