search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugan"

    • திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
    • முருகனை அழைத்து வர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி உள்பட நான்கு பேரை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முருகன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவரது பூர்வீகம் இலங்கை என்பதால் அவர் திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

    இதையடுத்து திருச்சி முகாமில் இருக்கும் முருகன், லண்டன் செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தனபால் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என தெரிவித்தார்.

    மேலும், இலங்கை நாட்டின் துணை தூதரகம் ஆவணங்களை வழங்கினால் மட்டும் தான் முருகனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என்று தெரிவித்து இருக்கிறார். திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முருகனை அழைத்து வர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது.

    முன்னதாக உயர்நீதிமன்ற கிளையில் முருகன் தாக்கல் செய்த மனுவில் "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எனக்கும், என் மனைவி நளினிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவால் விடுதலை செய்யப்பட்டோம். நான் முகாமிலும், என் மனைவி, மகள் தனியாகவும் வசித்து வருகின்றனர். எனது மகள் லண்டனில் உள்ளார்."

    "32 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். எஞ்சியுள்ள காலத்தில் லண்டனில் உள்ள மகளுடன் வசிக்க ஆசைப்படுகிறோம். இதற்காக பாஸ்போர்ட் பெற பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும், ஆன்லைன் வழியாக இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும்," என்று கூறப்பட்டு இருந்தது.

    • தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் விரும்பி வணங்கிப் போற்றப்படும் தெய்வம் முருகன்.
    • முருகன் என்றதுமே மக்களின் உள்ளமெல்லாம் உருகும்.

    தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் விரும்பி வணங்கிப் போற்றப்படும் தெய்வம் முருகன்.

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என விளங்கி அடியார்களுக்கெல்லாம் முருகன் அருள் செய்து வருகின்றான்.

    முருகன் என்றதுமே மக்களின் உள்ளமெல்லாம் உருகும். முருகன் பால் மக்களுக்கு எல்லையில்லாத பக்தி உண்டு.

    தமிழ்நாட்டில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் முருகனுக்கு கோவில்கள் அமைத்திருக்கின்றனர்.

    முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி முதலிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டு மகிழ்கிறார்கள்.

    முருகன் கோவில்கள் எல்லாம் சிறந்த பிரார்த்தனை தலங்களாக விளங்குகின்றன.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் முருகன் கோவில்களில் பெருந்திரளாக கூடி வணங்கி மகிழ்கிறார்கள்.

    இன்றைக்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் பண்டைப் பெருந்தமிழ் நூலிலும், முருகன் வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

    மேலும் சங்ககால புலவர் பெருமான், முருகனை பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதிநூலை பாடி இருக்கின்றார்.

    அதன்மூலம் ஆறு திருத்தலங்கள் முருகனின் ஆறுபடை வீடுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.

    சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் முருகன் வழங்கப்படுகிறார்.

    புராணங்களில் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன.

    தந்தைக்கு "ஓம்" என்னும் பிரணவப் பொருளை முருகப்பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    அ,உ,ம, என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நுல்களுக்கும் மூலமாக உள்ளது.

    முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ,உ,ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன்.

    முருகப்பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்த தாகவும், மதுரை தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

    முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப்பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

    அதுபோல முருகனால் வாழ்வுபெற்று, முருகனின் வேலால் நாவில் தமிழ் எழுதப்பட்டு, முருகனின் அருளால் பாடல் பாடும் திறமை பெற்ற அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலங்கள் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

    அந்த வகையில் அருணகிரியாரால் நான்கு திருப்புகழ்கள் பாடப்பட சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கேட்ட வரம் அருளும் வல்லமை உடையவராக கருதப்படுகிறார்.

    இந்த தலத்தில் முருகன் பிரம்ம சாந்த மூர்த்தி தோற்றத்தில் உள்ளார்.

    பிரம்மனின் செருக்கை அடக்கி, படைத்தல் தொழிலை மேற்கொண்டு அடைந்த உருவமாகும்.

    ஒரு முகமும், நான்கு கரங்களும் விளங்கும்படியாக மூலவர் உள்ளார்.

