search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Next vote rajini"

    ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்துள்ளனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தது. #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே #அடுத்த_ஓட்டு_தலைவருக்கே #Rajinikanth
    சென்னை:

    ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வர சொல்லி அழைப்பதும் அவர் இழுத்தடிப்பதும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி ரஜினி தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார்.

    தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினி ‘அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணிகளில் ரஜினி தீவிரம் காட்டினார்.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ரஜினி களம் இறங்குவார் என்று எல்லோரும் எதிர் பார்த்தார்கள். ஆனால் அவர் வழக்கம்போல் ‘இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. அடுத்து வரவுள்ள சட்டசபை தேர்தலில் பார்த்துக்கொள்வோம்’ என்று அறிவித்தார். இது ரஜினி ரசிகர்களிடையே கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    ரஜினி ரசிகர்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு பிடித்த கட்சிக்கு வாக்களித்தனர். இந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் சீமான், கமல் ஆகியோருக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக பேசப்படுகிறது. இளைய தலைமுறை வாக்குகள் அதிக அளவில் இவர்களுக்கு கிடைக்கலாம் என்ற கணிப்புகள் எழுந்தன. இது ரஜினி ரசிகர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது.



    எனவே அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் உருவாக்கி டிரெண்ட் செய்ய தொடங்கினார்கள். நேற்று இரவு வரை இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங்கில் இருந்தது.

    இந்த முறை வாக்களித்து விட்டேன், அடுத்த முறை கண்டிப்பாக ரஜினிக்குத் தான் என் வாக்கு என்று ரஜினி ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். திடீர் என்று உருவாக்கப்பட்ட இந்த ஹேஷ்டேக், இந்திய அளவில் முதலிடத்துக்கு சென்றது ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே #Rajinikanth
    ×