search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nurses"

    • உதவி பேராசிரியர் மூளை நரம்பியல் துறை மருத்துவர் சேகர் வரவேற்றார்.
    • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மருத்துவ கல்லூரி வளாகத்தில் சென்றனர்.

    தஞ்சாவூர்:

    உலக பக்கவாத நோய் தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர்மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார்.

    இதில் மருத்துவ கண்காணிப்பாளர் மருதுதுரை, துணை முதல்வர் ஆறுமுகம்,

    நிலைய மருத்துவ அதிகாரி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதவி பேராசிரியர் மூளை நரம்பியல் துறை மருத்துவர் சேகர் வரவேற்புரை ஆற்றினார்.

    மூளை நரம்பியல் துறை தலைமை பேராசிரியர் ரவிக்குமார் பக்கவாத நோய் குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினார். மூளை நரம்பியல் துறை உதவி பேராசிரியர் சாந்தபிரபு நன்றியுரை ஆற்றினார்.

    இந்த பேரணியில் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என திரளானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி மருத்துவ கல்லூரி வளாகத்தில் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 52 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது.
    • கர்ப்பிணி தாய்மார்கள் யோகா பயிற்சியை கற்றுக்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் கீரைகள், பழங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தா தலைமை வகித்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு கீரைகள் மற்றும் பழங்களை வழங்கினார்.

    முன்னதாக 52 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது.

    இதில் கர்ப்பிணி தாய்மார்கள் யோகா பயிற்சியை கற்றுக்கொண்டனர்.

    இதில் மருத்துவர்கள் இந்திரா, பார்கவி, மருந்தாளுனர் சக்திவேல் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு மருத்துவமனையுடன் இணைந்து தாய்ப்பால் வார விழா நடத்தப்பட்டது.
    • தலைமை மருத்துவர் பானுமதி ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.

    சீர்காழி:

    சீர்காழி ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம், அரசு மருத்துவமனை இனைந்து தாய்ப்பால் வார விழா நடத்தப்பட்டது. சங்க தலைவர் சங்கர் தலைமை வகித்தார். டாக்டர் மருதவாணன் முன்னிலை வகித்தார். மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார், தலைமை மருத்துவர் பானுமதி ஆகியோர் பங்கேற்று கொழு கொழு குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர். விழாவில் டாக்டர் அருண் ராஜ்குமார், டாக்டர் அறிவழகன், டாக்டர் பூபேஷ் தர்மேந்திரா தாய்ப்பால் மகத்துவம் பற்றி பேசினர். ரோட்டரி மாவட்ட மருத்துவ திட்ட தலைவர் பழனியப்பன், முன்னாள் தலைவர்கள் சோலை, கண்ணன், சுசீந்திரன், சாமிசெழியன், கந்தசாமி, கோவிந்தராஜ், கனகராஜ் மற்றும் செவிலியர்கள், தாய்மார்கள் கலந்துகொண்டனர். முடிவில் செயலர் வசந்த்குமார் நன்றி கூறினார்.

    • இதில் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள 14 இலகுரக நவீனசெயற்கைக்கால்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
    • இவர்களுக்கு வழங்கிய செயற்கைகைகள் விரல்களை நீட்டி மடக்கும் படியும் பொருட்களை எடுத்து பயன்படுத்தும் படியும் இருக்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 14 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலகுரக நவீனசெயற்கைக் கால்களை தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் தலைமையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் முடநீக்கியல் துறையில் வழங்கப்பட்டது. பேராசிரியர் டாக்டர் ஆறுமுகம்,உதவி நிலைய மருத்துவர்செல்வம்,தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனையின் நிலைய மருத்துவர் முஹமதுஇத்ரீஸ் ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.

