search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nehru MLA"

    • புதுவை மாநிலத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கபட்டு வருகிறது.
    • சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத டாக்டர்கள் தங்கள் படிப்பை முடித்து வெளிவந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கபட்டு வருகிறது. இருந்தாலும் ஆங்கில டாக்டர்களுக்கு ஒரு விதமாகவும், ஆயுர்வேதா டாக்டர்களுக்கு வேறு விதமாகவும் சம்பள முரண்பாடு உள்ளது. அதை முறைப்படுத்த வேண்டும்.

    இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில் மாகி பகுதியில் ஆயுர்வேத கல்லூரி 2010-ல் தொடங்கப்பட்டது. சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத டாக்டர்கள் தங்கள் படிப்பை முடித்து வெளிவந்துள்ளனர்.

    மாகி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய முதல்-அமைச்சர், வில்லியனூர் பகுதியில் ஆயுர்வேத மருத்துவமனை தொடங்கப்படும் என்றும், அதில் மாகியில் படித்த ஆயுர்வேத மருத்துவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

    இதன்படி அவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உப்பனாறு வாய்க்காலில் சிதைந்த தரையை மீண்டும் அமைக்க வேண்டும்.
    • நகர பகுதியில் குடிநீர் குடிக்க உகந்தாக இல்லாததால் கிட்னி பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, சரும நோய் பாதிப்பு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-

    உப்பனாறு வாய்க்காலில் சிதைந்த தரையை மீண்டும் அமைக்க வேண்டும். தரை அமைக்கும் போது கழிவுநீர் ஒட தனியாக வாய்க்கால் அமைக்க வேண்டும். இப்படி செய்தால் உப்பனாறில் வாய்க்காலின் மற்ற பகுதிகள் சுத்தமாக இருக்கும். இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நகர பகுதியில் குடிநீர் குடிக்க உகந்தாக இல்லாததால் கிட்னி பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, சரும நோய் பாதிப்பு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதற்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போக்குவரத்து போலீசார் சுற்றுலா பயணிகள் வாகனங்களை குறி வைத்து அபராதம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். ஆர்வ மிகுதியால் கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கி உயிரிழக்கும் சுற்றுலா பயணிகளின் உயிரை காக்க அரசு முன் வர வேண்டும்.

    விமானம் பயணிகளுக்கும் விமான நிலையத்திலிருந்து தங்கும் இடங்களுக்கு செல்ல போதிய வாகன வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். விமான நிலையத்தில் இருந்து நகர பகுதிகளுக்கு பஸ் இயக்க வேண்டும்.

    குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கோவிந்தசாலை சின்னப்பொய்கை அந்தோணியார் கோவில் பகுதி குடிசை மாற்று வாரியத்தால் கட்டி கொடுக்கப்பட்ட ராஜீவ்காந்தி அரசு குடியிருப்புகளை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார்.
    • வெளியிலிருந்து வரும் பொறியாளருக்கு உள்ளூரில் தேவைகள் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ நேரு பேசியதாவது:-

    புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்த பதவிக்கு வெளியில் இருந்து பொறியாளரை நியமிப்பதற்கான கோப்பு தயார் செய்யப்பட்டு கவர்னர் ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிய வருகிறது.

    பொதுப்பணி த்துறை யிலேயே பல ஆண்டுகள் பணியாற்றிய தகுதி வாய்ந்த பொறியாளர்கள் இருக்கும் நிலையில் வெளியில் இருந்து எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

    தலைமை பொறியாளர் பதவிக்கு பொதுப்பணி துறையில் உள்ள மூத்த பொறியாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

    வெளியிலிருந்து வரும் பொறியாளருக்கு உள்ளூரில் தேவைகள் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. எம்.எல்.ஏ.க்கள் கூறுவதை புரிந்து செயல்பட மாட்டார்கள்.

