search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "occasion of Onam festival"

    • ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் , வெளிமாநிலங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
    • ஓணம் பண்டிகைக்காக சுமார் ரூ.10 கோடி அளவுக்கு காய்கறிகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம:

    தென் தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் , வெளிமாநிலங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக கேரளாவுக்கு 70 சதவீத காய்கறிகள் அனுப்பபட்டு வருகின்றன. ஓணம் பண்டிகையின் போது விதவிதமான காய்கறிகளை தயார் செய்து நண்பர்களுக்கு விருந்தளிப்பது கேரளாவின் முக்கிய அம்சமாகும். இதில் அதிகளவில் காய்கறிகள் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த சில நாட்களாக தினசரி ஏராளமான லாரிகளில் டன் கணக்கில் காய்கறிகள் அனுப்பப்பட்டன.

    இதுவரை சுமார் ரூ.10 கோடி அளவுக்கு காய்கறிகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். நாளை ஓணம் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் பெரும்பாலான பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பப்பட்டுவிட்டன.

    இதனால் இன்று ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கேரள வியாபாரிகள் வரவில்லை. மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குறைந்தஅளவே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

    ×