    தலைவர் மருத்துவர் குமரவேல் , உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத் துறை நிபுணர் பாலமுரளி, டாக்டர் ரமேஷ், ஆர்தோடிஸ்ட் செயற்கை அவயங்கள் உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத துறைதஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் மற்றும் இதர உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத் துறை, செயற்கை அவயங்கள் துறை பணியாளார்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். முதலமைச்சரின்விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்ட மாவட்ட அலுவலர் ராஜா மற்றும் அனைத்து மருத்துவமனை ஊழிய ர்கள்,செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    இதில்ரூ.13 லட்சம் மதிப்புள்ள 14 இலகுரக நவீனசெயற்கைக்கால்கள் பயனாளிகளுக்கு வழங்க ப்பட்டன . இவற்றையும் சேர்த்து மொத்தம் இதுவரை 135 செயற்கை கை மற்றும் கால்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 20 பேர் கைகளை இழந்தவர்கள். இவர்களுக்கு வழங்கிய செயற்கை கைகள் விரல்களை நீட்டி மடக்கும் படியும் பொருட்களை எடுத்து பயன்படுத்தும் படியும் இருக்கும். மேலும் 115 நபர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர், அரியலூர் ,புதுகோட்டை, திருவாரூர், நாகப்பட்டடினம், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவ ட்டங்களில் உள்ள பய னாளி களு க்கு பயன ளிக்கும் வகை யில் இவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயற்கை கை கால்களில் ஏற்படும் ஏதா வதுசிக்கல்களை உடனடி யாகத்தீர்க்க வும் முடியும். இந்த செய ற்கை கை கால்கள் முதலமை ச்சரின் விரிவான மருத்து வக் காப்பீட்டுத்தி ட்டத்தின் கீழ் வழங்க ப்பட்டது. கை கால்களை இழந்த நோயாளிகள் உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத் துறை வெளி நோயாளி பிரிவை அணுகலாம். ஊனமுற்றோர் அட்டை இல்லாதவர்களும் கால்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    அரசு மருத்துவமனைகளில் இந்த ஆண்டு 2 ஆயிரத்து 345 செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். #MinisterVijayaBhaskar
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி அருகே சீறிப்பாயும் காளையை வீரர் அடக்குவது போன்ற தோற்றத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தத்ரூபமாக உலோக சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்து பேசினார். முன்னதாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில், அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 13 புதிய அதிநவீன அரசு பஸ்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகம் மற்றும் செவிலியர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கி பேசினார்.

    தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 35 அடி உயரம் கொண்ட நினைவு சின்னத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு விரைவில் 2 ஆயிரத்து 345 செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதேபோல் சிசு பராமரிப்பு மையங்களில் 640 சிறப்பு செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். தமிழகத்திலேயே முதல்முறையாக ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற சிலை புதுக்கோட்டையில் மட்டும்தான் அமைக் கப்பட்டு உள்ளது, என்றார். #MinisterVijayaBhaskar
    மகளிர் தினத்தன்று பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்ததால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
    கோவை:

    கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. தொழிலாளி. இவரது மனைவி சிந்து (வயது 26). இவர்களுக்கு கடந்த 1¾ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இதையடுத்து சிந்து கர்ப்பமானார். 3-வது மாதம் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். டாக்டர்கள் ஸ்கேன் செய்த போது அவருக்கு 3 கருக்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

    பின்னர் டாக்டர்கள் அவருக்கு சத்து மாத்திரைகள் வழங்கி உணவு சாப்பிடும் முறை குறித்து ஆலோசனை கூறினர். இதைத்தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான சிந்து கடந்த 2-ந் தேதி பிரசவத்துக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பிரசவ வலியால் துடித்த சிந்துவுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக 4 பேர் கொண்ட டாக்டர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள், நேற்று சிந்துவுக்கு சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தனர்.

