search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal Chairman"

    • ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தற்காலிக குடிநீர் வசதி பொதுமக்கள் வசதிக்காக உடனடியாக ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்நிலையில் கோவிலை சுற்றி உள்ள மாட வீதிகள், கோயில் முன்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் சுகாதாரப் பணிகள் மற்றும் தற்காலிக குடிநீர் வசதிகள் ஏற்படுத்தும் இடங்கள் ஏற்கனவே உள்ள கழிப்பிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அதிகாரி களிடம் சுகாதார பணிகளை திருவிழா நாட்களில் முழு நேரமும் கண்காணித்து குப்பைகள் சேராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும் எனவும், தற்காலிக குடிநீர் வசதி பொதுமக்கள் வசதிக்காக உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அவர் கூறினார்.

    மேலும் தற்காலிக குடிநீர் டேங்குகளில் குடிநீர் இருப்பை அடிக்கடி ஆய்வு செய்து குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களை கேட்டு கொண்டார்.

    தொடர்ந்து கழிப்பிடத்தை நிர்வகித்து வருபவர்களிடம் அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் பொதுமக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் விழா காலங்களில் பொதுமக்களிடம் கட்டணம் அதிகமாக வசூலிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

    ஆய்வின் போது நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் வெங்கட்ராமன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன், கோவில் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பல்லடம் நகராட்சிக்கு தினசரி 46 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்க வேண்டும்.
    • நகரில் பல்வேறு இடங்களில் பற்றாக்குறையாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் மின் மோட்டாா் வைத்து குடிநீா் உறிஞ்சியது கண்டறியப்பட்டால் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் கூறியதாவது:- பல்லடம் நகராட்சிக்கு தினசரி 46 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்க வேண்டும். ஆனால் தற்போது 10 லட்சம் லிட்டருக்கும் குறைவாக தான் தண்ணீா் வருகிறது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் பற்றாக்குறையாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிடைக்கின்ற தண்ணீரை அனைத்து வாா்டு பகுதிக்கும் ஏற்றத்தாழ்வு இன்றி வழங்கிடவும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப கூடுதல் குடிநீா் பெற்றிடவும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டியில்11-வது வாா்டு பெரியாா் நகா் பகுதியில் குடிநீா்க் குழாய் இணைப்பில் மின் மோட்டாா் பொருத்தி தண்ணீா் உறிஞ்சி எடுக்கப்படுவதால் தங்களுக்கு போதிய குடிநீா் கிடைப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் புகாா் மனுவில் கூறியிருந்தனா்.

    அதைத்தொடா்ந்து நகராட்சி அலுவலா்கள் அப்பகுதியில் ஆய்வு செய்த போது 3 குடிநீா்க் குழாய் இணைப்புகளில் மின் மோட்டாா் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நகராட்சி அலுவலா்கள் அந்த இணைப்புகளைத் துண்டித்து மோட்டாா்களை பறிமுதல் செய்துள்ளனா். பல்லடம் நகராட்சி பகுதியில் மின் மோட்டாா் வைத்து குடிநீா் குழாயில் தண்ணீா் உறிஞ்சி எடுத்தால் உடனடியாக குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பல்லடம் நகராட்சி பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றாா்.

    ×