    வலது கரத்தில் அபயம் அளித்து பின்பக்க வலது கரத்தில் ஜபமாலையும், முன்பக்க இடது கரம் இடுப்பிலும் பின்பக்க இடதுகரத்தில் கமண்டலமும் ஏந்தி தம்மைத் தொழுவோர்க்கு அபயம் அளித்துக் காக்கும் பொருட்டு எழுந்தருளி உள்ளார்.

    சூரனை அழித்து வெற்றிபெற்ற முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்ய, செல்லும் வழியில் சிறுவாபுரியில் சற்று இளைப்பாறி பிறகு இப்பசுமைச் சோலையில் பால சுப்பிரமணியராய் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

    சிறுவாபுரியில் தங்கி அமுது உண்ட இந்திரன் முதலான தேவர்களுக்கு வீடு பேறு கிடைக்க முருகன் அருளினான்.

    இத்தலத்து சுப்பிரமணியரை வழிபட நல்ல குடும்பம், சிறந்த வீடு அமையும் என்பது ஐதீகம்.

    மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலைய சுவாமிகள் தீப குண்டலத்தில் நெய்யினால் நிரப்பப்பட்ட மகா தீபத்தை ஏற்றிவைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில்வடிவ மலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6 மணி அளவில் உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்று.

    மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலைய சுவாமிகள் தீப குண்டலத்தில் நெய்யினால் நிரப்பப்பட்ட மகா தீபத்தை ஏற்றிவைத்தார். தொடர்ந்து முருகன், வள்ளி தெய்வானையுடன் மலைவல காட்சி நடைபெற்றது. பின்னர் சொக்கப்பனை என்னும் பெருஞ்ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. இதில் புதுச்சேரி, கடலூர் விழுப்புரம் போன்ற பெரு நகரங்களில் இருந்தும் மயிலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
    • விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.

    கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி

    ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.

    சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார்

    அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய் ஆறுமுகக் குழந்தையாய்

    தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.

    அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.

    சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி உங்களுக்கு மங்களம் உண்டாகுக உங்களால் வளர்க்கப்பட்ட

    இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம்.

    உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு

    அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும்,                                                               அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

    வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகின்றனர்.

    அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்த்துவது போலாகும்.

    பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.

    எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனது மறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அனந்தனைப் பணிந்து கேட்டான்.

    திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில் 'கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ' என்று பாடியுள்ளார்.

    ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடனும் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார்

    என்றும், அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி

    விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.

    இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம்,

    பழனி, திருச்செந்தூர் முதலிய கோவில்களில் திருவண்ணாமலைக் கோவிலைப் போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

    சில ஊர்களில் மந்தாரை இலையில், தீபம் ஏற்றுகிறார்கள். வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள்.

    • நிறைவு நாளான 18-ந் தேதி இரவு தென்மாட வீதியில் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.
    • 19-ந் தேதி மாலை சந்தனக்காப்பும், 20-ந் தேதி பாலாபிஷேகமும் நடைபெறுகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் ஆறுமுக சுவாமி கந்த சஷ்டி உற்சவம் நாளை மறுநாள் துவங்குகிறது. இந்த உற்சவம் வரும் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடுகள் நடைபெறுகிறது. நிறைவு நாளான 18-ந் தேதி இரவு தென்மாட வீதியில் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.

    19-ந் தேதி மாலை சந்தனக்காப்பும், 20-ந் தேதி பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறையினர் கந்த சஷ்டி உற்சவவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முருகன் என்றால் 'அழகன்' என்று பொருள்.
    • கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம்.

    முருகன் என்றால் `அழகன்' என்று பொருள். கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம். அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளின்றி உலகத்தில் பொருளேது! முருகா! என்று ஒரு அற்புதமான பாடல் உண்டு. முருகா என்று ஒருமுறை அழைத்தால் உருகாத மனமும் உருகும், பெருகாத செல்வம் பெருகும்.