    காலை 9.23 மணியளவில் சிந்துவுக்கு அழகான 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

    அதில், 2 பெண் குழந்தைகள் தலா 1¾ கிலோ எடையும், ஒரு குழந்தை 1½ கிலோ எடையுடன் இருந்தது. தாய் மற்றும் குழந்தைகள் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    மகளிர் தினத்தன்று பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்ததால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

    இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறியதாவது:-

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே பிரசவத்தில் தற்போது 3 குழந்தைகள் பிறந்து உள்ளது. அந்த பெண்ணுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

    இது குறித்து அந்த குழந்தைகளின் தந்தை சுரேஷ்பாபு கூறும்போது,

    மகளிர் தினத்தன்று ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மிகவும் ஏழையான நான் 3 பெண் குழந்தைகளையும் எப்படி வளர்க்கப்போகிறேன் என்று தெரியவில்லை. எனவே அரசு எனக்கு உதவ வேண்டும் என்றார். #tamilnews
    விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், செவிலியர்கள் தாமதமாக வந்ததால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் விளாங்குடியை சுற்றியுள்ள வி.கைகாட்டி, ரெட்டிபாளையம் அம்பாபூர், தேளூர், ஓரத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்பதால் கர்ப்பிணிகள் அதிக அளவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    நேற்று பல்வேறு கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெறுவதற்காக பலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்தனர். நீண்ட நேரமாகியும் டாக்டர்களோ, செவிலியர்களோ யாரும் வராததால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் கர்ப்பிணிகள் ஓரிடத்தில் உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மருத்துவர்கள் எப்போது வருவார்கள் என நோயாளிகளை பதிவு செய்யும் அலுவலரிடம் கேட்டால் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்று கூறியதையடுத்து நோயாளிகள் காத்திருந்தனர்.

    10 மணிக்கு மேல் வந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் காத்திருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என உள்ள நிலையில் செவிலியர்கள் கூட இல்லாமல் மருத்துவமனை இயங்கி வருகிறது. இது குறித்து சிகிச்சைக்காக கர்ப்பிணியை அழைத்து வந்த உறவினர் ஒருவர் கூறியதாவது:-

    காலை 6 மணிக்கு சிகிச்சை பெறுவதற்காக எனது உறவினரான கர்ப்பிணியை கூட்டி வந்தேன். ஆனால் நீண்ட நேரமாகியும் டாக்டர்களோ, செவிலியர்களோ வராததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் என கூறிவிட்டு டாக்டர்கள் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. எனவே அவசர சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கிராமப்புற மக்கள் காய்ச்சல், ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோயிகளுக்கு முழு நேரம் சிகிச்சை பெற வசதியாக 8,706 துணை காதார நிலையங்களில் மேலும் ஒரு செவிலியரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. #nurse
    சென்னை:

    நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவ வசதி கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    காய்ச்சல், ரத்தகொதிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் கிராம மக்கள் நகரங்களுக்கு சென்று சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருக்கின்ற காரணத்தால் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1806 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையங்களிலும் ஒரு டாக்டர் மற்றும் ஒரு நர்சு வீதம் பணியாற்றி வருகிறார்கள். இது தவிர 8706 துணை சுகாதார மையங்களில் ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு கிராம செவிலியர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் அந்தந்த கிராமங்களில் வீடு வீடாக சென்று காலை முதல் மாலை வரை மருத்துவ சேவையாற்றி வருகிறார்கள். அவ்வாறு செல்லும் போது துணை சுகாதார மையங்கள் பூட்டப்பட்டு இருக்கும்.

    இதனால் சுகாதார மையத்துக்கு நேரில் வரக் கூடியவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில்லை என்ற குறை நீண்ட காலமாக இருந்து வந்தது.

    இந்த மையங்களில் உள்ள ஒரே ஒரு கிராம செவிலியர்கள் வீடுகளுக்கு சென்று மருத்துவ உதவியினை வழங்கி வருவதால் மையத்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு நேரில் வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போகும் நிலை அறிந்து அரசு புதிய மருத்துவ திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தின் பெயர் அனைவருக்கும் நல வாழ்வு திட்டமாகும்.

