search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nathan Lyon"

    • அனைத்து டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து லாதன் லயன் 20 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
    • முத்தையா முரளிதரன் 67 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

    லாதன் லயனின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி 212 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் லாதன் லயன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் வார்னே சாதனையை லயன் சமன் செய்துள்ளார்.

    லாதன் லயன் 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காலே மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக 90 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தற்போது இலங்கைக்கு எதிராக அதே மைதானத்தில் 5 விக்கெட்டுகளை லாதன் லயன் எடுத்துள்ளார்.

    ஆசியா கண்டத்தில் நாதன் லயன் 9 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக மூன்று முறையும், வங்காள தேசம் அணிக்கு எதிராக 3 முறையும் இலங்கை அணிக்கு எதிராக 2 முறையும் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு முறையும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆசியாவில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய மறைந்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் வார்னே சாதனையை சமன் செய்துள்ளார்.

    அனைத்து டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து லாதன் லயன் 20 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் ஆலன் டொனால்ட்(தென் ஆப்பிரிக்கா) மற்றும் டேனியல் விக்டோரி (நியூசிலாந்து) சாதனையை சமன் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் முதல் இடத்தில் உள்ளார். அவர் 67 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பந்து வீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். #AUSvIND #SouravGanguly #NathanLyon
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகிறார்கள். 2 டெஸ்டிலும் சேர்த்து நாதன் லயன் 16 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    இந்த நிலையில் நாதன் லயன் பந்து வீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாதன் லயன் பந்து வீச்சு தொடர்பாக கேப்டன் விராட்கோலிக்கு தகவல் அனுப்ப நினைத்து இருந்தேன். ஆனால் இன்னும் அனுப்பவில்லை. அவரிடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் வெளிநாட்டு மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு அதிக விக்கெட்டுகளை பறிகொடுக்கக்கூடாது.



    லயன் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் ஸ்டெம்புக்கு வெளியே சென்ற பந்துகளை தடுத்து ஆடினார்கள். அதற்கு பதிலாக அவரது பந்துவீச்சை தாக்குதல் தொடுத்து விளையாட வேண்டும். அப்போழுது தான் 300-ல் இருந்து 350 ரன் வரை எடுக்க முடியும்.

    லயன் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஷேன் வார்னே, முரளீதரன், சுவான் ஆகியோர் போல் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #AUSvIND #SouravGanguly #NathanLyon
    பெர்த் டெஸ்டில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற நாதன் லயன் ஐசிசி பந்து வீச்சு தரவரிசையில் டாப் 10-க்குள் நுழைந்துள்ளார். #ICC #NathanLyon
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்திய பேட்ஸ்மேன்கள் நாதன் லயன் சுழற்பந்து வீச்சில் வீழ்ந்தனர். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்திய அவர், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    8 விக்கெட் வீழ்த்திய நாதன் லயன் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். முதல் டெஸ்டில் ஏற்கனவே 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். இரண்டு போட்டியில் 16 விக்கெட்டுக்கள் கைப்பற்றி, ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா வீரர் ரபாடா 882 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 874 புள்ளிகளுடன்  2-வது இடத்தில் உள்ளார்.

    ஜடேஜா 796 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், அஸ்வின் 778 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், நாதன் லயன் 766 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், பேட் கம்மின்ஸ் 761 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், ஹசில்வுட் 758 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளனர்.

    பெர்த் டெஸ்டில் சதம் அடித்த விராட் கோலி பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 915 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 892 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், புஜாரா 4-வது இடத்திலும், ஜோ ரூட் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலியை இதுவரை 7 முறை அவுட்டாக்கி முதல் இடத்தில் உள்ளார் நாதன் லயன் #AUSvIND #ViratKohli #NathanLyon
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன் விராட் கோலியை சதம் அடிக்க விடமாட்டோம் என்று ஹசில்வுட் கூறியிருந்தார். மேலும் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகிய மும்மூர்த்திகளை எதிர்த்து விளையாட விராட் கோலி திணறுவார் என்று கூறப்பட்டது.

