search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcycle collision"

    படு காயம் அடைந்த ஆதிசங்கர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மேமாளூர் கிராமத்தை சேர்ந்தவர் சி உத்திரியநாதன்(வயது40). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லவாடி பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே செங்கணாங்கொல்லை கிராமத்தை சேர்ந்த ஆதிசங்கர்(34) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த உத்திரியநாதனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சை க்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    படு காயம் அடைந்த ஆதிசங்கர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.
    • இவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த படுகாயம் அடைந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே மண்டக மேடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் விவசாயி. இவர் கடந்த 23-ந் தேதி கடலூர், சித்தூர் சாலையில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு  பலத்த படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரை மீட்டு முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் இன்று காலை இறந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சூலூர் அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    சூலூர்:

    கேரளா மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் விஷ்ணு (வயது 23 ). கோழிக்கோட்டை சேர்ந்த அகமது ஷெரீப் என்பவரது மகன் சையத்அப்துல் பாசித்( 24). இவர்கள் 2 பேரும் சூலூரில் உள்ள ஆயுர்வேத கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி ரோட்டில் சென்றனர். சூலூர் பிரிவு அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதியது. விபத்தில் சம்பவஇடத்திலேயே விஷ்ணு பரிதாபமாக இறந்தார். சையத் அப்துல் பாசித் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×