    எனவே உள்ளூர் நிலைமையை நன்கு அறிந்த பொதுப்பணித்துறை சார்ந்த மூத்த பொறியாளரையே தலைமை பொறியாளர் பதவிக்கு நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.

    • பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை மத்திய அரசின் ஆணைக்கு மாறாக 2012-ம் ஆண்டு உதவியாளர்களுக்கான நியமன விதியை வெளியிட்டது.
    • தேவையற்ற போட்டி தேர்வுக்கு தயார் செய்ய அலுவலர்கள் விடுப்பு எடுத்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-

    பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை மத்திய அரசின் ஆணைக்கு மாறாக 2012-ம் ஆண்டு உதவியாளர்களுக்கான நியமன விதியை வெளியிட்டது. நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் அகில இந்திய அளவில் கோரப்பட்டுள்ளது. இதனால் புதுவை வாழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும்.

    உதவியாளர் பதவி என்பது நிர்வாகத்தில் மிகவும் முக்கியமான பதவியாகும். எனவே அனுபவமிக்க ஆட்களை கொண்டே நிரப்பப்பட வேண்டும். தேவையற்ற போட்டி தேர்வுக்கு தயார் செய்ய அலுவலர்கள் விடுப்பு எடுத்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    எனவே 600 உதவியாளர் காலி பணியிடங்களை 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் உள்ள யூ.டி.சி.க்களை கொண்டு நிரப்பினால்தான் 800-க்கும் மேற்பட்ட எல்.டி.சி., யூ.டி.சி. பணியிடங்கள் காலியாகும்.

    இதை படித்த பட்டதாரி இளைஞர்களை கொண்டு நேரடி நியமன தேர்வு நடத்தி நிரப்ப வாய்ப்புகள் உருவாகும். அரசும் சம்மந்தப்பட்ட துறையும் கவனத்தில் கொண்டு புதுவை மாநிலத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு நேரு பேசினார்.

    இதே கருத்தை வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியும் பேசினார்.

    • விவசாயத்திற்கு தேவையான நவீன எந்திரங்களை அரசு மானியமாக வழங்க வேண்டும்.
    • அரசு பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-

    விவசாயத்தை பொருத்த வரை விளைநிலங்கள் அதிகளவு மனைகளாக மாறிவிட்டது. இருக்கும் விளைநிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்திற்கு தேவையான நவீன எந்திரங்களை அரசு மானியமாக வழங்க வேண்டும்.

    அரசு மானியத்தில் வழங்கப்படும் பசுக்கள் மூலம் பெறப்படும் பாலை பயனாளிகள் பாண்லேவுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்க வேண்டும். இதன் மூலம் ஆண்டு கணக்கில் சம்பளம் இல்லாமல் பணியில் இருக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாத சம்பளம் கிடைக்கும்.

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு என்று ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

    போக்குவரத்து காவலர்கள் சுற்றுலா பயணிகளிடம் கறாராக நடந்து கொள்கிறார்கள். சுற்றுலா பயணிகள் பயன்ப டுத்தும் வாகனங்களை குறி வைத்து அபராதம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும். திட்டங்களை காலத்தோடு நிறைவேற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்து மாநிலத்தை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதிதாக கட்டும் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன் நடைபெற்று வந்தது.
    • தற்போது மைதானம் சுற்றி இரும்பு தகடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-

    புதுவை அண்ணா சாலையில் உள்ள அண்ணா திடல் விளையாட்டு மைதானம் மேம்படுத்தும் பணி மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் உள்ள கடைகளை புதிதாக கட்டும் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன் நடைபெற்று வந்தது.

    காலக்கெடு முடிந்து ஓராண்டு ஆகியும் இதுவரை பணிகள் முடிவடையாமல் உள்ளது. தற்போது மைதானம் சுற்றி இரும்பு தகடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா திடல் பகுதியை சுற்றியுள்ள வியாபாரிகள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் ஏற்படுகிறது.

    இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அண்ணா திடல் விளையாட்டு மைதானம் மேம்படுத்தும் பணிகளையும், அண்ணா சாலை, லப்போர்த் வீதி , சின்ன சுப்பிராயபிள்ளை வீதி போன்ற வீதிகளில் உள்ள கடைகள் கட்டுமான பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து சுயேச்சை எம்.எல்.ஏ நேரு பேசியதாவது:-
    • நகர பகுதியில் போதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாததால் விபத்து மற்றும் குற்ற செயல்கள் அதிகம் நடப்பதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து சுயேச்சை எம்.எல்.ஏ நேரு பேசியதாவது:-

    ஜி20 மாநாடு நடந்த ஒரு வாரம் புதுவை தூய்மையாக இருந்தது. அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த புதுவை மாநிலம் முழுவதும் ஒரு மாதத்தில் தூய்மையாக பளிச்சென்று மாறி விடலாம்.

    இதற்கு கவர்னர், தலைமை செயலர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் முன் வர வேண்டும். நகர பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். பாதாள சாக்கடைகளில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு வீதிகளில் வழிந்தோடும் நிலை உள்ளது.

    நகர பகுதியில் போதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாததால் விபத்து மற்றும் குற்ற செயல்கள் அதிகம் நடப்பதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.

    ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கிய நிதியில் இதுவரை 60 சதவீத நிதியை கூட செலவு செய்யவில்லை என்று தெரிகிறது. தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைத்து பொறியியல் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். பஞ்சாலைகள் திறப்பு குறித்து கவர்னர் உரையில் குறிப்பிடாதது வேதனை தருகிறது.

    ஸ்மார்ட் சிட்டி குறித்து விசாரனை அமைப்பை ஏற்படுத்த வேண்டும். புதுவை நகராட்சி செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆதிதிராவிடர் மக்களுக்கு பேட்கோ மூலம் வழங்கப்பட்ட தொழில் கடன்கனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. சமூக அமை ப்புகளு டன் இணைந்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    • இது புதுவை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இத்திட்டம் ஏழை, எளிய, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கக்கூடியதா க உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. சமூக அமை ப்புகளு டன் இணைந்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-

    மத்திய அரசு அழுத்தம் காரணமாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுவை அரசு ரூ.28 கோடி செலவில் கொண்டு வந்த 33 ஆயிரம் புதிய டிஜிட்டல் ஸ்மார்ட் மீட்டர்களை மாற்றிவிட்டு, மொத்தம் 4.07 லட்சம் மின் இணைப்புகளுக்கும் ரூ.251.10 கோடி மதிப்பில் புதிய பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தும் பணி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

    இது புதுவை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இத்திட்டம் ஏழை, எளிய, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கக்கூடியதா க உள்ளது.

    இத்திட்டத்தால் ஏற்படும் செலவு பொதுமக்கள் தலையில் சுமத்தப்படும். முன்கூட்டியே பணம் செலுத்தினால் மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்த முடியும் என்ற கட்டாய நிலைக்கு மக்கள் தள்ளப் படுவர். இது முற்றிலும் மக்கள் விரோத திட்டமாகும்.

    விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்தாகும். மின் கட்டணமும் பல மடங்கு உயரும். புதுவை அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மூக நல அமைப்புகளை ஒன்றிணைத்து  புதுவை-காரைக்காலில் ஒரே சமயத்தில் மாநிலம் தழுவிய மின்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப் படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை சட்டசபையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் காலவரையின்றி ஒத்திவைத்தார். ஒத்திவைப்புக்கு பிறகு சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா செய்தார்.
    • புதுவையில் நிலவும் பிரச்சினைகளை களைய மாநில அந்தஸ்து தேவை. அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் காலவரையின்றி ஒத்திவைத்தார்.

    ஒத்திவைப்புக்கு பிறகு சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா செய்தார். மாநில அந்தஸ்து குறித்து சபையில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    அப்போது சபையிலிருந்து வெளியேறிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, நேரு எம்.எல்.ஏ.விடம் அடுத்தமாதம் பட்ஜெட்டிற்காக சபை கூடும். அப்போது விவாதிக்கலாம் என சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்.

