search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old woman death"

    ஆம்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 70)இன்று அதிகாலை விண்ணமங்கலம் தேசிய நெஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் வள்ளியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மனித-விலங்குகள் மோதல் நடந்து வருகிறது.

    இதில் யானை தாக்கி பலர் இறந்து விட்டனர். இந்நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக வனப்பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளது. மேலும் வனத்தையொட்டி உள்ள கிராமங்களிலும் விவசாய பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கூடலூர் பகுதியில் யானைகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் கூடலூர் சீபோர்த் என்ற பகுதியை சேர்ந்த சரோஜினி(60) என்ற மூதாட்டி அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது புதர்மறைவில் இருந்த ஒரு யானை திடீரென துதிக்கையை வெளியே நீட்டி மூதாட்டியை கீழே தள்ளி தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தார்.

    சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் யானையை விரட்டினர். தொடர்ந்து படுகாயம் அடைந்த சரோஜினியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜினி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கூடலூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    போத்தனூரில் மொபட் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    போத்தனூர் சித்தண்ணபுரத்தை சேர்ந்தவர் நெல்சன் பென்னி. இவரது மனைவி ரீடா(வயது 63).சம்பவத்தன்று இரவு ரீடா தனது மகன் சார்லஸ் ஆண்டனியுடன் அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது மொபட்டில் வந்த வாலிபர் ரீடா மீது வேகமாக மோதினார்.இதில் ரீடா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். 

    தாய் விபத்தில் சிக்கியதை பார்த்த சார்லஸ் ஆண்டனி அதிர்ச்சியடைந்தார். அவர் தாயை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ரீடா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரீடா பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய மொபட்டை வெள்ளலூர் ரோடு, கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சங்கர் (23) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர் மீது போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேரன்மகாதேவியில் வி‌ஷம் குடித்து மூதாட்டி சாவு

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் (வயது85). இவருக்கு கண் சரியாக தெரியாததால் ஆஸ்பத்தியில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இவரை சரியாக கவனிக்காததால் மனமுடைந்த ஆறுமுகத்தம்மாள் வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சேரன் மகாதேவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ஆறுமுகத்தம்மாள் இறந்தார்.  

    இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்று பகுதியில் சுமார் 60 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்று பகுதியில் சுமார் 60 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த  திம்மராயசமுத்திர கிராம நிர்வாக அலுவலர் அனுபிரியா அவரை மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். 

    இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில், இறந்தவர் மதுரையை சேர்ந்த ராமசாமி மனைவி காமாட்சி (வயது 60) என்பதும், விஷம் குடித்து விட்டு மயங்கி  கிடந்ததும் தெரியவந்தது. அவர் எப்படி திருச்சிக்கு வந்தார்? இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி அரியமங்கலத்தில் நேற்று மாலை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எதிர் வீட்டில் வசித்த மூதாட்டி அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.
    திருவெறும்பூர்

    திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு அருகில் உள்ள  ஜெகநாதபுரத்தில் அழகர் மற்றும் சுடர்மணி ஆகியோருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் சேகரிப்பு குடோன் உள்ளது. சுமார் 20 வருடமாக செயல்படும் இந்த பிளாஸ்டிக் குடோனில் பழைய பிளாஸ்டிக்கை தரம் பிரித்து அதனை தூளாக்கி பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு விற்பனை செய்து வந்தனர். 

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த குடோனில் தீப்பற்றியது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். இதையடுத்து நள்ளிரவு மீண்டும் குடோனில் தீப்பற்றியது. அப்பகுதியினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. 

    மேலும் திறந்தவெளியில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்ததால் அதில் பற்றிய தீயானது காற்றின் வேகம் காரணமாக பரவியது. 

    இதையடுத்து அவர்கள் திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத் திற்கு வந்த கண்டோன் மெண்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் தனபால் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். பிளாஸ்டிக் என்பதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்தாலும் தீயை கட்டுக்குள் கொண்டு தீயணைப்பு துறையினர் போராடினர். 

    5 தீயணைப்பு வாகனங்கள், 6 தண்ணீர் லாரிகள் மூலம் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தினர். 

