search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Cases"

    • பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.
    • புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு, பாதிப்பு தீவிரமாக இல்லை

    நெல்லை:

    தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு நேற்று 500-ஐ தாண்டி உள்ளது. இதைத்தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    குறிப்பாக பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக 8 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் அடுத்த 2 நாட்களில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை.

    இந்நிலையில் இன்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 9 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகர பகுதியில் மட்டும் 7 பேர் அடங்குவர். இதுதவிர களக்காடு, மானூர் பகுதியில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

    புதிதாக 7 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களில் ஒருவர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 6 பேரும் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

    நெல்லையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. எனினும் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு, பாதிப்பு தீவிரமாக இல்லை. எனவே பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை பெறுகிறார்கள்.

    தற்போதைய நிலவரப்படி, கொரோனா வார்டில் ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளார்.

    புதிய பாதிப்பு தீவிரமாக இல்லாவிட்டாலும் பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×