search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcyle"

    • சாலைகளில் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாகன ஒட்டிகள் அதிவேகமாக சென்றது தெரியவந்தது.

    ஊட்டி

    கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் வார விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா வருகின்றனர். அவர்கள் சாலைகளில் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.


    இதையடுத்து அதிவேகமாக செல்வதை கட்டுப்படுத்தவும், அதிவேகமாக செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும் போலீசார் ஊட்டியில் உள்ள முக்கிய இடங்களில் வாகன சோதனை நடத்தினர்.

    ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் போலீசார் நவீன கருவி மூலம் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.

    இதில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாகன ஒட்டிகள் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. தொடர்ந்து 200 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மலைப்பாதையில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

    • மோட்டார் சைக்கிள் திருட்டு போனது சம்பந்தமாக 100 நாட்களுக்கும் மேல் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது. தற்போது 15 நாட்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
    • கோவை மாநகரம் முழுவதும், கண்காணிப்பு காமிராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் சிங்காநல்லூர் போலீஸ்நிலைய எல்லைக்கு உட்பட்ட, நந்தா நகர் பகுதியில், ஒருங்கிணைந்த கண்காணிப்பு காமிரா மையம் தொடக்கவிழா நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், 32 கண்காணிப்பு காமிராக்களை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.முழுக்க முழுக்க இந்த பகுதி முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட தெருக்களின் நுழைவு வாயில், சாலை என அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களை பார்வையிட்டு மக்களை பாராட்டினார்.அப்போது அவர் பேசியதாவது:-

    இங்கு தொடங்கப் பட்ட கண்காணிப்பு காமிராக்களின் பணியை நான் வரவேற்கிறேன், மேலும், கோவை மாநகரம் முழுவதும், கண்காணிப்பு காமிராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். உங்களது வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், உங்களது வீதி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த பகுதி முழுவதும், மூன்றாவது கண் எனப்படும், இது போன்ற கண்காணிப்பு காமிராக்கள் இருக்க வேண்டும்.

    ரத்தினபுரியை சேர்ந்த 6 திருநங்கைகள் ஊர்காவல் படையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை பணியில் சேர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரகிறது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.மக்கள் தங்கள் சொந்த செலவில் காமிராக்களை பொருத்தி உள்ளனர். அது மகிழ்ச்சியை தருகிறது. கோவையில் 50 மீட்டர் தூரத்திற்கு ஒரு காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    காந்திபுரத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவதை தடுக்க அதிகளவிலான ரோந்து செல்ல போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மோட்டார் சைக்கிள் திருட்டு போனது சம்பந்தமாக 100 நாட்களுக்கும் மேல் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது. தற்போது 15 நாட்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 90 நாளில் திருட்டு போன மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை என்றால் தடையில்லா சான்று தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் கோவை சரகம் சிங்காநல்லூர் காவல் உதவி ஆணையாளர் எம்.ஜி. அருண்குமார், கோவை மாநகரம் தெற்கு, காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவை மாநகரில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது கண்காணிக்கப்பட்டு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவை:

    கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றியவர் செந்தில்குமார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக நெல்லையில் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றிய மதிவாணன் நியமிக்கப்பட்டார்.

    அவர் இன்று காலை கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறும்போது, கோவை மாநகரில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது கண்காணிக்கப்பட்டு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெற்றோர்கள் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட போக்குவரத்து துணை கமிஷனருக்கு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×