    இந்த மாதத்தில் ஆறுபடை வீட்டு முருகனை வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டுடிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு பேருடைய பிரச்சினைகளை அழிக்க வல்லவன். பனிரெண்டு கரங்களை பெற்றிருப்பதால் அள்ளிக்கொடுக்ககும் ஆற்றலைப் பெற்ற வள்ளல். அதனால் தான் நாம் கேட்ட வரத்தை கேட்ட நிமிடத்திலேயே பெற முடிகிறது.

    வேலோடும், மயிலோடும் வந்து நம் வேதனைகளை எல்லாம் மாற்றி, சாதனைபுரிய வைப்பவன் முருகப்பெருமான் என்பதை கும்பிட்டவர்கள் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்த தீப்பொறிகள் கங்கையில் பறந்த போது கங்கையே வற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து விசாகத் திருநாளில் அவதரித்தவன் முருகப்பெருமான்.

    கங்கையில் தோன்றியதால் 'காங்கேயன்' என்ற ஒரு பெயர் வந்தது. சரவண பொய்கையில் தோன்றியதால் தான் 'சரவண பவன்' என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் 'கார்த்திகேயன்' என்றும் திருநாமம் உண்டாயிற்று.

    திருப்பரங்குன்றம்

    இது முதல் படைவீடாகும். தேவர்களின் துயரம் நீக்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து வைத்த இடம் திருப்பரங்குன்றம்.

    திருச்செந்தூர்

    அடுத்ததாக சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றிகண்ட இடம் திருச்செந்தூர். மாமரமாக நின்ற சூரனை முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். ஒரு பகுதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார் முருகப்பெருமான். சேவலை கொடியாக்கிக்கொண்டான்.

    பழனி

    இது மூன்றாவது படைவீடாக உள்ளது. மாம்பழத்திற்காக மயிலேறிப் பறந்து சென்று உலகைச்சுற்றினார்கள் பிள்ளையாரும், முருகனும். ஆனால் முன்னதாகவே `அன்னையும் பிதாவும் அகிலம்' என்று சொல்லி சிவன்-பார்வதியை சுற்றி வந்து பழத்தை வாங்கிக்கொண்டார் ஆனைமுகப் பெருமான். எனவே கோபத்தோடு முருகன் மலையேறி நின்ற இடம் தான் பழனி.

    சுவாமிமலை

    நான்காம் படை வீடு சுவாமிமலை. தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்த இடமாகும். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள் அதற்கு கீழும் தான் இருக்க வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக் கொண்டு அதில் அமர்ந்து சிவன் காதில் உபதேசிப்பது புதுமை. பிரணவத்தின் பொருளை உபதேசித்ததால் தான் `சுவாமிநாதன்' என்ற பெயர் உண்டாயிற்று.

    திருத்தணி

    ஐந்தாம் படை வீடு திருத்தணி. முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் திருத்தணி. சினம் இருந்தால் பணம் வராது. எனவேதான் மனிதர்கள் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும். என்பார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே கோபம், படபடப்பு இருப்பவரிகள் அது நீங்க இத்திருத்தலம் சென்று வழிபடுவது நல்லது.

    பழமுதிர்சோலை

    ஆறாவது படை வீடு பழமுதிர்சோலை. அவ்வை பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம் என்பார்கள். 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று தமிழ்ப்புலமை பெற்ற அவ்வையிடம் வாதிட்ட இடம்தான் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புபவர்கள் இங்கு சென்று வந்தால் வெற்றியை வேகமாகப் பெற முடியும்.

    "வேலும் மயிலும், வேலும் மயிலும்` என்று சொல்லி அந்த வேலவனின் ஆறுபடை வீட்டிற்கும் சென்று வாருங்கள். முருகப்பெருமானைக் கைகூப்பித்தொழுதால் நலம் யாவும் வந்து சேரும். படைவீடு செல்லுங்கள். பகை வெல்லும்! பணம் சேரும்!

    • முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன்.
    • உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும்.

    மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும்.

    ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ வழிபாடு தொடங்கினார்கள்.

