search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money robbery"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கி கணக்கில் இருந்து பணம் மும்பை ஏ.டி.எம். கார்டை வைத்து எடுத்தது தெரிய வந்தது.
    • சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த வாலூரை சேர்ந்தவர் தசரதன் (வயது 35). இவர் வெலக்கல் நத்தம் பகுதியில் செல்போன் சர்வீஸ் மற்றும் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் ஜெயபால் (47). டெய்லர். இவரும், வாலிபர் ஒருவரும் தசரதன் செல்போன் கடைக்கு பைக்கில் வந்தனர்.

    அப்போது தசரதனிடம் வாலிபர் தனக்கு அவசரமாக ரூ.20 ஆயிரத்தை கூகுள் பே அல்லது ஜி பேயில் அனுப்புமாறும் கையில் பணத்தை தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய தசரதன் ஆன்லைன் மூலம் ரூ.20 ஆயிரத்தை வாலிபர் சொன்ன எண்ணுக்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் பணத்தை தசரதன் கேட்டார். அதற்கு அந்த வாலிபர் அருகே உள்ள ஏ.டி.எம்-மிற்கு சென்று பணத்தை எடுத்து வந்து தருவதாக கூறினார். இதனால் ஜெயபாலை செல்போன் கடையில் அமர வைத்துவிட்டு வாலிபர் பணத்தை எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றார்.

    வெகு நேரமாகியும் வாலிபர் வராததால் ஜெயபால், நான் சென்று பார்த்து வருகிறேன் என்று தசரதனிடம் கூறிவிட்டு சிறிது தூரம் சென்றார். சந்தேகம் அடைந்த தசரதன் கத்தி கூச்சலிட்டார். அப்போது அங்கிருந்து ஓட்டம் பிடித்த ஜெயபாலை அருகே இருந்த வியாபாரிகள் விரட்டி பிடித்தனர்.

    பின்னர் ஜெயபாலிடம் விசாரித்தபோது, தன்னுடன் வந்த வாலிபர் யார் என்பது எனக்கும் தெரியாது. நான் மது குடிக்க வந்தேன். அங்குதான் அந்த வாலிபரை சந்தித்தேன்.

    மேலும் அந்த வாலிபர் எனக்கு ஒரு குவாட்டர் வாங்கி தருகிறேன் என்று கூறி என்னுடன் வாருங்கள் என்று இங்கே அழைத்து வந்தார். நானும் மது பழக்கத்தால் குவாட்டருக்கு ஆசைப்பட்டு வந்தேன். என்னை அடகு வைத்து மாட்டி விட்டு சென்றுவிட்டார் என்று புலம்பினார்.

    தசரதன் உடனடியாக வங்கிக்கு சென்று வாலிபர் கொடுத்த செல்போன் நம்பரை வைத்து வங்கி கணக்கை பரிசோதித்து பார்த்தார். அப்போது வங்கி கணக்கில் இருந்து பணம் மும்பை ஏ.டி.எம். கார்டை வைத்து எடுத்தது தெரிய வந்தது.

    ஜெயபாலை நாட்டறம் பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். டெய்லரை அடகு வைத்த கில்லாடி திருடனை தேடி வருகின்றனர்.

    சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
    • உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் பஞ்சாயத்து ராஜா தோப்பு பகுதியில் அமைந்துள்ளது முனியப்பன் கோவில் அதன் அருகே காமாட்சி அம்மன் கோவிலும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள் பூட்டி இருந்த கோவில் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கோவில் பூசாரி மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி, குத்து விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவயிடம் வந்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமாரவை கைபற்றி அதில் இருந்த பதிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் கோவில் கதவின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே வரும் கொள்ளையன் சட்டை அணிந்திருக்கவில்லை. உண்டியலுக்கு வந்து அதனை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்கிறான். இதனையடுத்து அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலியை எடுத்து கொண்டு தப்பி செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.

    இது குறித்து அனுமந்தபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது;-

    இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த காரிமங்கலம் போலீசார் கொள்ளை நடந்த இடம் தங்களது எல்லைக்கு உட்பட்டது இல்லை. பாலக்கோடு் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர்.

    • கோவில் கட்ட சேகரிக்கப்பட்ட பணம் ரூ.11 லட்சத்தை அரிமளம் வீட்டில் உள்ள பெட்டியில் வைரவன் வைத்துள்ளார்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரித்தனர்.

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் வைரவன். இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மீனாட்சி புரம் வீதியில் சொந்தமான 100 ஆண்டு பழைமை வாய்ந்த வீடு ஒன்று உள்ளது.

    அவ்வப்போது அரிமளத்தில் உள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் செல்வதை வைரவன் வழக்கமாக வைத்துள்ளார்.