    ஆனால், தற்போது வரை விராட் கோலி நான்கு இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார். இதில் இரண்டு முறை நாதன் லயன் பந்தில் வீழ்ந்துள்ளார். இரண்டு முறை பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்துள்ளார்.



    தற்போது நடைபெற்று வரும் பெர்த் போட்டியின் 2-வது இன்னிங்சில் விராட் கோலியை சிறப்பாக ஆட்டமிழக்க வைத்தார். இதன் மூலம் விராட் கோலியை அதிக முறை அவுட்டாக்கிய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    விராட் கோலி நாதன் லயனுக்கு எதிராக ஏழு முறை ஆட்டமிழந்துள்ளார். அடுத்த இரண்டு போட்டிகள் மெல்போர்ன், சிட்னியில் நடக்கிறது. இந்த இரண்டு மைதான ஆடுகளங்களும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் விராட் கோலி கவனமாக விளையாட வேண்டியது அவசியமானது.
    பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. அதற்கு முன் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.

    இந்த பயிற்சி ஆட்டம் நேற்று துபாயில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் சமி அஸ்லாம் 51 ரன்கள் அடித்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

    ஆனால் 3-வது நபராக களம் இறங்கிய அபித் அலி சிறப்பாக விளையாடினார். இவர் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் எடுத்துள்ளார். இவரது ஆட்டத்தில் பாகிஸ்தான் ‘ஏ’ முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்துள்ளது.



    பாகிஸ்தான் இழந்த 6 விக்கெட்டில் நாதன் லயன் ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 17 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் கைப்பற்ற வில்லை. ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய நாதன் லயன் ‘‘கடந்த நான்கு ஆண்களில் இருந்து தான் மாறுபட்ட பந்து வீச்சாளர்’’ என்று தெரிவித்தார். நாதன் லயன் 36 ஓவர்கள் வீசி 87 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் சுழற்பந்து வீச்சாளர்களே இடம்பெறவில்லை. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் அக்டோபர் 7-ந்தேதி துபாயில் தொடங்குகிறது.

    இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களில் விளையாட முக்கிய பங்கு வகிக்கும் என ஆஸ்திரேலியா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ஆனால், வரும் சனிக்கிழமை தொடங்கும் பயிற்சி ஆட்டத்திற்கான பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் எந்தவொரு சுழற்பந்து வீச்சாளரும் இடம்பெறவில்லை. இது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சமி அஸ்லாம், 2. அபித் அலி, 3. இஃப்தோகர் அகமது, 4. ஆசாத் ஷபிக், 5. உஸ்மான் சலுயாஹுதின், 6. சாத் அலி, 7. அகா சல்மான், 8. முகமது ரிஸ்வான், 9. வஹாப் ரியாஸ், 10. ரஹத் அலி, 11. வகாஸ் மெக்சூட், 12. ஆமெர் யாமின், 13. உமைத் ஆசிப், 14. சவுத் ஷகீல்.
    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக லயன் தெரிவித்துள்ளார். #PAKvENG
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி ஆசியா கண்டத்தில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்கு இடையிலான தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

    அடுத்த மாதம் ஆஸ்திரேலியா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அப்போது ஆஸ்திரேலியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக நாங்கள் புனே டெஸ்டில் விளையாடும்போது அந்த ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதுபோன்று ஆடுகளம் அமைக்கப்பட்டால், நாங்கள் ஏன் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடக்கூடாது?.


    டிராவிஸ் ஹெட்

    ஆனால் நாங்கள் கடந்த முறை சென்றிருந்த போது ஆடுகளம் பிளாட்டாக இருந்தது. தற்போது நாங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க தயாராகுவோம். இருந்தாலும், அங்குள்ள கண்டிசனை பார்க்கும்வரை உறுதியாக கூறுவது கடினம்.

