search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mitchell Starc"

    விராட் கோலி தலைமையின் கீழ் விளையாடுவது அற்புதமானது என்று ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். #ViratKohli #Starc
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக பணியாற்றி வருகிறார். இவரது தலைமையில் மிட்செல் ஸ்டார்க் ஆர்சிபி அணிக்காக விளையாடியுள்ளார்.



    ‘‘ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையின் கீழ் விளையாடுவது அற்புதமானது. உண்மையிலேயே அவர் ஒரு அற்புதமான வீரர். ஆஸ்திரேலியா தொடரில் தற்போது விளையாடி வரும் ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தியா உச்ச நிலையை அடையும்’’ என்றார்.
    ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஃபிட் ஆக இருந்தால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருக்கும் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். #AUSvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் டெஸ்ட் தரவரிசையில் யாரும் தொட முடியாத அளவிற்கு அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை பிடித்தது.

    உள்ளூர் தொடர் முடிந்து தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்று விளையாட இருந்தது. அப்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மூன்று நாடுகளுக்கு எதிராக தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

    ஆனால் தென்ஆப்பிரிக்காவில் 1-2 எனவும், இங்கிலாந்தில் 1-4 எனவும் தொடரை இழந்தது. இன்னும் ஆஸ்திரேலியா தொடர் மட்டுமே பாக்கி உள்ளது. இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க இந்தியா விரும்புகிறது. இரண்டு தொடர்களை இழந்தாலும் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திலேயே நீடிக்கிறது.

    ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களில் குறைபாடுகளை நீக்காவிடில் அது சாத்தியமற்றது என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க விரும்புகிறது. ஆனால், இந்தியா பேட்டிங் குறைபாடுகளை முதலில் கழைய வேண்டும்.



    தலைசிறந்த வீரர்களான ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் கேள்விக்குறியே. ஆனால், பந்து வீச்சில் இன்னும் அதிக வலுவாகவே உள்ளது.

    மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் நன்றாக உடற்தகுதியுடன் இருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலான நேரமாக இருக்கும். இங்கிலாந்தில் காற்றில் பந்து மூவ் மற்றும் சீம் அவர்களுக்கு வழக்கமான பிரச்சனையை உண்டு பண்ணியது. ஆனால் ஆஸ்திரேலியாவில் எக்ஸ்ட்ரா பவுன்ட்ஸ் முக்கிய பிரச்சினையாக இருக்கும்’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் சர்வதேச போட்டிக்கு திரும்பியதும் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்று மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். #Smith
    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இவர் கடந்த 32 மாதமாக டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தில் இருந்தார்.

    கடந்த மார்ச் மாதம் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்டின்போது பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கினார். இந்த சம்பவத்தில் ஸ்மித்திற்கும், வார்னருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் தலா ஓராண்டு தடைவிதித்தது.

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட கோலி முதல் இன்னிங்சில் 149 ரன்களும், 2-வது இன்னிங்சில் 51 ரன்களும் அடித்தார். ஒரே டெஸ்டில் 200 ரன்கள் அடித்ததால் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்நிலையில் ஸ்மித் சர்வதேச போட்டிக்கு திரும்பிய பின்னர், மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்று சக வீரரும், வேகப்பந்து வீச்சாளரும் ஆன மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக ஸ்டீவ் ஸ்மித் எப்படி விளையாடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கடுமையாக விளையாடக் கூடியவர். மற்ற எந்த வீரரையும் விட அதிக பந்துகளை சந்திக்கக் கூடியவர். அவர் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கக் கூடியவர்.

    ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பி, அவர்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சதம் அடித்து உலக பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக விளங்குவார்கள். இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை’’ என்றார்.
    ×