    அரிமளம் அருகே இசுகுப்பட்டி கிராமத்தில் வைரவன் குடும்பத்தாருக்கு சொந்தமான இடத்தில் அய்யனார் கோவில் கட்டுவதென்று வைரவன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    அதற்காக பணம் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட பணம் ரூ.11 லட்சத்தை அரிமளம் வீட்டில் உள்ள பெட்டியில் வைரவன் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் வைரவன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. வீட்டில் அறையில் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.11 லட்சம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக அரிமளம் போலீசில் வைரவன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரித்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடிவருகின்றனர்.

    • விருதுநகர் அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் தாலி, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக சிறிய கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் மேலும் ஒரு கோவிலில் துணிகர கொள்ளை நடந்துள்ளது.

    அதன் விபரம் வருமாறு:-

    விருதுநகர் அருகே உள்ள வெள்ளூர்-புதுப்பட்டி ரோட்டில் மாகாளி பட்டி என்ற இடத்தில் தும்மம்மாள் அம்மன் கோவில் உள்ளது. கிராம கோவிலான இங்கு அதே பகுதியை சேர்ந்த சிவக் குமார் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் சம்பவத் தன்று இரவு பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அலுவலக அறைக்கு சென்ற கொள் ளையர்கள் அம்மனின் தங்க தாலி, வெள்ளி நாகர் சிலை, உண்டியல் பணம் 3 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். மறு நாள் கோவிலுக்கு வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு தாலி, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகி சுந்தரராஜன் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • கட்டிட பொருட்கள் வாங்குவது போல சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை விபரங்களை கெஜின் அனித்திடம் கேட்டு பெற்றனர்.
    • வாடிக்கையாளர்கள் போல வந்த மர்மநபர்கள் 2பேரும் கவனத்தை திசை திருப்பி பணத்தை சுருட்டி சென்றது தெரிந்தது.

    போரூர்:

    சென்னை வடபழனி, சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கெஜின் அனித். அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மாலை "டிப் டாப்" உடையணிந்த வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்கள் கட்டிட பொருட்கள் வாங்குவது போல சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை விபரங்களை கெஜின் அனித்திடம் கேட்டு பெற்றனர். பின்னர் நாளை வந்து பொருட்களை வாங்குவதாக கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

    சிறிது நேரம் கழித்து கெஜின் அனித் பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 40 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது. வாடிக்கையாளர்கள் போல வந்த மர்மநபர்கள் 2பேரும் கவனத்தை திசை திருப்பி பணத்தை சுருட்டி சென்றது தெரிந்தது.

    • திருப்பதி தேவஸ்தான விடுதி அறைகளை வாடகைக்கு எடுக்கும் பக்தர்களுக்கு வழக்கமாக 2 சாவிகள் வழங்குவது வழக்கம்.
    • கோவா பக்தர்களுக்கு ஒரு சாவி மட்டுமே விடுதி ஊழியர்கள் வழங்கி உள்ளனர்.

    திருப்பதி:

    கோவாவை சேர்ந்த 15 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்தனர்.

    அவர்கள் கருடாத்ரி நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தங்கும் விடுதியில் 2 அறைகளை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் காலை தரிசனத்திற்கு சென்றனர்.

    அந்த நேரத்தில் மர்மநபர்கள் அறையின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம், 5 செல்போன்களை திருடி சென்று விட்டனர். தரிசனம் முடிந்து வந்த பக்தர்கள் அறையில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அறைக்குள் சென்று பார்த்த போது அவர்களது உடமைகள் அனைத்தும் சிதறி கிடந்தது.

    திருப்பதி தேவஸ்தான விடுதி அறைகளை வாடகைக்கு எடுக்கும் பக்தர்களுக்கு வழக்கமாக 2 சாவிகள் வழங்குவது வழக்கம்.

    ஆனால் கோவா பக்தர்களுக்கு ஒரு சாவி மட்டுமே விடுதி ஊழியர்கள் வழங்கி உள்ளனர். இதனால் விடுதி ஊழியர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது.

    இது குறித்து பக்தர்கள் திருமலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கதவின் பூட்டு உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    காட்பாடி:

    வள்ளிமலை அடுத்த பெரியமிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (45). லாரி டிரைவர்.

    இவ ரது மனைவி ஜெயந்தி (39). இவர்கள் இருவரும் நேற்று காலை வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்.

    பின்னர் மாலை வீட்டுக்கு திரும்பி வந்தனர். அங்கு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சிய டைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென் றது தெரிந்தது.

    இதுகுறித்து வெங்கடே சன் கொடுத்த புகாரின் பேரில் மேல்பாடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராகவன் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் பணத்தை எடுத்தார்.
    • பணத்தை மொபட் சீட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டு வண்டலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட செங்கழனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராகவன் (வயது 46). இவர் நேற்று கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் பணத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை மொபட் சீட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டு வண்டலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார்.