    இதற்கிடையில் பிளாஸ்டிக் குடோனில் தீப்பற்றி எரிந்ததை பார்த்த கூச்சலிட்ட எதிர் வீட்டுக்காரரான சரோஜா (65) என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரோ கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

    இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் தீ விபத்து ஏற்பட்டதில் கட்டிடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். ஆகவே உயிரிழப்பு ஏற்படுத்துவதற்கு முன் இந்த கட்டிடத்தினை இடித்து தரை மட்டமாக்க வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதியில் இதுபோன்ற குடோன்களை வைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதியளிக்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தீ விபத்து ஏற்பட்ட குடோன்களுக்கு அருகில் குடியிருப்புகள், மர அறுவை மில் உள்ளன. அதிர்ஷ்டவசமாக அவைகள் தப்பின. இந்நிலையில் தீயணைக்கப்பட்ட குடோனில் மீண்டும் இன்று காலை தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 

    தீ தொடர்ந்து எரிவதால் அதில் வரும் கரும்புகையானது அதன் சுற்று வட்டார பகுதியில் பரவி பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரும் வரை நிரந்தரமாக ஒரு தீயணைப்பு வாகனத்தை நிறுத்தி கண்காணிக்க வேண்டும். இல்லையேல் அருகில் உள்ள மர அறுவை மில், பர்னிச்சர் தயாரிக்கும் ஆலை, குப்பை கிடங்கு ஆகியவற்றில் தீப்பிடித்து பேராபத்தை ஏற்படுத்தும் என அப்பகுதியினர் தெரிவித்தனர். 

    மேலும் தீப்பற்றி எரிந்த குடோனுக்கு அருகிலேயே 2 பிளாஸ்டிக் குடோன் உள்ளது . இதுபோன்று விபத்து ஏற்படுத்துவதற்கு முன் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். #tamilnews
    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை திருமால் நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி லூர்துமேரி.(வயது 63). இவரது மகன் ஞானபிரகாசம் (42).

    லூர்துமேரி நேற்று முன்தினம் ஒரு வேலை காரணமாக தனது மகன் ஞானபிரகாசத்தின் நண்பர் குழந்தைசாமி (47)யுடன் மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் சென்றார்.

    வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் அரசு வங்கி அருகே வந்த போது, குழந்தைசாமி மோட்டார் சைக்கிளை திடீர் பிரேக் போட்டார்.

    இதில், தவறி கீழே விழுந்த லூர்துமேரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லூர்துமேரி சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார்.

    இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசில் ஞானபிரகாசம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    திண்டிவனம் அருகே பஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஓங்கூர் பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம். இவரது மனைவி ஸ்ரீரங்கம் (வயது 65). இவர் இன்று காலை ஓங்கூர் குளக்கரை அருகே உள்ள மெயின்ரோட்டில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற பஸ் எதிர்பாராத விதமாக ஸ்ரீரங்கத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீரங்கம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த ஒலக்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே தோட்டத்தில் காவலுக்காக சென்ற மூதாட்டி மீது காட்டுமாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    போடி:

    போடி அருகே முத்துக்கோம்பை பகுதியில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மாங்காய், தென்னை, இலவங்காய் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டுயானை, மாடுகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    கடந்த வாரம் யானை தாக்கியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார். இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் முத்துக்கோம்பையை சேர்ந்த மாயக்காள் (வயது75) என்பவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலுக்காக சென்றார். அப்போது அங்கு புகுந்த காட்டுமாடுகள் அவரை முட்டி தூக்கி எரிந்தது. இதில் படுகாயமடைந்த மாயாக்காள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து குரங்கணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனவிலங்குகளால் தொடர்ந்து உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தவளக்குப்பம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை வி‌ஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே டி.என். பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சீவி. இவரது மனைவி மகாலட்சுமி (வயது65). நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவில் காலில் ஏதோ பூச்சி கடித்தது போல மகாலட்சுமி உணரவே எழுந்து பார்த்தார். அப்போது வி‌ஷப்பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    அருகில் தூங்கி கொண்டிருந்த தனது மகன் கணேசனிடம் தகவல் கூறிய மகாலட்சுமி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கணேசன் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகாலட்சுமியை தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×