    என்னைத் தவிர மார்னஸ் லபுஸ்சேக்னே, டிராவிஸ் ஹெட் ஆகியோரும் உள்ளனர். இவர்கள் ஐந்தாவது மற்றும் 6-வது வரிசையில் பேட்டிங் செய்வார்கள். நன்றாக பந்தும் வீசுவார்கள்’’ என்றார்.
    ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஃபிட் ஆக இருந்தால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருக்கும் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். #AUSvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் டெஸ்ட் தரவரிசையில் யாரும் தொட முடியாத அளவிற்கு அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை பிடித்தது.

    உள்ளூர் தொடர் முடிந்து தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்று விளையாட இருந்தது. அப்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மூன்று நாடுகளுக்கு எதிராக தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

    ஆனால் தென்ஆப்பிரிக்காவில் 1-2 எனவும், இங்கிலாந்தில் 1-4 எனவும் தொடரை இழந்தது. இன்னும் ஆஸ்திரேலியா தொடர் மட்டுமே பாக்கி உள்ளது. இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க இந்தியா விரும்புகிறது. இரண்டு தொடர்களை இழந்தாலும் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திலேயே நீடிக்கிறது.

    ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களில் குறைபாடுகளை நீக்காவிடில் அது சாத்தியமற்றது என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க விரும்புகிறது. ஆனால், இந்தியா பேட்டிங் குறைபாடுகளை முதலில் கழைய வேண்டும்.



    தலைசிறந்த வீரர்களான ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் கேள்விக்குறியே. ஆனால், பந்து வீச்சில் இன்னும் அதிக வலுவாகவே உள்ளது.

    மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் நன்றாக உடற்தகுதியுடன் இருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலான நேரமாக இருக்கும். இங்கிலாந்தில் காற்றில் பந்து மூவ் மற்றும் சீம் அவர்களுக்கு வழக்கமான பிரச்சனையை உண்டு பண்ணியது. ஆனால் ஆஸ்திரேலியாவில் எக்ஸ்ட்ரா பவுன்ட்ஸ் முக்கிய பிரச்சினையாக இருக்கும்’’ என்றார்.
    உலகின் தலைசிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின்தான் என்று இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். #Ashwin
    டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது இந்தியாவின் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். இருவரும் ஆஃப்-ஸ்பின்னர்கள் ஆவார்கள். இருவரில் அஸ்வின்தான் சிறந்தவர் என்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்வான் கூறுகையில் ‘‘உலசின் தலைசிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் என்பதை எளிதாக கூறிவிடலாம். ஆசியக் கண்டத்தில் அஸ்வின் ரெகார்டு அபாரமானது. எட்ஜ்பாஸ்டனில் அஸ்வின் வீசிய பந்து வீச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.



    நாதன் லயன் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக பந்து வீசிய போதிலும், இங்கிலாந்து மண்ணில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த முடியவில்லை. அவரை விட அஸ்வின் சிறந்தவர், ஏனென்றால் அஸ்வின் மாறுபட்ட (variations) முறையில் பந்துகளை வீசுகிறார். மேலும், தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுகிறார்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் பதவி வாய்ப்பு வந்தால், ‘நோ’ சொல்லமாட்டேன் என்று நாதன் லயன் தெரிவித்துள்ளார். #AUS
    ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டனாக வார்னரும் செயல்பட்டு வந்தனர். ஆஸ்திரேலியா சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

    கேப் டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்டின்போது பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதற்கு மூளைக் காரணமாக வார்னர் செயல்பட்டார் என்றும், இது ஸ்மித்திற்கு தெரியும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணையில் தெரியவந்தது. இதனால் மூன்று பேருக்கும் தடைவிதித்தது.



    தடைவிதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்தது. அப்போது விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், துணைக் கேப்டன் நியமிக்கப்படவில்லை.

    இந்நிலையில் டெஸ்ட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயனுக்கு துணைக் கேப்டன் பதவிக்கான ஆசை துளிர்விட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘துணைக் கேப்டன் வாய்ப்பை எனக்கு வழங்கினால், நான் அதை வேண்டாம் என்று ஒருபோதும் சொல்லமாட்டேன்’’ என்றார்.
    ×