search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthumalai Amman"

    • 8 ம் நாள் கொடை விழாவில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
    • மாலையில் ஆயிரத்து எட்டு குத்துவிளக்கு பூஜையும் இரவு 7 மணிக்கு நட்சத்திர இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கடந்த ஜூன் 28-ந் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. ஜூலை 12-ந் தேதி செவ்வாய்க்கிழமை கொடைவிழா அன்று பக்தி சொற்பொழிவு, வில்லிசை, இன்னிசை கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, பக்தி பாடல் நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.

    8-ம் நாள் நிகழ்ச்சி

    நேற்று செவ்வாய் கிழமை 8 ம் நாள் கொடை விழாவில் காலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. நாதஸ்வர இன்னிசையும் அதை தொடர்ந்து கிளாரினெட் இன்னிசையும், பஜனை கோஷ்டியினரின் பஜனையும் பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பகல்12 மணி அளவில் கண்ணதாசனும் ஆன்மீகமும் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

    மதியம் 1மணியளவில் நாராயண சுவாமி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி (திருமஞ்சனம்) முடித்து பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கோவிலில் மண்டபத்தை சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தார். மாலையில் ஆயிரத்து எட்டு குத்துவிளக்கு பூஜையும் இரவு 7 மணிக்கு நட்சத்திர இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஜெகதீசன், முத்துமாலை, செல்வராஜ், ராஜேந்திரன், சந்திரசேகரன், கல்யாண சுந்தரம், குணசேகரன், ராகவன், ஜெயசங்கர், பாலகிருஷ்ணன், கேசவ மூர்த்தி, ஜெய பிரகாஷ், ரவி, ஜெயமுருகன், பெரியசாமி, ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன், குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    ×