search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagercoil Child"

    நாகர்கோவிலில் குழந்தை மீது வெந்நீர் கொட்டிய பள்ளி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தையின் பெற்றோர் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி பாமா (33). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு டெய்லர் கடையில் தையல் வேலை பார்த்து வந்தார். இவருக்கு துஷ்யந்த் என்ற 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. வேலைக்கு செல்வதற்கு வசதியாக தான் வேலைபார்க்கும் டெய்லர் கடை அருகே உள்ள கிட்ஸ் பள்ளியில் குழந்தையை சேர்த்து இருந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை துஷ்யந்த் மீது வெந்நீர் கொட்டியது. பள்ளி ஊழியர் கியாஸ் அடுப்பில் இருந்து வெந்நீரை இறக்கும்போது குழந்தை மீது கொட்டியதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையின் கால் முதல் இடுப்பு வரை உடல் வெந்தது.

    தகவல் அறிந்து பாமா அலறியடித்துக்கு கொண்டு பள்ளிக்கு சென்றார். அங்கு வலி தாங்காமல் துடித்த குழந்தையை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    இன்று சிகிச்சை முடிந்து குழந்தையை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். அங்கிருந்து குழந்தையை எடுத்துக் கொண்டு பாமா நேராக பள்ளிக்கூடத்துக்கு வந்தார். அங்கு பள்ளி முன்பு அமர்ந்து அவர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

    பள்ளி ஊழியர் அடுப்பில் இருந்து வெந்நீரை இறக்கும்போது பாத்திரம் கீழே விழுந்து எனது குழந்தையின் உடல் முழுவதும் வெந்தது. குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை கொடுங்கள், அதற்கான செலவு அனைத்தையும் நாங்கள் தருகிறோம் என பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.

    அதை ஏற்று நானும் கடனை வாங்கி குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தேன். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் யாரும் ஆஸ்பத்திரிக்கு வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. எனவே குழந்தைக்கு ஆன மருத்துச்செலவை ஏற்பதுடன் எனது குழந்தையின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுபற்றி எனது உறவினர்கள் மூலம் போலீசிலும் புகார் செய்திருந்தேன். ஆனால் போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தகவல் அறிந்த வடசேரி போலீசார், நேரில் சென்று பாமாவை சமாதானப்படுத்தினர். போலீஸ் நிலையத்துக்கு வந்து முறையாக புகார் எழுதி கொடுக்குமாறும் அறிவுறுத்தினர். அதை ஏற்று பாமா தனது போராட்டத்தை கைவிட்டு போலீஸ் நிலையம் சென்றார்.
    ×