    இந்த திட்டத்தின் கீழ் 8706 துணை சுகாதார மையங்களிலும் மேலும் ஒரு கிராம செவிலியர்களை நியமித்து கிராம மக்களுக்கு முழுமையான மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. புதிதாக நியமிக்கப்படும் இவர்கள் சுகாதார மையத்தை திறந்து வைத்து அங்கு வருகின்ற மக்களுக்கு தேவையான சிகிச்சையினை அளிப்பார்கள்.

    அனைத்து தடுப்பூசிகளும், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய்களுக்கு டாக்டரின் பரிந்துரையின்படி ஒரு மாதத்திற்கான மாத்திரைகள் வழங்குவார்கள். மேலும் ரத்த மாதிரி பரிசோதனை, ரத்த அழுத்தம், சிறுநீர் பரிசோதனை போன்ற பரிசோதனைகளையும் கிராம செவிலியர்கள் மேற்கொள்வார்கள். இது தவிர கர்ப்ப கால பரிசோதனை, விபத்து முதல் உதவி போன்றவற்றிற்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்படும்.

    அனைவருக்கும் நல வாழ்வு திட்டம் தமிழகத்தில் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது. புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் 3 பிளாக்களில் பரீட்சார்த்தமாக தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வருடம் மேலும் 39 பிளாக்களில் தொடங்கப்பட உள்ளது. 5 வருடத்தில் 8706 துணை சுகாதார மையங்களிலும் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இது குறித்து பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:-


    அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் இதனை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி கிராம செவிலியர்கள் 8706 பேர் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள்.

    துணை சுகாதார மையங்களில் ஏற்கனவே ஒருவர் இருந்த நிலையில் கூடுதலாக ஒருவர் நியமிக்கப்பட்டு அந்த மையங்களை முழுமையாக திறந்து வைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

    இதுவரையில் மூடி இருந்த துணை சுகாதார நிலையங்கள் இனி படிப்படியாக திறக்கப்பட்டு கிராம மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படும். சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் சுகாதார மையங்களுக்கு நேரில் சென்றாலே ஊசி, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இங்கு செய்யலாம். இத்திட்டம் 2022-23-ல் நிறைவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #nurse
    அரசு பஸ்சில் நர்சை தரக்குறைவாக பேசிய கண்டக்டரால் பயணிகள் முகம் சுளித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அடுத்துள்ள சின்னாளபட்டியை சேர்ந்தவர் பிச்சை. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று குமுளியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ்சில் பணியில் இருந்தார். பெரியகுளம் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கும் பிரேமா தேனியில் ஏறினார்.

    பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைசி இருக்கையில் அமர்ந் திருந்தார். பெரியகுளம் வரும் வரைக்கும் கண்டக்டர் அங்கு வராததால் லட்சுமிபுரத்தில் பிரேமா கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டார்

    இதனால் கண்டக்டர் பிச்சை தரக்குறைவான வார்த்தைகளால் நர்சை திட்டினார். தேனியில் பஸ் ஏறி இவ்வளவு நேரம் எதற்காக டிக்கெட் எடுக்காமல் இருந்தாய் என கேவலமாக திட்டினார்.

    சக பயணிகள் கண்டக்டரிடம் எதற்காக அந்த பெண்ணை இப்படி திட்டுகிறீர்கள்? என கேட்டதற்கு அவர்களையும் கண்டக்டர் வசை பாடினார். இது குறித்து பயணிகள் கண்டக்டரின் பேச்சை செல்போனில் பதிவு செய்தனர். மேலும் பெரியகுளம் வந்ததும் பஸ்சை போலீஸ் நிலையத்தில் நிறுத்தினர். ஆனால் நர்ஸ் பிரேமா தனக்கு வேலைக்கு நேரமாகிவிட்டதால் தான் செல்வதாக கூறி சென்று விட்டார். ஆனால் மற்ற பயணிகள் சம்மந்தப்பட்ட கண்டக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×