    ஒரு குழந்தை வடிவம் படைத்து அதை கடவுளாக வழிபாடு செய்தது முருகன் வழிபாடு என சொல்கிறார்கள்.

    உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும்.

    முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன்.

    அதனால் முருகனைக் "குறிஞ்சிக் கிழவன்" "மலைகிழவோன்" என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.

    முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு.

    மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான்.

    "முருகு" என்ற சொல்லுக்கு அழியாத அழகும், குன்றாத இளமையும், இயற்கை மணமும், எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல பொருள்கள் உண்டு.

    "மு" என்பது திருமாலையும் "ரு" என்பது சிவபெருமானின் அம்சத்தையும் "க" என்பது பிரம்மனையும் குறிக்கும் என்பர்.

    தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும்,

    தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும்,

    தனி நிலை எனப்படும் ஆய்தமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு,

    தமிழ் தெய்வமாகிய முருகன் தமிழ் வடிவாக விளங்குகின்றான்.

    ஞானமே உடலாகவும், இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும்,

    இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நூறாயிரம் சூரியன்கள் ஒரே காலத்தில் ஒளி வீசுவது போன்ற பேரழகு வாய்ந்த தெய்வீக வடிவம் கொண்டவன் முருகன்.

    முருகனை வணங்கினால் எல்லாக் கடவுள்களையும் வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம்.

    மகனுக்கு செய்யும் சிறப்பால், தந்தை தாயாகிய சிவ பெருமானும் உமாதேவியும், தம்பியைப் போற்றுதலால்

    சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும், தலைவனை வணங்குதலால்

    தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது.

    முருகன் தன் பக்தர்கள் வேண்டும் கோரிக்கைகளை எல்லாம், அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்து அருளும் தன்மை வாய்ந்தவன்.

    முருகனை அடைந்தால் அவன் நம் துன்பத்தை அழிப்பான்.

    முருகனை அன்புடன் வழிபட்டு முருகா முருகா என எப்போதும் கூறித் தியானிப்பவர்கள்

    என்றும் குறையாத பெரும் செல்வத்தைப் பெறுவார்கள், அவர்களை ஒருேபாதும் எத்தகைய துன்பமும் அணுகாது.

    • இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.
    • அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும்.

    பன்னாரி மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா மிகவும் புகழ் பெற்றது.

    ஆயிரக்கணக்கானவர்கள் அக்னி குண்டம் இறங்குவர்.

    பங்கு மாத உத்திரத்திறகு முந்தின 15ம் நாள் இரவு பன்னாரி மாரியம்மனுக்கு பூச்சாற்று நடைபெறும்.

    மறுநாள் வன துர்க்கை அம்மன் புறப்பாடு நடக்கும்.

    இது ஒரு வித்தியாசமான ஊர்வலம். அப்போது சோலகர் என்ற மலைவாசிகளின் வாத்தியங்களும்,

    அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும்.

    மலைவாழ் மக்களும் சுற்றியுள்ள வனப் பகுதி மக்களும் பெரிய தனக் காரர்களும் புடைசூழ வந்து நடத்துவர்.

    இந்த ஊர்வலம் 8ம் நாள் கோவிலுக்கு வந்துசேரும்.

    மறுநாள் இரவு அம்பிகை ஆராதனை செய்து அக்னி கம்பம் போடுவர்.

    பூச்சாற்றின் 15ம் நாள் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மாட்டு வண்டி, பஸ், சைக்கிள், நடைப் பயணம் என பன்னாரிக்குப் புறப்படுவார்கள்.

    மலர் வகைகள் வந்து குவியும். தங்கக் கவசம் ஆடை, ஆபரணம் பூட்டி அம்மன் அலங்காரம் முடியும்.

    முக்கிய அம்சமான அக்னி குண்ட வழிபாடு நடக்கும்.

    இதில் விளை பொருட்களைக் காணிக்கையாகத் தருவார்கள்.

    இந்தக் கானகத் திருவிழா தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும் தான் இவ்வளவு சிறப்பாக மக்கள் பெருமளவில் பங்கு பெற்று நடத்துவர்.