    அங்கு மொபட்டை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது தனது மொபட் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ராகவன் ஒட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாலுகா அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள், இதேபோல கூடுவாஞ்சேரியில் ராகவன் பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் பணத்தை திருடிய மர்ம நபர்களை ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வண்டலூர் தாலுகா அலுவலகம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரியல் எஸ்டேட் ஊழியர்கள் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • ரியல் எஸ்டேட் ஊழியர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி வருவதாகவும் தெரிகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பகுதியில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்த 2 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

    நேற்றிரவு ஊழியர்கள் 2 பேரும் அலுவலகத்தில் இருந்த ரூ. 7 லட்சத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சாயர்புரம் சென்றனர். புதுக்கோட்டை தேரி ரோட்டில் அவர்கள் சென்ற போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ. 7 லட்சத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து ரியல் எஸ்டேட் ஊழியர்கள் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரியல் எஸ்டேட் ஊழியர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி வருவதாகவும் தெரிகிறது.

    எனவே அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாவியை எடுத்து மர்ம கும்பல் கைவரிசை
    • கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஹாயாத் நகரை சேர்ந்தவர் பியாரோ(வயது 56). மிளகாய் பொடி வியாபாரி. இவரது மனைவி சமிம் இவர்களுக்கு இர்பான் என்ற மகனும், சல்லூர், நிகார், அம்ரின் 3 மகள்களும் உள்ளனர்.

    வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிகாரின் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. இதனால் அவருக்கு அணிவிப்ப தற்காக 8 பவுன் நகையை வாங்கி பீரோவில் வைத்திருந்தனர். இந்த நிலையில் கடைசி மகளான அம்ரினுக்கு ஆதார் கார்டு எடுக்க நேற்று திருப்பத்தூர் தலைமை தபால் நிலையத்திற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகே உள்ள பாக்கெட்டில் வைத்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பக்கத்தில் இருந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே புகுந்தனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று நிச்சயதார்த்த செலவிற்காக பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணத்தை தேடும் போது பணம், நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் மர்ம கும்பல் கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு பியாரோ தகவல் தெரிவித்தார். திருப்பத்தூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    வீட்டின் சாவியை எடுத்து பீரோவை திறந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெகுநாட்களாக வீடு பூட்டி கிடப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம்-நகைகளை திருடி சென்றுள்ளனர்.
    • திருட்டு சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை பாரதி நகரை சேர்ந்தவர் நாக ராஜன்(வயது 66). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி அறிவை.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறிவை உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

    இதனால் வீட்டை பூட்டி விட்டு விருதுநகர் ஆஸ்பத்திரியில் மனைவியை சிகிச்சைக்காக சேர்த்தார். அவருடன் நாகராஜன் ஆஸ்பத்திரியில் தங்கி யிருந்தார். இந்த நிலையில் வீட்டின் முன்கதவு இரவில் திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் நாகராஜனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஊருக்கு திரும்பி வந்தார். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்தி ருந்த 21 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் திருடு போனது தெரிய வந்தது. வெகுநாட்களாக வீடு பூட்டி கிடப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம்-நகைகளை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் நாகராஜன் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வர வழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூட்டி கிடந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டெபாசிட் செய்த பணத்திற்கும் வாடிக்கையாளர்கள் எடுத்த பணத்திற்கும் இடையே அதிக அளவில் வித்தியாசம் இருந்தது.
    • வங்கி அதிகாரிகள் வைரா மற்றும் தல்லாட போலீசில் புகார் செய்தனர். போலீசார் கேமரா காட்சிகள் மூலம் கும்பலை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வைரா மற்றும் தள்ளாடார் மண்டலங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் கும்பல் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி நூதன முறையில் பணம் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    வைரா மண்டலத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் வங்கி ஊழியர் ஒருவர் பணத்தை டெபாசிட் செய்ய எந்திரத்தை திறந்து கணக்கு சரிபார்த்தார். அப்போது டெபாசிட் செய்த பணத்திற்கும் வாடிக்கையாளர்கள் எடுத்த பணத்திற்கும் இடையே அதிக அளவில் வித்தியாசம் இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் ஏ.டி.எம் கார்டை எந்திரத்தில் சொருகி நூதன முறையில் பணம் வரும் நேரத்தில் கார்டை வெளியே எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இவ்வாறு செய்வதன் மூலம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக கணக்கில் வரவில்லை.

    இந்த மாதம் 1-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணிக்குள் 17 ஏ டி எம் கார்டுகளை பயன்படுத்தி 30 தடவை ரூ 6.96 லட்சம் பணம் எடுத்து உள்ளனர். இந்த மோசடியில் 6 வாலிபர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இது குறித்து வங்கி அதிகாரிகள் வைரா மற்றும் தல்லாட போலீசில் புகார் செய்தனர். போலீசார் கேமரா காட்சிகள் மூலம் கும்பலை தேடி வருகின்றனர்.

    ×