search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ocean Lake"

    • சமுத்திரம் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றும் வகையில் ரூ.9 கோடியில் பல்வேறு பணிகள் தொட ங்கி நடந்து வருகிறது. ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துவதோடு கரைகளும் பலப்படுத்தப்படுகின்றன.
    • படகுசவாரி, சிறுவர் பூங்கா, பொழுதுபோக்கு மீன்பிடி தளம்,பறவைகள் வந்து தங்கும் வகையில் 3 தீவுகள், குடிநீர், கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவையும் ஏற்படுத்தப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சமுத்திரம்ஏரி அமைந்துள்ளது . பழமை யான இந்த ஏரி 287 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் சுமார் 1,186 ஏக்கர் பரப்பளவு சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் வரும்.

    இந்தநிலையில் இந்த ஏரியை சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கல்லணை கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறை சார்பில் இதுதொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரூ.9 கோடி மதிப்பீட்டில் இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளைமாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ரா ஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- சமுத்திரம் ஏரியைசு ற்றுலா த்தலமாகமாற்றும் வகையில் ரூ.9 கோடியில் பல்வேறு பணிகள் தொட ங்கி நடந்து வருகிறது. ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துவதோடு கரைகளும் பலப்படுத்த ப்படுகின்றன.

    படகுசவாரி, சிறுவர் பூங்கா, பொழுதுபோக்கு மீன்பிடி தளம்,பறவைகள் வந்து தங்கும் வகையில் 3 தீவுகள், குடிநீர், கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவையும் ஏற்படுத்த ப்படுகிறது. அக்டோபர் மாதத்துக்குள் பணிகளை முடிக்கும் வகையில் பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஆழப்படுத்தி கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் தண்ணீர் வந்துவிடும் என்பதால் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறாது. ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெறும். இவ்வாறு அவர்கூறினார்.

    இந்த ஆய்வின்போது நீர்வளத் துறை செயற்பொறி யாளர் பாண்டி, உதவி பொறியாளர்கள் அன்புச்செ ல்வன், சேத்தன், தாசில்தார் மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×