search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Must have served 2/3 of the sentence"

    • தமிழக சிறைகளிலிருந்து விதிமுறைகள் உட்பட்டு தகுதியுடைய கைதிகள் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.
    • கொடூர குற்றம், பலாத்காரம், பெண்க ளுக்கு எதிரான குற்றம் போன்ற செயலில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் விடுதலைப் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார்கள்

    சேலம்:

    இந்தியாவின் 75 -வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தமிழக சிறைகளிலிருந்து விதிமுறைகள் உட்பட்டு தகுதியுடைய கைதிகள் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையை தவிர ஆண்டு தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் விடுதலைக்கு தகுதியானவர்கள் என கூறப்பட்டுள்ளது. கொடூர குற்றம், பலாத்காரம், பெண்க ளுக்கு எதிரான குற்றம் போன்ற செயலில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் விடுதலைப் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார்கள் . ஏதேச்சையாக நடந்த சம்பவங்களில் தண்டனை மற்றும் சிறு குற்றங்களின் கீழ் தண்டனை பெற்றவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் 3-ல் 2 பங்கு தண்டனையை அனுபவித்து இருக்க வேண்டும், குறிப்பாக அவர் நன்னடத்தை கொண்டவராக இருக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி இடம் பெற்றுள்ளது. அதன்படி சுமார் தமிழகம் முழுவதும் 150 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சேலம் மத்திய சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×