என் மலர்

  நீங்கள் தேடியது "Mumba Indians"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து எந்தவொரு ஆதாயமும் பெறவில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் விளக்கம் அளித்துள்ளார். #BCCI
  கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், பிசிசிஐ-க்கு ஆலோசனை வழங்கும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் இடம்பிடித்தார். தொடர்ந்து அந்த அணியில் இருந்து பிசிசிஐ-க்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

  இவர் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் இருந்து வருகிறார். அந்த அணி எங்கெல்லாம் சென்று விளையாடுகிறதோ, அங்கெல்லாம் சச்சின் செல்கிறார். இதனால் அவர் ஆலோசகராக செயல்படுகிறார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  இதனால் இரட்டை ஆதாயம் தரும் பதவி வகிக்கிறார் என்று மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தில் உள்ள சஞ்சீவ் குப்தா என்பவர் பிசிசிஐ-யின் குறைதீர்க்கும் அதிகாரியிடம் புகார் கூறியிருந்தார்.  இந்நிலையில் ‘‘சச்சின் தெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்த எந்தவொரு ஆதாயமும் பெறவில்லை. அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் தேர்வு அல்லது மற்ற எந்தவொரு பதவியிலும் இல்லை’’ என அவர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
  ×