    அன்றிரவு சுமார் ஒரு மணிக்கு அம்மன் அழைப்பு நடைபெறும். தெப்பக்கிணற்று அருகே உள்ள அம்மனை அழைத்து வந்து அக்னி குண்டம் அருகே இருத்துவர். குண்டம் சமப்படுத்தப்படும்.

    மறுநாள் காலை, பூசாரி பூஜை செய்தபின் முதலில் குண்டம் இறங்குவார்.

    பிறகு வரிசையாய் ஆண்களும் பெண்களும் இறங்குவார்கள். கடைசியாக கால்நடைகளும் குண்டம் இறங்கும்.

    இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

    • பங்குனி மாத 15ம் நாளன்று கொடியேற்றம் நடைபெறும்.
    • இரண்டாம் நாள் கற்பக விருட்சம். மூன்றாம் நாள் பூதவாகனம்,

    திருச்சி தாயுமானவர் ஆலயம் குழந்தைப்பேறு, சுகப்பிரசவ பிரார்த்தனை தலம்.

    தென்னகத் தலங்களுள் இத்தலத்தை தென் கயிலாயம் என்பர்.

    நில எல்லையில் இருந்து பார்த்தால் மூன்றடுக்கு உடையதாக இம்மலை தோற்றமளிக்கும்.

    மட்டுவார் குழலியம்மன் திருக்கோவில், தாயுமானவர் கோவில். உச்சிப் பிள்ளையார் கோவில் என அமைந்துள்ளது.

    மேற்கு பார்த்த மூர்த்தலிங்கம் தமிழகத்தின் நான்காவது பெரிய லிங்கம் ஆகும்.

    பங்குனி மாதம் இக்கோவிலில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    அதில் 9ம் நாள் அன்று பங்குனி உத்திரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

    10ம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். இத்தெப்பத்திற்கு தான் தாயுமானவர் தெப்பம் என பெயர்.

    பங்குனி மாத 15ம் நாளன்று கொடியேற்றம் நடைபெறும்.

    ஒன்பதாம் நாள் பங்குனி உத்திரமாக இருக்கும்படி தான் விழா ஏற்பாடு செய்வார்கள்.

    இரண்டாம் நாள் கற்பக விருட்சம். மூன்றாம் நாள் பூதவாகனம்,

    நான்காம் நாள் கைலாச பர்வதம், ஐந்தாம் நாள் வெள்ளை ரதம், ஆறாம் நாள் யானை வாகனம்,

    ஏழாம் நாள் நந்தி வாகனம், எட்டாம் நாள் தங்க குதிரை வாகனம், ஒன்பதாம் நாள் தெப்ப உற்சவம்,

    பத்தாம் நாள் தீர்த்தவாரியுடன் விழா இனிதே நடைபெற்று முடிவடையும்.

    • ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.
    • இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.

    திருநெல்வேலி மாவட்ட தென்கோடியில் தெற்கு கருங்குளம் என்ற கிராமத்தில் பூ அய்யப்பன் ஆலயம் அமைந்துள்ளது.

    இங்கு பங்குனி உத்திரத்தன்று மெகா கொழுக்கட்டை வழிபாடு செய்கின்றனர்.

    இது முழுக்க முழுக்க ஆண்களே செய்யும் வேலை.

    விரதம் இருந்து, எச்சில் படாமல் இருக்க வாயில் துணி கட்டிக் கொண்டு செய்வர்.

    ஒரு கோட்டை நெல்லில் இருந்து பெறப்படும் பச்சரிசி 42 படி இருக்கும்.

    இது கிலோ கணக்கில் பார்த்தால் 63 கிலோ வரும் இந்தப் பச்சரிசியை ஆண்களே இடித்து மாவாக்குவார்கள்.

    மாவில் நீர் விட்டுப் பிசைந்து உருட்டித் தட்டுவார்கள்.

    இதை காட்டுக் கொடி நிரவி, அதன் மீது இலைகளை பரப்பி உருட்டித் தட்டிய அரிசி மாவை அடுக்குவார்கள்.

