என் மலர்

  நீங்கள் தேடியது "natchathiram nagarkirathu"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது.
  • இந்த படத்தில் துஷாரா விஜயன், கலையரசன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

  அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக 'நட்சத்திரம் நகர்கிறது' என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

  இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வந்தது. 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.


  ஃபர்ஸ்ட்லுக்

  நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இரண்டாம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ராட்சசி போன்ற உருவத்தை கொண்ட துஷாரா விஜயனின் நீல நிற கூந்தலில் கதாபாத்திரங்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் வகையிலான இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

  ×