    இதன்பிறகு சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் நிலவும் பிரச்சினைகளை களைய மாநில அந்தஸ்து தேவை. அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். தாசில்தார் ரேங்கில் உள்ள நகராட்சி அதிகாரி திடீரென பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இது முதல்வருக்கே தெரியவில்லை. அந்த அதிகாரிக்கு பதிலாக வடமாநிலத்தை சேர்ந்த தமிழ் தெரியாத அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மொழி தெரியாமல் எப்படி மக்கள் பிரச்சனைகளை எடுத்து செல்ல முடியும்.

    மின்சாரம் ப்ரிபெய்டு குறித்து பேச அனுமதிக்கப்படவில்லை. செல்போன் போல ரிசார்ஜ் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள். செல்போன் ரிசார்ஜ முடிந்தால் பக்கத்தில் இருப்பவர்களிடம் கடன் வாங்கி பேசிக்கொள்ளலாம்.

    ஆனால் மின்சாரத்தை அப்படி வாங்க முடியுமா? மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். விஷன் 47 கருத்துக்களை சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் தங்களது அறைகளிலேயே இருந்து கொண்டு ½ மணி நேரத்திலேயே திட்டத்தை போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

    அதிகாரிகள் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க வேண்டும். மாநில அந்தஸ்து கோரி போராட்டம் தொடரும். தமிழ் மொழியில் பேசும் அதிகாரிகள் வேண்டும். புதுவைக்கு நிரந்தர கவர்னர் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோஜூரியோ கராத்தே சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருளையன்பேட்டை நகர பகுதியில் புதுவை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு புடவை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் சேவை இயக்கம் இளைஞர்கள் செங்குட்டுவன்,பாக்கியராஜ்,செழியன் ரஞ்சித்,அப்துல், மணி ,ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கோஜூரியோ கராத்தே சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருளையன்பேட்டை நகர பகுதியில் புதுவை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு புடவை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக மனித நேய மக்கள் சேவை இயக்க நிறுவனரும், உருளை யன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நேரு புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து பொன்னாடை போர்த்தி அவர்களுக்கு புடவை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் சேவை இயக்கம் இளைஞர்கள் செங்குட்டுவன்,பாக்கியராஜ்,செழியன் ரஞ்சித்,அப்துல், மணி ,ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உருளையன்பேட்டை இளை ஞர்கள் செய்திருந்தனர்.

    • மாநில அந்தஸ்து பெற புதுவையில் உள்ள சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் பங்கேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    மாநில அந்தஸ்து பெற புதுவையில் உள்ள சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்தது.

    தொடர்ந்து காரைக்கால் திருநள்ளாறில் தனியார் ஒட்டலில் ஆலோசனை கூட்டம் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. கூட்டத்தில் காரைக்கால் வளர்ச்சிக்காக பாடுபடும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் பங்கேற்று பேசினார்.கூட்டத்தில் மாநில அந்தஸ்து பெற அடுத்த கட்டமாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    • புதுவை உருளையன்பேட்டை தொ குதிக்குட்பட்ட கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய அரசு குடியிருப்புகள் உள்ளது.
    • பணிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் உடனே தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் நேரு எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொ குதிக்குட்பட்ட கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய அரசு குடியிருப்புகள் உள்ளது.

    இங்கு புனரமைப்பு பணிகள், குடிநீர் மற்றும் கழிவு குழாய்களை மாற்றி புதிய குழாய்களாக அமைக்கும் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது.

    பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிட பிரிவு மூலம் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு ஆய்வுசெய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பணிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் உடனே தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் நேரு எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப அதிகாரி திருஞானம், இளநிலை பொறியாளர் உதயகுமார், அதிகாரிகள், பொதுமக்கள், மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

    ×