    அதன் மீது சிறுபயறு, தேங்காய்த் துருவல் கலந்து பூரணத்தையும் வைப்பர்.

    இப்படி மாவு, பூரணம் என மாறி மாறி அடுக்கியபின் காட்டு இலையை பரப்பி மூடி,

    காட்டுக்கொடியால் உருண்டை வடிவில் கட்டிவிடுவார்கள்.

    மெகா கொழுக்கட்டை உருவாகி விட்டது.

    இதற்கு முன்பே கட்டைகள் எடுத்து தணல் உருவாக்கி இருப்பார்கள்.

    ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.

    சாமி ஆடியப்படியே ஐந்தாறு பேர் சேர்ந்து தூக்கும் கொழுக்கட்டையை இவர் ஒருவரே அனாயசமாகத் தூக்கி தணல் நடுவே போடுவார்.

    யாராலும் நெருங்க முடியாத தணலில் அங்கிருந்து கொழுக்கட்டையை உருட்டிப் புரட்டி வேக வைத்து விடுவார்.

    இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.

    ஆயிரக்கணக்கானோர் இவ்வழிபாட்டை தரிசிப்பார்கள்.

    பின் மறுநாள் கொழுக்கடையை பிரித்து ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் பிரசாதமாக கொடுப்பார்கள்.

    • இந்த நாளில்தான் சிவபார்வதி திருமணம், முருகன்வள்ளி திருமணம் நடந்தது.
    • முத்துக் குமாரசுவாமியை வணங்கி வர நிச்சயமாக திருமணம் கைகூடும்.

    வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், கார்த்திகையில் வரும் கார்த்திகை,

    தைப்பூசம் ஆகிய சிறப்பு நட்சத்திரங்களின் வரிசையில் வருவது பங்குனி உத்திரம் ஆகும்.

    இந்த நாளில்தான் சிவபார்வதி திருமணம், முருகன்வள்ளி திருமணம்,

    சாஸ்தாவின் பிறப்பு ஆகியவை இந்த நட்சத்திர தினத்தில்தான் நடந்தது.

    செவ்வாய் தோஷமா?

    முருகப்பெருமான் பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்தவர் என்பதால், திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள், ஜாதக ரீதியாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்,

    காரணமின்றி திருமணம் தடைபடுபவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக் குமாரசுவாமியை (முருகன்)

    வணங்கி வர நிச்சயமாக உரிய பலன்கள் கிடைக்கும்.

    • சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள சிலை போலவே இவரது சிலையும் காட்சியளிக்கிறது.
    • விஷ்ணு மோகினி வடிவெடுத்து சிவனுடன் இணைந்து ஒரு மகனைப்பெற்றார்.

    நெல்லை மாவட்டம் ஆழ்வார் குறிச்சியில் காக்கும் பெருமாள் சாஸ்தா என்ற கோவில் உள்ளது.

    ராம நதிக்கரையில் குடிகொண்டுள்ள இவர் ராமரால் உருவாக்கப்பட்டவர்.

    பெருமாளின் பெயருடன் இந்த சாஸ்தா இருப்பதால் இவருக்கு மகிமை அதிகம்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள சிலை போலவே இவரது சிலையும் காட்சியளிக்கிறது.

    பங்குனி உத்திரத்தில் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் பறந்தோடி விடும் என்று நம்பப்படுகிறது.

    அவதார நட்சத்திரம்

    மகிஷி என்ற அரக்கியை அழிக்க தேவர்கள் விரும்பினார்கள்.

    அவளை ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறக்காத ஒருவரே அழிக்க முடியும் என்பதால்,

    விஷ்ணு மோகினி வடிவெடுத்து சிவனுடன் இணைந்து ஒரு மகனைப்பெற்றார்.

    அந்த மகன் தர்மசாஸ்தா ஆவார்.

    இவர் மகிஷியை அழித்தார். அய்யப்பனின் அவதாரமாகக் கருதப்படுவது இவரே.

    சாஸ்தா அவதாரம் எடுத்தது பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆகும்.

    ×